Sunday, July 23, 2017

சிங்களத்து சின்ன மயில் ... இன்னும் பிற...




Image may contain: 1 person, smiling, close-upசர்வதேச சட்டப்படியே மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கின்றது : தமிழிசை


இப்படி சொல்லவேண்டியது இலங்கை அரசு, அதுதான் இப்படி உலகெல்லாம் சொல்லும், பாதிக்கபட்ட நாட்டின் தரப்பாக யாராவது இப்படி சொல்ல முடியுமா?


அம்மணி தான் தமிழகத்தில் இருப்பதை மறந்து, இந்தியர் என்பதை மறந்து ஏதோ மைத்திரிபாலா அரசின் உறுப்பினர் போல பேசி கொண்டிருக்கின்றார்.





இலங்கைக்கு சென்றுவந்தபின் அம்மணி இப்படி பட்டவர்த்தனமாக இலங்கை உறுப்பினராக பேசும் மர்மம் என்ன?

ஒருவேளை இலங்கை அரசியலில் சேரும் திட்டம் இருக்குமோ? அம்மணியில் அதிரடியில் அசந்துபோன சிங்களர்கள் இலங்கை அரசியலுக்கு அழைக்கின்றார்கள் போல

விரைவில் தமிழிசை தன் பெயரை "சிங்கள மொனறா" அதாவது "சிங்களத்து சின்ன மயில்" என மாற்றிகொண்டு கொழும்பில் செட்டில் ஆவார் போல தெரிகின்றது.
















 மாட்டுகறி விவகாரத்தில் ஏன் இந்த இரட்டை நாடக வித்தை?: மோடிக்கு கி.வீரமணி கேள்வி

மிஸ்டர் வீரமணி , உங்களின் பலதரபட்ட வேடங்களை விடவா மோடி நடித்துவிட்டார்?

ஒரு நாடகக்காரன் கண்ணுக்கு பார்ப்பவரெல்லாம் நாடகம் நடிப்பதாகவே தோன்றும் , தொழிலால் வந்த சிக்கல் இது.






 

கதிராமங்கலம் எரியும் நிலையிலும் கொஞ்சமும் யோசிக்காமல் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை பெட்ரோலியம் எடுக்க கையளிக்கின்றது மாநில அரசு


அதாவது நாங்கள் மத்திய அரசின் செருப்பு, ஆக தமிழகம் செருப்பால் அடித்தாலும் எங்களால் மத்திய அரசினை மீற முடியாது என சொல்லாமல் சொல்கின்றது மாநில அரசு.


இந்த அடிமை அரசையா மத்தியா அரசு கலைக்கபோகின்றது? இப்படி ஒரு அடியாள் கிடைப்பானா?




நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.






ரஜினி, கமலை அதிமுகவில் இணைய வேண்டும் : செல்லூர் ராஜூ


செல்லூர் ராஜூவா? அவர் இப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம், அவரது மூளை இப்படித்தான் சிந்திக்கும்.


நாங்கள் நடிக்கும் இந்த அரசாங்கத்தில் நீங்களும் வந்து நடியுங்கள் என அழைப்பு விடுக்கின்றார் செல்லூர் ராஜூ




பதிலுக்கு எங்களோடு சினிமாவில் காமெடியானாக நடிக்கின்றீர்களா? என கமலோ ரஜினியோ கேட்டால் நன்றாகத்தான் இருக்கும்.






இன்று ஆடி அம்மாவாசையாம் , எல்லோரும் அவரவர் முன்னோர்களுக்காக வேண்டிகொள்கின்றார்கள்.


நாமும் இத்தேசத்தின் வளமைக்கும், கவுரவத்திற்கும் , பெருமைக்கும் போராடிய எல்லா தேசமுன்னோர்களை நினைத்து கொள்ளலாம்


அப்துல் கலாம் வரை இந்நாட்டிற்காகவே வாழ்ந்த எல்லோரும் இந்நாட்டின் முன்னோர்களே, அவர்களை நினைத்துகொள்ளலாம்








 ஜெருசலேமில் பதற்றமான சூழல் : ஐ.நா சபையின் அவசர கூட்டம் கூடுகின்றது

இதுதான் ஜெருசலேம், உலகில் எத்தனை கொடுமைகள் நடக்கின்றன, திபெத்தில் சீன அட்டகாசம், டினான்மென் ஸ்குவர் படுகொலை முதல் முள்ளிவாய்க்கால் வரை எத்தனை கொடூரம்

ஆனால் அவற்றிற்கெல்லாம் கூடாத ஐ.நா சபை, ஜெருசலேமிற்கு அலறி அடித்து கூடுகின்றதல்லவா? இதன் பெயர்தான் மேற்குலகம்.




 




No comments:

Post a Comment