Thursday, July 27, 2017

இந்த காயத்திரி என்பதன் பொருள் என்ன?



Image may contain: 1 person, smiling


"யுரேகா யுரேகா" என ஆர்கிமிடீஸாக அலைகின்றார் நண்பர் Omm Prakash , அவரின் அதிமகிழ்ச்சிக்கு காரணம் 


" ஹெலன்" எனும் கிரேக்க பெயரின் தமிழாக்கம் கண்டுபிடித்துவிட்டாராம்


"ஹெலன்" என்பது கிரேக்க அழகு தேவதையின் பெயராம், தமிழில் "அதியசய ஒளி வடிவம்", "போரோளி வடிவம்", "ஓளி ஓவியம்" என வருமாம், அதாவது "ஒளி ஓவியா", சுருக்கமாக ஓவியா


இப்படி நேரடி அர்த்தமே இருக்கின்றது என துள்ளி குதிக்கின்றார், இனி எவனும் அவரிடம் "ஹெலன்" என சொல்லமுடியாது, அவர்வேறு தமிழ் உணர்வாளர் என்பதால் இனி ஓவியா மட்டும்தான்


"சரியய்யா, இந்த காயத்திரி என்பதன் பொருள் என்ன?" என கேட்டால்


"அண்ணே காயம் என்றால் உடல், திரி என்றால் மூன்று, ஆக மூன்று உடல் என்று பொருளாம் , ரொம்ப சரியான பெயர்தாண்ணே" என்றார்


"எப்படி?" என்றேன்


"சூது, சூழ்ச்சி, சூத்திரவெறுப்பு என மூன்றும் சேர்ந்தது, அது சூதிரி என்றுதான் அழைக்கபட்டிருக்கவேண்டும், எப்படியோ காயத்திரி ஆயிற்று""


"போய்யா, அவளுக 2 பேரும் கட்டிபிடிச்சி அழுகுறாளாம், இதெல்லாம் நடிப்பு, நீர் வேறுவேலை பாரும்" என சொல்லியாயிற்று


"அண்ணே, எங்க‌ செல்லம் பச்ச மண்ணுண்ணே, யாரும் சிரிச்சா சிரிக்கும்ணே, யாரும் அழுதா அதுவும் அழும்ணே, ஆனா இந்த சண்டாளி ஏதோ பிளான் பண்றாண்ணே, கொஞ்சம் செல்லத்துகிட்ட சொல்லி வைக்கணும்ணே


எப்படி சொல்வீர்?


அதாண்ணே தெரியல, எங்க பார்த்தாலும் கேமராவா இருக்கு, அந்த குடும்பத்துகிட்டதான் ஐடியா கேக்கணும், சிசிடிவி கேமராவ அடக்குற விஷயம் எல்லாம் அவங்கதான் எக்ஸ்பெர்ட்


ஓஓ அப்படியா


ஆமா, ஜூலிய விரட்டணும்னு சொல்லி கேக்கலாம்ணு இருக்கேன், அப்பதான் உடனே ஐடியா தருவாங்க..


சூப்பர்...


எப்படியாவது செல்லத்த எச்சரிக்கணும்ணேன், இல்லண்ணா அந்த காயத்திரி எப்படியாவது ஏமாத்தி தொலைச்சிரும்ணே..அப்படி ஏமாத்தி செல்லத்தை வெளியே அனுப்பிட்டா அப்புறம் நாங்கெல்லாம் உயிரோட இருக்கிறதில என்னண்ணே அர்த்தம்? விடமாட்டோம்ணே.."













 




 


No comments:

Post a Comment