Friday, May 26, 2017

பன்மொழி புலவர் க.அப்பாத்துரை



Image may contain: 1 person, text


கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு பாடுபட்டது பலர், ஏராளமானோர் உண்டு மறைமலை அடிகள், உ.வேசா என வரிசை பெரிது


தமிழனின் ஆராய்ச்சிக்கும் பாடுபட்டவர் பலர், தமிழனின் பழமை என்ன? மற்ற மொழிகளில் தமிழின் தொடர்பு என்ன? மற்ற கலாச்சாரங்களுடன் தமிழ் கலாச்சாரம் எப்படி ஒத்துவருகின்றது?, தமிழன் எப்படி மூத்தகுடி? அவன் எங்கிருந்திருக்கலாம் என ஆராய்ச்சி செய்தவர் வெகு சிலர்


அவர்கள் தான் கடல்கொண்ட தென்னாடு, கபாட புரம் என ஆராய்ச்சியினை செய்தனர், பலமொழிகள் கற்று எல்லா மொழிகளிலும் ஆதாரம் தேடினர். எகிப்து தமிழக தொடர்புகளை அவர்கள் சொன்னார்கள், நீல நதி நைல் நதியாயிற்று, பெருமேடு பிரமிடு ஆயிற்று என்றார்கள்


ஐரோப்பிய அரேபிய மொழியில் ஆராய்ந்தார்கள், கிழக்கு ஆசிய மொழிகளில் புகுந்தார்கள் பெரும் ஆராய்ச்சி எல்லாம் செய்தார்கள், செய்துவிட்டுத்தான் தமிழன் முன் தோன்றிய இனம், முன் தோன்றிய மொழி தமிழ் என்றெல்லாம் சொன்னார்கள், கிழக்காசிய மொழிகளிலும் வாழ்வியலிலும் இருக்கும் தமிழ் தாக்கம் பற்றி சொன்னார்கள்


அப்படிபட்டவர்கள் தேவநேய பாவணர், பன்மொழி புலவர் க.அப்பாத்துரை போன்றோர்,


இன்று க.அப்பாத்துரை இறந்த நாள், தமிழுக்காகவும் தமிழரின் ஆராய்ச்சிக்காகவும் அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல, பெரும் நூல்களை எல்லாம் எழுதியவர்


ஆனால் அவர்பிறந்த ஆரல்வாய்மொழியில் அண்ணா சிலை இருக்குமேயன்றி இவருக்கு ஒரு கல் கூட கிடையாது


காரணம் பன்மொழி படித்த அப்பாத்துரை தேசியவாதி, சமஸ்கிருதம் முதல் எல்லாம் கற்றவர் பின் எப்படி திமுக தேடும்?


அதுவும் பிராமணர் தமிழர் எதிரி அல்ல என க சொன்னபொழுது, ஆம் அவர்கள் தமிழருக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே எதிரி என சொன்னவர்கள் திமுகவினர், பின் எப்படி?


ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி இவர் பெயரில்தான் அமைந்திருக்க வேண்டும், அப்படி ஒரு அபூர்வ தமிழன் அப்பாதுரையார், இன்றும் அந்த ஊரில் அப்பாதுரை பெயரில் எதுவுமில்லை என்பதுதான் சோகம்..


திமுக மீது நமக்கு மரியாதை இருப்பினும் அதன் அரசியலில் மறைக்கபட்ட எத்தனையோ பேர் உண்டு, பாரதி முதல் அப்பாதுரை என ஏராளம் உண்டு, அவர்களை பொறுத்தவரை அவர்கள் பின்னால் சென்றவர்கள் திராவிடர்கள் அவ்வளவுதான், துரோகிகள், இனதுரோகி என்றெல்லாம் திட்டமாட்டார்கள் அதுவரை பரவாயில்லை


ஆனால் தமிழகத்தில் சில காரியங்களை அவர்கள் செய்தார்கள், தொடக்ககால திமுக அதனை செய்தது, ஆனால் இந்த ராமசந்திரன் எனும் கோடாரிகாம்பு முளைத்து அவர்களுக்குள்ளே சண்டையிட்டு பல விஷயங்கள் நாசமாயின‌


பெரும் இயக்கமான திமுக பல தலைவர்களை தமிழகத்திற்கு தரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இருந்தது, அது ஜெயலலிதா, பன்னீர், பழனிச்சாமி , தின்கரன் என பல விவாகரங்களை தந்துவிட்டது, இதுதான் எதிர்பாரா பின்விளைவு


இப்பக்கம் கலைஞர் மட்டும் 60 ஆண்டுகாலம் இருந்தார், அவருக்கு பின் அந்த இடமும் காலி


அப்பாதுரை போன்றெல்லாம், மறைமலை அடிகள், மபொசி போன்றெல்லாம் தமிழுக்கு உழைத்தவ்ர்கள் இருந்தார்கள், எத்தனை பேர் தமிழனையும் தமிழன் வரலாற்றிற்காகவும் வாழ்ந்திருகின்றார்கள், வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றார்கள் ஏன் என்றால் அவர்கள் அரசியலில் இல்லை,


இன்னும் மறைந்திருப்பவர் எத்தனை பேரோ, இவர்களை எல்லாம் நினைத்து பார்ப்பது யார்? பாடபுத்தகத்தில் கூட் அண்ணா, கலைஞர் , பெரும் அறிவாளி எம்ஜிஆர் என காரல் மார்க்ஸுக்கு இணையாகத்தான் மாணவர்கள் படிக்கின்றார்கள் என சிந்திக்கும் பொழுதுதான்....


