Tuesday, July 25, 2017

மிஸ்டர் நித்தி, எங்களுக்கு ஒரே சந்தேகம் தான் ...




Image may contain: 1 person, smiling, close-upமிக சரியான சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் திட்டத்தில் இறங்கியிருகின்றார் நித்தியானந்தா சுவாமிகள்


அதாவது அன்னார் சுவாமியாகி மந்தகாச புன்னகையோடு அருளாசி வழங்கி, நடிகை ரஞ்சிதாவிற்கு தனியறையில் ஆசிவழங்கியது வரை எல்லோரும் அறிந்தது


அதன்பின்னும் மதுரை ஆதீனத்தோடு சேர்ந்து அவர் செய்த சேட்டையும், பின் ஆதீனம் ஜெயாவிடம் அடைக்கலமாகி தன்னை காப்பாற்றியதும், பின் சில வழக்குகளில் நித்தி போட்டு சாத்தபட்டதும் நடந்தது





சுத்தமாக பெயர் கெட்டாலும் நித்தி ஓயவில்லை, அவர் சாமியார் என்றால் அத்தோடு ஒதுங்கியிருப்பார், அவர் வியாபாரி அல்லவா? காத்திருந்தார்

இப்பொழுது திராவிட கழக அழிச்சாட்டியம் பன்றி பின்னால் அலையும்படி பரிதாபம் ஆயிற்று. முன்பு தெய்வங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இன்று பன்றிபின்னால் செல்கின்றார்கள்

அதாவது பன்றிக்கு பூனூல், பன்றிக்கு அபிஷேகம் என அவர்கள் பன்றி பாலோவேர்ஸ் ஆகிவிட்டார்கள்

இதில்தான் நித்திசாமி குதிக்கின்றார்

இந்துக்களை அவமானபடுத்தினால் பன்றிக்கு நான் கருப்புசட்டை போடுவேன் என மந்தகாச புன்னகையோடு வருகின்றார் நித்தி

இவருக்கு இப்பொழுது இந்துக்களிடம் ஆதரவு கிடைப்பதுதான் ஆச்சரியம், நித்திக்கு ஏக மகிழ்ச்சி

நரியினை கண்டிக்க புலியிடம் மாட்டுகின்றோம் என இந்து சகோதர்களும் நினைக்கவில்லை என்பது இன்னொரு விஷயம், நித்திக்கு கடும் உற்சாகம்

மிஸ்டர் நித்தி, எங்களுக்கு ஒரே சந்தேகம் தான்

பன்றி ஏற்கனவே கருப்பு, அதற்கு ஏன் கருப்பு சட்டை?













 


 

No comments:

Post a Comment