Thursday, May 25, 2017

யார் இவரோ, யார் இவரோ ....



Image may contain: 1 person


உணர்ச்சி உள்ளே வந்தால் அறிவு வெளியே செல்லும், ஆசை வந்தால் வெட்கம் வெளியேறும், ஆனால் பணத்தாசை உள்ளே வந்தால் மானமும் உணர்ச்சியும் அறிவும் மொத்தமாக‌ வெளிசெல்லும்


அப்படி சில தமிழக ஊடகங்களுக்கு அறிவு,மானம், உணர்ச்சி எல்லாம் சென்றுவிட்டன, அதாவது இவர்கள் சில சந்திப்புகளை நடத்துவதும் அதனை ஒளிபரப்புவதும் வணிக நோக்கமன்றி வேறல்ல‌


அவர்கள் தொழில், ஆனால் சமூகம் பார்க்கும் ஊடகங்களில் நல்லவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், வழிகாட்டிகள் சிந்தனையாளர்களை அழைத்தால் சிக்கல் இல்லை


ஆனால் கொலைகாரனை, நாட்டு எதிரியினை, மரண தண்டனை பெற்றவனையெல்லாம் சில பிரச்சினைகளில் அழைக்கின்றார்கள், அவனும் வந்து தான் காந்தி, நேரு, நேதாஜி எனும் அளவிற்கு சிந்தனைகளை அள்ளி தெளிக்கின்றான்


அந்த தியாகு என்பவரை அப்படித்தான் பல ஊடகத்தில் அழைக்கின்றார்கள்


தியாகு என்பவர் யார்? தனிதமிழ்நாடு இன்னபிற அட்டகாசங்களில் ஈடுபட்டு, குண்டுவெடிப்புகளில் சிக்கி, இந்த நட்டை சுடுகாடாக்க துணிந்த இந்திய விரோதியாகியாக‌இந்த தேசத்தின் சொத்துக்களை குண்டுவைத்த தகர்த்தவர்களை எல்லாம் ஆதரித்தவர், ஆம் தமிழகத்தில் வெடித்த குண்டுகளையும் இவர் கண்டுகொள்ளவில்லை மாறாக காப்பாற்றியவர்


ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கபட்டவர், பின் அந்த தண்டனை குறைக்கபட்டு மன்னிப்பு கொடுத்து அனுப்பபட்டவர்


நிச்சயமாக இரண்டாம் பிறப்பு கொடுத்திருப்பது இந்தியா,மரண தண்டனை குற்றவாளியினை விடுதலை செய்திருக்கின்றார்கள் என்றால் அவன் திருந்த கடைசி வாய்ப்பு என பொருள்


இவரை கொன்று வீச சட்டத்திற்கு எவ்வளவு நேரமாகியிருக்கும், ஆனாலும் பிழைக்க வைத்து அனுப்பியது இந்திய சட்டம், இதுதான் இந்தியா


ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல அன்னார் பொங்கி திரிகின்றார், தேசிய கொடிஎரித்தவனை சந்திக்கின்றார், உச்சமாக இந்திய எதிரிகளான, பாசிச புலிகளை பாராட்டுகின்றார், இந்தியாவினையும் அதன் பல காரியங்களை சாடுகின்றார்.


ஒரு மரண தண்டனை கைதி இப்படி எல்லாம் பேச என்ன உரிமை இருக்கின்றது? இப்படிபட்ட பிண்ணணி உள்ள நபர் என்ன பேசி கிழித்துவிடுவார்? இவரை எல்லாம் மதித்து பொறுப்பான ஊடகத்திற்கு அழைக்கின்றோமே எனற எண்ணம் ஊடகத்தாருக்கு இல்லை


நாமே மரணதண்டனை கைதி, நமக்கு பேச என்ன இருக்கின்றது , நாம் முன்பு என்ன கிழித்துவிட்டோம் என்ற உணர்வு அவரிடமும் இல்லை, ஏதோ கொடிகாத்த குமரன் போல பேசிகொண்டிருக்கின்றார்


இந்த தண்டனை பிண்ணணியினை விட கொடுமையானது , தமிழை நேசித்த ஒரு பெண்ணின் வாழ்வினை சீரழித்தது


இவர் என்ன பெரிய அழகரா? கிரிக்கெட் வீரரா? இல்லை மாடலா? ஆனால் தமிழுக்காக வாழ்க்கையினை அர்பணித்ததாக சொல்கின்றார், தூக்குமேடை வரை சென்றார் என ஒரு தமிழச்சி கழுத்தை நீட்டினாள்.