திடீரென தம்ழரின் மொத்த அதிகாரமும் எனக்கு என சீமான் வந்தார், தமிழருக்கு எல்லாம் இனி நம்பிக்கை நானே என்றார், கலைஞர் செய்தது எல்லாம் துரோகம் என்றார், எல்லாம் அல்ல கொஞ்சம் என்றாலும் ஆம் ஈழத்திற்கு அதிகம் தமிழகத்திற்கு கொஞ்சம் என சொல்லிகொண்டார்,


தமிழனை தமிழனே ஆள்வான் என்றார், சரி நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் செய்தது என்றால் நான் தமிழன், பிரபாகரனின் தம்பி அந்த தகுதி போதுமென்றார், சரி தமிழை தவிர என்ன படித்தீர் என்றால் பாரதிராஜாவிடம் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற தகுதி போதாதா என்றார்.


பிரபாகரா நீனா இவனை அனுப்பினாய் என கேட்க அவனுமில்லை, இவரோ அட்டகாசம் ஆரம்பித்துவிட்டார், உலகில் எங்கு தமிழனை தொட்டாலும் விடமாட்டேன் என்றார், இவர் காலடியிலே இளவரசன் முதல் ராம்குமார் சாவு வரை நடந்தது, அன்னார் வாளாயிருந்தார், கேட்டால் எனக்கு ஆயிரம் கனவு என்றார்


இவரை போலவே மூலவியாதிகாரனாக கத்தும் ஒரு கும்பலை சேர்த்தார், கொஞ்ச நாளாக தமிழகத்தில் ஒலிமாசு ஆனது. ஏய் கருணாநிதி என இவர்கள் கத்திய சத்தம் சர்வதேச விண்வெளிநிலையம் வரை கேட்டதாக சொன்னார்கள்


தமிழக எல்லை என்றார், தமிழன் பெருமை என்ன? என முழங்கினார், அடடா இனி மறைமலை அடிகள், மபொசி, அப்பாத்துரை, திருவிக, வையாபுரி பிள்ளை, என மறைக்கபட்ட தமிழக அடையாளம் எல்லாம் இனி வளம்பெறுமோ என எண்ணினால்....


பிரபாகரனும், வீரப்பனும் தமிழருக்காக வாழ்ந்தவர்கள் , தமிழருக்காக வாழ்வினை தொலைத்தவர்கள், தமிழுக்கு தொண்டு செய்தவர்கள், தமிழனை சிந்திக்க செய்து தமிழ்பெருமை காத்தவர்கள், அவர்களே நம் வழிகாட்டி, நம் அடையாளம் வேறு யாருமே அல்ல..
என சொன்னார் அல்லவா?


அப்பொழுது எடுத்ததுதான் செருப்பு


இப்பொழுதும் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சாத்திகொண்டே இருக்கின்றோம், இப்பொழுது ரஜினியிடம் மல்லுகட்டுகின்றார், அதாவது ரஜினி யார்? இங்கு வந்து தமிழ்படித்து தமிழில் பேசி தமிழராக வாழ்பவர், அதுதான் தவறாம்


தமிழ் தமிழன் பேசும் மொழி, கன்னடன் எப்படி தமிழ்படிக்கலாம்? பேசலாம்?, தமிழரின் மொழியினை அந்நியர் பேசவிடமாட்டோம், தமிழ் தமிழனுக்கே, தமிழகம் தமிழனுக்கே


இவை எல்லாம் வெறுப்பும், வன்முறையும் கொண்டுவரும் குருட்டு சித்தாந்தங்கள்.,


இவர் கன்னடம் கற்று கர்நாடகாவில் நிற்பதை யார் தடுத்தார்கள்? மலையாளம் கற்று மலையாளியாய் வாழ்ந்து கேரளாவில் நின்றால் யார் தடுப்பார்கள்


மக்கள் அளிப்பதே அல்லவா முடிவு? குறுக்கே படுத்து என்னை கடந்து செல், நான் தமிழன் என்றால் என்ன ரகம்?


இப்படி ஒரு விபரீத தமிழனை எங்காவது காணமுடியுமா? சட்டியில் இருப்பது அவ்வளவுதான், பாரதிராஜாவின் சீடனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


விடுங்கள்....


வருங்கால திமுக தன் தவறுகளை திருத்தி இம்மாதிரி திமுக அடையாளமற்ற தமிழறிஞர்களை நினைத்துகொள்வது நல்லது,


திமுக அல்லாத தமிழரிஞர்களையும் அவர்தம் ஆராய்ச்சிகளையும் தொண்டுகளையும் புறக்கணிக்காமல் அவர்களை அடுத்த தலைமுறைக்கு அடையளம் காட்டுதல் வேண்டும்..


இல்லாவிட்டால் இன்னொரு சீமான் வந்து மலையூர் மம்பெட்டியான், நாகர்கோவில் லிங்கம், ஆட்டோ சங்கர், அட்டாக் பண்டி, பொட்டு சுரேஷ், காஞ்சி அப்பு எல்லாம் தமிழின தலைவர்கள் என சொல்ல ஆரம்பித்துவிடுவான்













 


 

No comments:

Post a Comment