Tuesday, May 23, 2017

2009 யுத்ததில் திமுக ஏன் புலிகளுக்கு உதவவில்லை?

2009 யுத்ததில்  திமுக ஏன் புலிகளுக்கு உதவவில்லை என்பதை இப்படித்தான் சொல்லமுடியும்


புலிகளை நம்பி 1980களில் ஆதரித்தோம் அவர்களின் சுயரூபம் தெரிந்து ஒதுங்கிகொண்டோம் என்பது திமுகவின் வாதமாக இருக்கலாம், அது உண்மையும் கூட‌


அப்படி அல்ல, அன்றே நாங்கள் எதற்கும் துணிந்தவர்கள் என கலைஞருக்கு தெரியாதா? நாங்கள் பத்மநாபாவினை கொல்லும்போது துணையிருந்தவர் ராஜிவினை கொன்றபின்னும் துணை இருந்திருக்கத்தான் வேண்டும் அதுதான் உண்மையான தமிழின பற்று




ஈழபுலிகளுக்காக கலைஞர் டெல்லியினை எதிர்த்து கலகம் செய்திருக்க வேண்டும், தமிழன் நாட்டை அழித்த ராஜிவினை கொல்லத்தான் வேண்டும், இந்தியா தமிழர்களின் எதிரி என கலைஞர் சொல்லியிருக்கத்தான் வேண்டும் , அவரை அவ்வளவு நம்பினோம்,


அவர் எங்களில் ஒருவர், தமிழகத்தையே சுடுகாடு ஆக்கி அவர் ஈழபோரை நிறுத்தி புலிகளை காத்திருக்க வேண்டும் என்பது இந்த பக்கம் உள்ள ஆதங்கம்


அதாவது ஆதங்கம் என சொல்லி கலைஞரை சிக்கலில் விடுவது, அதுதான்


உண்மை என்ன?


தனி திராவிட நாடு பேசிய திமுகவின் கொள்கைகளை மாற்றித்தான் அண்ணா இந்திய நீரோட்டத்தில் கலந்தார், அதன்பின்புதான் திமுக ஆட்சிக்கு வந்தது


பின் ஈழபிரச்சினையில் கண்மூடிதனமான அபிமானத்தை பொழிந்து மறுபடியும் அதுபிரிவினை வாத, தேசவிரோத கட்சி எனும் அடையாளத்தை பெற்றது


1991ல் திமுக அடைந்த படுதோல்விக்கு அதுதான் காரணம், மொத்த தமிழகமும் புலிகளை ஆதரித்து பிரிவினை வாதத்திற்கு ஆதரவானது என்றால் கலைஞர் ஏன் தோற்க போகின்றார்?


பிரிவினை வாத திமுகவினை தமிழகத்தில் யாரும் ஏற்கமாட்டார்கள், இந்திய தேசியத்தை தமிழர்கள் ஒருபோதும் விட்டு கொடுக்கமாட்டார்கள் என்பதை அனுபவ பூர்வமாக கண்டவர்


அது திண்ணையில் படுத்து தனிநாடு கேட்டகாலங்களிலே அவருக்கு புரிந்தது, அப்படி தேசியத்திற்கு திரும்பியபின்புதான் வெற்றி கிடைத்தது


புலிவால் பிடித்து கொஞ்சம் தடுமாறியபொழுது மொத்தமாக தலையில் விடிந்தது, புலிகளை நம்பிய பாவத்திற்காக பழி சுமந்தவர் கலைஞர், அதற்கு மேலும் புலிவால் பிடித்தால் திமுக 1962க்கு முன் இருந்த பிரிவினைவாத வகைக்கு செல்ல வேண்டும்


அன்று அண்ணா எப்படி திமுகவினை அந்த பிரிவினை வாத அடையாளத்திலிருந்து காத்தாரோ, அப்படித்தான் 1991க்கு பின் கலைஞர் திமுக தேசவிரோத கட்சி எனும் அடையாளம் சேர்விடாமல் காத்தார்


2009ல் அதுதான் தெரிந்தது, இந்த நாட்டிற்கு எதிராக செல்ல கலைஞர் மறுத்தார், திமுகவின் நீண்டகால பயணத்திற்கு அதுதான் மிகசரியானது


ஏன் இந்த மதிமுக, நாம் தமிழர் எல்லாம் பிரபாகரன் படத்தினை வைத்து அரசியல் செய்யவில்லையா? கலைஞரும் அப்படி செய்தால் என்ன? என சிலர் கேட்கலாம்


அவர்களை கட்சிகளாக யார் மதித்தார்கள்? யானைக்கு தன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கவனம் தேவை


புற்றீசலுக்கு என்ன வந்தது? ஒருநாள் மட்டும் பறந்து வாழ்வினை முடிப்பதில் என்ன கவனம்? என்ன பொறுப்பு?


திமுக நிலைக்க என்ன செய்யவேண்டுமோ அதனை கலைஞர் செய்தார், வரலாறு அதனைத்தான் இன்னொரு காலத்தில் சொல்லும்


அதனால்தான் கடந்த தேர்தலில் கடைசி தோல்வியினையும் திமுக மிக கவுரமாக பெற்றது


ஆம் அதுதான் கடைசி தோல்வி, இனி தோல்வி என்பது திமுகவினை நெருங்க முடியாது..


அண்ணா 1962ல் செய்ததைத்தான் கலைஞர் 2009லும் செய்தார்...


தமிழகம் எதனையும் ஏற்றுகொள்ளும், ஆனால் பிரிவினைவாதத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ளாது என்பதே நித்திய கால‌ உண்மை






கொசுறு


சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஒபிஎஸ் அணியின் கோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகர் கருணாஸ்


மிஸ்டர் கருணாஸ், உங்கள் முக்குலத்தோர் புலிப்படை கட்சியிலிருந்தே உங்களை நீக்கியாயிற்றமே, இதில் நீங்கள் ஏன் இன்னொரு கட்சி விவகாரத்தில் கத்திகொண்டிருக்கின்றீர்கள்


எம்.எல்.ஏ ஆனாலும் அதே காமெடி செய்கின்றார் கருணாஸ்.








No comments:

Post a Comment