Sunday, July 23, 2017

ராதிகா Come On...





சிஏஜி அறிக்கை ராணுவத்தின் வெடிபொருள் யுத்தம் என வந்தால் 10 நாள் தாங்காது என சொல்லிவிட்டதாம், இது ஒரு வருடம் முன்பே வந்த செய்தி, இப்பொழுது அடுத்த ரவுண்ட்


ஒவ்வொரு ராணுவமும் தன் ரகசியங்களை வெளியிடாது, இதோ வெடிபொருள் பற்றாகுறை எனும் தலைவரிடம் சரி எத்தனை அணுகுண்டுகள் தயாராக இருக்கின்றன?, எத்தனை ஏவுகனை வெகு சிறப்பான தயார் நிலையில் உள்ளது என கேளுங்கள் சொல்லமாட்டார்கள்.


இவை எல்லாம் வேறுவிதமான செய்திகள், அவ்வளவு பெரும் சிக்கல் இல்லை, சிக்கல் இருந்தால் தேசமே இல்லை





ஆனால் அதனை விட மிக முக்கியமான விஷயம், பீரங்கிகளில் சீன பொருள் பொருத்தபட்ட விவகாரம்

அதாவது இந்திய பீரங்கிகளில் சில ஸ்பேர்பார்ட்ஸ்களுக்கு ஒரு கம்பெனியினை அணுகியிருக்கின்றார்கள், அவர்கள் விலை மலிவானதென்று சீன கம்பெனியின் பொருளை வாங்கி மாட்டியிருக்கின்றார்கள், ஆனால் கம்பெனி முத்திரை மேட் இன் ஜெர்மனி என்றிருக்கின்றதாம்

இதுதன் இப்பொழுது பிரச்சினை, இதுதான் முறைகேடு என விசாரிக்கின்றார்கள்

அமெரிக்க, பிரான்ஸ், ரஷ்ய, இஸ்ரேலிய என உலகெல்லாம் இருந்து ஆயுதங்களை வாங்கியவர்கள் நாம், அதில் சீன ஸ்பேர்பார்ட்சும் இருக்கின்றது, அவ்வளவுதான் ஆனால் தரம் இருக்குமா என்பதில் சந்தேகம்

அதில் இப்பொழுது விசாரணை, நாமாவது பரவாயில்லை சீன ஸ்பேர்பார்ட்ஸ்தான் பொருத்தினோம், பாகிஸ்தான் சீன பீரங்கியே வைத்திருக்கின்றது, பரிதாபம்

விசாரணை நடக்கின்றது பார்க்கலாம், இந்திய அரசியலுக்கு அப்படி பீரங்கியுடன் என்ன பிரச்சினையோ? அன்றே பாபர் பீரங்கியினை முதன் முதலில் இந்தியா கொண்டுவந்து வென்று மசூதி கட்டி இன்றுவரை சர்ச்சை

அதன் பின் ராஜிவ் போபர்ஸ் பீரங்கியில் சிக்கி செத்தே போனார், அவர் கொலையில் இந்த மர்மமும் உண்டு

இப்பொழுது அடுத்த ரவுண்ட் பீரங்கி பிரச்சினை வருகின்றது, இன்னும் அதிகமாக விஷயங்களை தேடலாம், நாட்டின் பீரங்கி நிலவரத்தை அறியலாம் என்றால் ஜெயா டிவிக்கு பொறுக்கவில்லை

ஆம் வருஷம் 16 எனும் படத்தை ஓடவிட்டு நம் தேசபக்தியினை கொஞ்ச நேரம் ஒத்திவைத்துவிட்டது, , அது சமூகத்தினை திசைதிருப்புவது இப்படித்தான்

குஷ்பூவின் மிக சிறந்த படம் ஓடும்பொழுது ஆண்டவனே வந்தாலும் ஒரு ஒரு மணிநேரம் கழித்து வரமுடியுமா என கேடபவர்கள் நாம், விடுவோமா?

ராதிகாவாக குஷ்பூ வந்துவிட்டார், இனி நாம் நம் உலகத்தில் நுழையலாம், அணுகுண்டு விழுந்தாலும் அசைவதாக இல்லை

ராதிகா Come On...




 

 



 

No comments:

Post a Comment