Monday, July 17, 2017

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை





Image may contain: 2 people, people standing and outdoorஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை

அதியமானை பல மன்னர்கள் அடிக்க கிளம்பும்பொழுது ஓளவையார்தான் தூது சென்று காத்தாராம், அப்படி இந்த வீக்பாடி அரசினை இன்னும் விட்டுவைத்திருக்கும் கவர்ணர் மாளிகையில் அவ்வையாரின் சிலையினை சரியான நேரத்தில் வைத்திருக்கலாம்


அதனை விட இன்னொரு கோணம் முக்கியமானது





"குடி உயர கோன் உயரும்" என சொன்னவர் அல்லவா?

குடியில்தானே தமிழக அரசு ஓடிகொண்டிருக்கின்றது, அவ்வையார் மக்கள் என சொன்ன குடியினை, இவர்கள் டாஸ்மாக் குடியாக எண்ணி, "அன்றே சொன்னார் அவ்வை" என சிலை திறந்தாலும் திறந்திருக்கலாம்

இரண்டாவது காரணத்திற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது, சிலைக்கு கீழ் "குடியுயர கோன் உயரும்" என்ற வசனம் வைத்தார்களோ என்னமோ தெரியவில்லை













 


No comments:

Post a Comment