Sunday, July 30, 2017

பாகிஸ்தானில் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை ...





images.jpgபாகிஸ்தானுக்கு ஒரு ராசி என்னவென்றால் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை, முடிக்கும்முன் ஒன்று ராணுவம் விரட்டிவிடும் அல்லது ஏதாவது வழக்கில் சிக்கி அவர்களே சென்றுவிடுவார்கள்


இதுதான் கடந்த 70 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சி அங்கு, அவர்கள் சாபம் அப்படி


இப்பொழுது அந்த சாபம் நவாஸ் ஷெரீப்பிற்கும் வந்துவிட்டது, மனிதருக்கு நமது பன்னீர்செல்வம் ராசி போல, முன்பு இருந்தபொழுது அங்குள்ள தினகரன் முஷாராப்பால் விரட்டபட்டார், பின் முஷாரப் என்னமோ ஆகி இப்பொழுதுதான் வந்திருக்கின்றார்





சிக்கல் என்னவென்றால் நாவசும் அவர் மகளும் பனாமா வங்கியில் ஊழல் பணம் சேர்த்திருப்பதாக செய்தி, அதில் நமது ஊர் அமிதாப், ஐஸ்வர்யா ராய் பெயரெல்லாம் உண்டு, அவர்கள் தேசபோராளிகள் என்பதால் இந்திய அரசு கண்டுகொளவில்லை

நவாசும் தான் நிரபராதி என மகள் மூலமாக சில ஆவணங்களை தாக்கல் செய்தார், அதில்தான் சிக்கினார்

அதாவது 2007ல் கணிணிக்கு அறிமுகமான சில எழுத்துருக்களை பயன்படுத்தி இது 2002ல் நான் தாயரித்த ஆணவம் என சமர்பித்திருந்தார்

எவனோ நல்ல வக்கீல் குறிவைத்து அடித்துவிட்டான், கனம் கோட்டார் அவர்களே இந்த எழுத்துருவே 2007ல்தான் வந்தது, வேண்டுமானால் பில்கேட்ஸை கேளுங்கள், இந்த குற்றவாளி நேற்று டைப் செய்துவிட்டு 2002 ஆவணம் என கதை விடுகின்றார், தட்ஸ் ஆல் மை லார்ட் என முடித்துவிட்டார்

ஆத்திரமடைந்த நீதிமன்றம் நவாஸை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டது

இப்படியுமா வழக்காடுவார்கள்? என அதிர்ந்து நிற்கின்றார் நவாஸ்

நவாஸ் இப்பொழுது இப்படி யோசிக்கலாம், "சே.. எத்தனை தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவவிட்டோம், ஒருவனையாவது பரப்பான அக்ரகார சிறையில் ஊடுருவ விட்டோமா??

அப்படி ஊடுருவ விட்டிருந்தால் இந்த வழக்கினை 18 வருடம் இழுத்து, 5 வருடம் பாகிஸ்தானை ஆண்ட முதல் பிரதமர் என்ற பட்டம் எனக்கு கிடைத்திருக்குமே?"

இனி என்ன ஆகபோகின்றது, பாகிஸ்தானும் ஊழல்நாடு நிச்சயம் ஊழல் நடக்கும், எந்நாளும் நடக்கும்

என்னதான் எதிரி நாடென்றாலும் இனி சிக்கிகொள்ளாமல் வழக்கு நடத்துவது எப்படி என இந்தியாவினை பார்த்துத்தான் அவர்கள் கற்றுகொள்ளவேண்டும்.




 

 



 

No comments:

Post a Comment