Thursday, May 25, 2017

இத்தேசம் ஒருநாளும் எம்மை கைவிடவே விடாது




Image may contain: 2 people, text


புலிகளை யாரும் தமிழரின் மொத்த பிரதிநிதியாக ஏற்கவில்லை, அவர்களாக துப்பாக்கி முனையில் அடக்கி நாங்கள் ஈழதமிழர்களின் ஒரே அதிகாரம் என்றார்கள்


அப்படி இங்கு சிலர் தான் மட்டுமே தமிழரின் நலனை குத்தகைக்கு எடுத்திருக்கின்றேன், நான் மட்டுமே தமிழினத்தை நேசிக்கின்றேன்
, நான் மட்டுமே தமிழகம் காப்பேன் என் அனுமதி எல்லாவற்றிற்கும் முக்கியம் என சொல்லி கொண்டிருக்கின்றார்க‌ள்





ஈழபுலிகளின் பாசிச பாணியினை இங்கும் கொண்டுவர பார்க்கின்றார்கள், யாராவது கொஞ்சம் பணமும் ஆயுதமும் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் இங்கும் முள்ளிவாய்க்காலை உருவாக்க இவர்கள் தயார், நல்லவேளையாக அப்படி ஸ்பான்சர்கள் இன்னும் இவர்களுக்கு கிடைக்கவில்லை

இந்தியா என்பது பல இனங்களின் தொகுப்பு, இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை என சொல்லிகொண்டிருப்பவனுக்கு எல்லாம் தேச அபிமானிகளின் பதில் ஒன்றுதான்

வரலாற்றில் தமிழகமும் ஒரே நாடாக இருந்ததில்லை, ஒரே மொழியில் பல துண்டு நாடுகளாகத்தான் அது இருந்திருக்கின்றது, மூவேந்தர் , 7 வள்ளல் என அது பல துண்டுகளாக இருந்திருக்கின்றது

தனிதமிழ்நாடு என்பது ஒரு காலமும் சாத்தியமில்லை, அப்படி நிலை வந்தாலும் ஒரே தமிழகமாக இருக்காது,

எம் பாண்டிய நாடும் எமக்கு முக்கியம், நாஞ்சில் நாடு இன்னொருவனுக்கு, தொண்டை நாடு அவனுக்கு, கொங்கு நாடு அவனுக்கு, சேது நாடு, கான் நாடு, சோழ நாடு, வருசநாடு, சேரநாடு, ஆற்காடு எனக்கு என ஆளாளுக்கு கிளம்புவார்கள், அத்தனை பல நாடுகளை அடக்கியதுதான் தமிழ்நாடு,

ஒரே தமிழகமாக என்று இருந்தது???

உங்கள் அகண்ட தமிழகம் என்பதெல்லாம் ஒரு காலமும் சாத்தியமில்லை,இந்தியா எனும் அற்புதமான நாட்டில் வாழமுடியாது என சொல்லும் உங்களுடனா நாங்கள் வாழமுடியும்? உங்கள் கனவு நிறைவேறினாலும் அது ஒரே தமிழகமாய் இருக்காது

இந்தியா இனங்களின் தொகுப்பு என்றால் தமிழகமும் தமிழ்பேசும் இனங்களின் தொகுப்பே, தமிழ் பேசுகின்றோம் என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் பின்னால் எல்லோரும் வரவேண்டும் என்ற அவசியம் எதனால் வந்து தொலைத்தது? அல்லது வரவேண்டும்?

ஒருகாலமும் முடியாது

இந்தியராய் இருக்கின்றோம், அப்படியே இருப்போம் , தமிழர் என கிளம்பும் நிலைவருமானால் நாங்கள் தென்பாண்டி தமிழராய் செல்வோமேயன்றி இந்த பதர்கள் பின் செல்லவே மாட்டோம்

ஆனாலும் அப்படி ஒரு நிலைக்கு இத்தேசம் எங்களை தள்ளாது எனும் நம்பிக்கை எமக்கு எப்பவும் உண்டு., நாங்கள் மனமார நம்பி வணங்கும் இந்த தேசம் நிச்சயம் எம்மை அப்படி கைவிடாது

சூரியன் மேற்கே உதித்து, காவேரி தஞ்சையிலிருந்து மைசூருக்கு சென்று, ரஜினி அரசியலுக்கும் வந்தாலும் அது மட்டும் நடக்காது, இத்தேசம் ஒருநாளும் எம்மை கைவிடவே விடாது.













 


 

No comments:

Post a Comment