Tuesday, May 30, 2017

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு : மீட்புபணிகளில் பல நாடுகள் களமிறங்கியிருக்கின்றன‌

இலங்கை நல்ல மழைபொழியும் நாடுதான், ஆனால் சிக்கல் மழையில் மட்டும் அல்ல என்கின்றார்கள்

ஏகபட்ட ஆக்கிரமிப்புகளும், முறையில்லாமல் கட்டபட்ட கட்டிடங்களும், ஆபத்தான இடங்களில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டங்களே பெரும் ஆபத்தினை கொண்டு வந்திருகின்றது என்கின்றன செய்திகள்


பொதுவாக வெள்ளையன் ஆண்ட நாடுகளில் எல்லாம் நல்ல சட்டதிட்டங்களும் வழிகாட்டலும் உண்டு, மலேயா சிங்கப்பூர் போன்றவை இன்றும் அதனை பின்பற்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன‌

நமக்கும் அருமையான சட்டங்களையும், மக்கள் இடைஞ்சலில்லாமல் வாழும் சட்ட திட்டங்களையும் தான் வெள்ளையன் கொடுத்திருந்தான், பஸ் நிலையம் ரயில் நிலையம் வரை அக்காலத்தில் இந்தியரும் சட்டத்திற்குட்பட்டுதான் நடந்திருக்கின்றார்கள்

நம் காந்தி சட்டத்தை மீறுவோம் என அழைத்தார் அல்லவா? அப்பொழுது சட்டத்தை மீறி ஆட்சிக்கு தொல்லை கொடுக்க தொடங்கியவர்கள் நாம், இன்னும் செய்து கொண்டே இருக்கின்றோம்

சுதந்திரம் பெற்றதெல்லாம் நமக்கு தெரியவே இல்லை, சட்டத்தை மீற காந்தி சொன்னார், செய்கின்றோம், இனி அவர் வந்து சொல்லும் வரை மீறுவோம்

இலங்கைக்கும் நல்வாழ்வு வெள்ளையன் கொடுத்திருந்தான், ஆனால் சிங்கள புத்தவாதமும் போதாகுறைக்கு பெரும் போரும் அந்நாட்டை சிக்கலில் தள்ளின‌

ஹாங்காங் அளவிற்கு வளர்ந்திருக்க வேண்டிய இலங்கை தீவு நாசமானது, லஞ்சமும் ஊழலும் அதிகரித்து எல்லாமே சட்டத்திற்கு புறம்பாய் நடந்து, இன்று கட்டங்கள் இடிந்து சாவும் அதிகரித்திருத்திருக்கின்றது

லஞ்சமும் ஊழலும் அதிகரிக்கும் நாட்டில் கண்ட இடங்களில் கட்டடம் கட்டபடும், என்றாவது ஒரு நாள் அது பெரும் அழிவிற்கு காரணமாயிருக்கும் என்பதை இலங்கை மழை வெள்ளம் உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

ஆண் தெருவில் விழுந்தால் கைதூக்கிவிட ஆளிருக்காது, ஆனால் சொப்பன சுந்தரிக்கு சுளுக்கு என்றால் கூட ஆண் வர்க்கமே பொங்கும் அல்லவா?

அப்படி இலங்கை பல நாடுகளுக்கு சொப்பன சுந்தரி, அதன் அமைவிடம் அப்படி

அதனால் உலகநாடுகள் ஆளாளுக்கு ஓடிப்போய் விழுந்து விழுந்து உதவி கொண்டிருக்கின்றார்கள்..

No comments:

Post a Comment