Saturday, July 22, 2017

முன்னாள் ஐ.ஜி அருளின் மகன் ...




Image may contain: 1 personமுன்னாள் ஐ.ஜி அருளின் மகன் தன் குடும்ப சொத்தினை முக குறைந்த விலைக்கு விற்றுவிட்டாராம், அரசு நிர்ணயித்த சொத்து மதிப்பிற்கு விற்கவில்லையாம், அதனால் பிடித்து விசாரிக்கின்றார்களாம்


ஐ.ஜி அருள் பிற்படுத்தபட்டவர், ஆனால் 1940 வெள்ளையன் ஆட்சியிலே ஐ.பி.எஸ் ஆனவர். அது எப்படி பிராமண ஆதிக்கம் நிறைந்த காலத்திலே பிற்படுத்தபட்ட சூத்திரன் ஐபிஎஸ் ஆனார் என கேட்க கூடாது, பெரியாரும் கலைஞரின் போராட்டங்களுக்கு முன்பே பன்னீர் செல்வம், இந்த அருள் போன்ற பிற்படுத்தபட்டவர்கள் உயர இருந்தார்கள்


அதாவது விளக்கு எங்கிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும், முத்துராமலிங்கம் படத்தில் நெப்போலியன் சொன்ன புகழ்மிக்க தத்துவமான "வல்லவன் பம்பரம் மணலிலும் சுற்றும்", (கதாநாயகி தொப்புளில் மட்டும் அல்ல என நாமாக நினைத்துகொள்ளவேண்டும்)





நிச்சயமாக நெப்போலியன் அந்த டயலாக்கினை பேசும்பொழுது வை.கோ கேட்டிருந்தால் மறுபடி புழல் சிறைக்கே சென்றிருப்பார்

விஷயத்திற்கு வரலாம்

அரசு நிர்ணயித்த விலையினை விட எப்படி குறைத்து விற்கலாம், அப்படியானால் கள்ளபணம் விளையாடுகின்றதா என விசாரிக்கின்றார்கள்

இது காலம் காலமாக தமிழகத்தில் நடக்கும் விஷயம், எந்த சொத்தில் முழு பணம் காட்டுவார்கள்? எந்த நடிகன் முழு சம்பள விவரம் சொல்வான்? எந்த வியாபாரி மொத்த கணக்கினை உருப்படியாக காட்டுவான்?

எல்லாம் வெள்ளை பாதி, கருப்பு பாதி என இயங்கும் நாடு இது, சொத்து விற்றவர்களுக்கும் வாங்கியவர்களுக்கும் இதில் அனுபவம் இருக்கும், அப்படித்தான்

அரசு குறிப்பிட்ட தொகையினை எழுதுவார்கள், மற்றபடி அதற்கும் சொத்தை விற்றவர் வாங்கிய தொகைக்கும் சம்பந்தமே இருக்காது, பெரும் வித்தியாசம் இருக்கும்

சொத்தின் உண்மையான கணக்குபடி பணபரிமாற்றம் நிகழ்ந்தால் இங்கு ரியல் எஸ்டேட் இப்படி வளராது, அரசாங்கமும் இப்படி கடனில் தத்தளிக்காது.

கட்சிக்காரர்களும் இப்படி தேர்தலில் அள்ளிவிட முடியாது, அதில் மறைக்கபடும் பணங்கள் ஏராளம், அந்த பணம் தான் தேர்தல் காலத்தில் அள்ளிவிடபடுகின்றன. இதில் மர்மம் ஏதுமில்லை

இப்பொழுது இந்த அருளின் மகனை மட்டும் ஏன் தூக்குகின்றார்கள்?

யாருக்கோ செக் வைக்கின்றார்கள், அது அவர்களுக்கே புரியும்.

இந்நாட்டில் சில கொலை வழக்குகள்தா மர்மமாகும் , சில விசாரணை கமிஷன் தான் மர்மமாகும் என்றில்லை, இந்த வருமானவரி சோதனை முடிவுகளும் எந்நாளும் மர்மமமே

அப்படியாக இந்த அருளின் மகனை குறிவைத்திருக்கின்றார்கள் , அருள் யார்?

வெள்ளையன் ஆட்சியில் பதவிக்கு வந்து காமராஜ் காலத்தில் ஐஜியாக இருந்தவர், அவர் நாடார் ஜாதி என்பதால் காமராஜர் அருகில் இருத்தினார்ர் என்றெல்லாம் சர்ச்சை இருந்தது,

என் அமைச்சரவையில் தாழ்த்தபட்டவர்களை வைத்தது போலத்தான், காவல்துறையிலும் பிற்படுத்தபட்டவர்களை வைத்திருக்கின்றேன் என மவுனமாக சொன்னார் காமராஜர்

சில சர்ச்சையான துப்பாக்கி சூடுகள் காலத்தில் ஐஜியாக இருந்தது இந்த அருள்தான் என்பது இன்னொரு விஷயம்.

அருளை பற்றி சுவாரஸ்ய தகவல் உண்டு , காமராஜர் தோற்கும் பொழுது, தேர்தல் முடிவினை இவரிடம் தான் முதலில் கேட்டார்,

ஆம், அடுத்தது நிச்சயம் நமது ஆட்சிதான் என சொல்லிகொண்டே அண்ணாதுரை வீட்டுக்கு விரைந்துகொண்டிருந்தாராம் அருள்"













 


 

No comments:

Post a Comment