Tuesday, May 30, 2017

ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது




Image may contain: 1 person, sitting and babyஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது என்கின்றது வெளிநாட்டு செய்தி, அது மருந்து இல்லா கொடூர நோய்..


இப்பொழுது இந்தியாவில் ஜிகா விஸ்வரூபமெடுக்கின்றது, ஆனால் அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை


குஜராத்திலும் வட இந்தியாவிலும் பிறந்த குழந்தைகள் ஜிகா நோயால் பாதிக்கபட்டிருப்பது உறுதி செய்யபட்டிருக்கின்றது





தொடக்கத்திலே கண்டறியபட்டும் அரசின் அஜாக்கிரதையோ அல்லது மறைத்துவிட்ட கொடுமையோ நடந்திருக்கின்றது, உங்கள் நாட்டில் இந்த நோய் இருந்தும் ஏன் அறிவிக்கவில்லை என இந்தியாவோடு உறவாடும் நாடுகள் கேட்கின்றன‌

அதாவது இங்கு ஜிகா வைரஸ் இருப்பது தெரிந்தால், அந்நாட்டு மக்களை அவர்கள் எச்சரிக்கை செய்யவேண்டுமல்லவா? அதற்காக‌

இந்திய அரசு இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியில் என்னமோ சொல்லிவிட்டு நழுவியது

சர்வதேச விவகாரமாக இந்த பிரச்சினை உருவெடுக்கின்றது, இந்தியாவிற்கு தலைகுனிவு

இந்நிலையில் மாட்டுகறி சர்ச்சை ஏன் கிளம்பியது என்ற சிந்தனை இப்பொழுது உங்களுக்கு வரகூடாது, ஆம் வரவே கூடாது, அதெல்லாம் பசுவினை காக்கும் நடவடிக்கை

ஜிகா வைரஸ் கொடூரமமானது, பரவுகின்றது ஆனால் அரசு என்ன திட்டம் வைத்திருக்கின்றது என்றே தெரியவில்லை, ஒருவிதமான பரிதாப நிலை இது

மருந்து கண்டிபிடிக்காத , பிஞ்சுகளை, கருக்களை அழித்துவிட கூடிய ஒரு பெரும் நோய் பரவிகொண்டிருக்கும் வேளையில் இத்தேசம் மாட்டை கட்டி அழுகின்றது

அப்படி எந்த மாடு பாராளுமன்றத்து ஆராய்ச்சி மணியினை அடித்தது எனவும் தெரியவில்லை

ஆனால் வெளிநாடுகள் அபாய மணி அடிக்கின்றன, பொறுப்பில்லா இந்திய அரசு எனும் அளவிற்கு சில கருத்துக்கள் வருகின்றன‌

பிரதமர் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார், ஜிகா வைரஸ் பறக்குமா?

இது தாக்கினால் சிலருக்கு மரணம், கர்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் மண்டையோடு பாதிக்கபட்டு, மூளை பாதிக்கபட்டு அகோரமாக குழந்தை பிறக்கும், அது வாழ்வதும் சந்தேகம்...

தலையினை குறிவைத்து தாக்கும் வைரஸ் இது

வட இந்தியாவில் இப்பொழுது இந்நோய் பரவுகின்றதாம், தெற்கே இன்னும் நிலை தெரியவில்லை, தமிழகத்தில் சும்மாவே அமைச்சர் வரை மூளை காலி, இதில் சிகா வந்து அவர்களை என்ன செய்ய??

இந்நோய் கருவுற்ற பெண்ணின் சிசுக்களையே பெரிதும் பாதிக்கும் என்பதால், இந்திய கர்பிணிகள் பரந்தாமன் கண்ணனை வேண்டிகொள்வது நல்லது

அவர்தான் பாரதபோரில் அர்ஜூனன் மனைவி வயிற்றின் சிசுவினை காப்பாற்றினாராம்













 










 








No comments:

Post a Comment