Monday, May 29, 2017

வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும்

ஓரிடத்தில் வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும்


அது நடப்பட்ட வயலிலே அந்த மண்ணின் பயிராகவே வளர்ந்து பலனளிக்கும், அதன் பலனை பார்க்க வேண்டுமே தவிர அதன் மூலத்தை பார்ப்பது தவறு, இது என் வீட்டு நாற்றல்ல என சொல்பவன் பைத்தியக்காரன்.


எங்கோ பிறக்கும் நைல் நதி எகிப்தினைத்தான் வாழ வைக்கின்றது, எங்கோ பிறந்த நதி என எகிப்தியர் தள்ளவில்லை தள்ளவும் முடியாது





நைல் என்றல்ல எல்லா ஆறுகளும் அப்படியே, காவேரி கூட‌

நதிமூலமும் அப்படியே, எங்கோ பிறந்த நதி பல எல்லைகளை கடந்து இன்னொரு நாட்டை செழிக்க வைக்கும், பிறந்த இடத்திலே நின்றுவிட்டால் அது ஒரு பலனும் கொடுக்க முடியாது

இது இயற்கை தத்துவம்...

அப்படித்தான் எங்கோ பிறந்தவர் இன்னொரு தேசத்தில் கலந்து வளர்ந்து பலனளிப்பார்கள் , ரஜினி அந்த வகை. அவரை சாடுவதில் அர்த்தமே இல்லை

ரஜினி நிச்சயம் இந்த மண்ணோடு கலந்தவர், எங்கோ முளைத்த நாற்றாக இம்மண்ணில் நடபட்டும் நம்மோடு வளர்ந்தவர், அவரை எப்படி புறந்தள்ள முடியும்

ரஜினி தமிழரே...

அப்படியே குஷ்பூவும் தமிழச்சியே...





கலைஞர் வைரவிழா அரசியலில் எந்த திருப்புமுனையும் ஏற்படுத்த போவதில்லை: தமிழிசை செளந்தர்ராஜன்


குமரி அனந்தனுக்கு ஒரு தங்க விழா எடுத்துவிடலாமா? இல்லை இவருக்கு ஒரு கவரிங் விழா எடுப்போமா? என்ன திருப்பம் நடந்துவிடும் என பார்க்கலாம்


இவர் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியது கலைஞர், அப்படி பெரும் கோபமும், ஆற்றாமையும் வரவேண்டுமானால் அது அந்த சவுந்திர ராஜனுக்குத்தான் வரவேண்டும், தமிழகம் அவரைத்தான் பரிதாபமாக பார்க்கின்றது




பின் தமிழிசை ஏன் கலைஞர் என்றால் கத்துகின்றார்???







 

No comments:

Post a Comment