இன்றும் மனதின் காதல் உணர்வினை ஒருபெண் ஆணின் அன்புக்காக ஏங்குவதை அப்பெண்ணை தவிர இன்னொருவர் எழுதமுடியாது


சம்பளத்திற்காக கற்பனையிலே அப்படி எழுதும் பெண், தன் கணவனை எப்படி எல்லாம் மனதார நேசித்திருப்பாள்? அவரின் பாடல்வரிகளை கேட்கும்பொழுதெல்லாம் வரும் சிந்தனை இது


அப்பெண்ணின் மனதை கூட புரிந்துகொள்ளமுடியாத இவர்தான் சமூகத்தை திருத்துவாராம், எவ்வளவு பெரும் மோசடி?


அந்த தமிழச்சியினை இவர் விரட்டியதும், அப்பெண் மகனோடு தெருவில் நின்று நீதிகேட்டதும் உலகம் அறிந்தது


ஆக கொஞ்சமும் மனசாட்சியற்ற, ஒரு கொடூர மனம் படைத்த மரண தண்டனையினை ரத்து செய்த நன்றியும் மறந்த, தன்னை நம்பிய மனைவியினையும் தெருவில் விட்ட ஒருவனை ஏதோ பெரும் போராளி போலவும், பல்துறை வித்தகன் போலவும், உலக நோபல் பரிசு பெற்றவன் போலவும் இந்த ஊடகங்கள் அணுகுகின்றன‌


வெட்கமாக இல்லை? சீ...சீ, நாட்டில் யாருமே இல்லையென்றா வாழ தகுதியில்லாதவன் என நீதிமன்றம் தீர்பிட்டவனையெல்லாம் அழைக்கின்றார்கள்


ராஜிவ் கொலைகுற்றவாளிகள் வெளிவந்தால் இதுதான் நடக்கும், 7 பேரும் 7 டிவியில் இருந்து நியாயம் பேசுவான்


ஊடகங்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றன, இவற்றிற்கும் அரசு உரிமமும் இன்ன பிற ஆவணங்களும் உண்டு


சமூக பொறுப்பை மீறி, சுயநலத்திற்காக தேச சமூக விரோதிகளை பெரும் பிம்பமாக்கினால் அவற்றை ரத்து செய்யும் கடப்பாடு அரசுக்கும் உண்டு


எல்லை மீறி பெரும் அழிச்சாட்டியங்களில் இறங்கி இருக்கும் இந்த ஊடகங்கள் நிச்சயம் திருந்தாது, ஆனால் சமூகத்தை கெடுத்துவிடும், சில அரைவேக்காடுகளை பேசவைத்து உணர்ச்சியூட்டி இந்த தமிழகத்தை சுடுகாடாக்கிவிடும்


இந்தியா கொலைகுற்றவாளி என சொன்ன ஒருவனை, உலகம் தீவிரவாதி என சேர்ந்து அடித்துகொன்ற ஒருவனை, தான் எப்படி சந்தித்தேன் என ஏதோ போப்பாண்டவரை பார்த்தது போல ஒருவன் பேசிகொண்டிருக்கின்றான், அதனையும் ஊடகங்கள் பேட்டி என சொல்கின்றன‌


கொலைகாரனும், கொலைகாரனை ஆதரிப்பவனும், இன்னும் கொடூர தீவிரவாதியினை தலைவன் என்பவனும், மரண தண்டனை பெற்றவனும் வந்து லெனின் அளவிற்கு பேசிகொண்டிருக்கின்றான், தனிநாடு மண்ணாங்கட்டி என சொல்கின்றான்


அதனை இந்த அரசு பார்த்துகொண்டுதான் இருக்கின்றது, இதனை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?


ஊடகங்கள் அவற்றின் பொறுப்பினை உணர்வது சமூகத்திற்கு நல்லது, அல்லது அரசு தன் சமூக கடமையினை செய்யட்டும்













 


 

No comments:

Post a Comment