Tuesday, May 30, 2017

இந்தியாவின் நாட்டுபற்று மிக்க பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்




Image may contain: 1 person, hat, beard and close-upஇந்தியாவின் நாட்டுபற்று மிக்க, பிரிவினை வாதிகளை எல்லாம் ஒடுக்கவேண்டிய வழியில் ஒடுக்கிய அந்த பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்


ஒரு இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன அந்த கன்வார் பால் சிங் இனி இல்லை, கடந்த 26ம் தேதி இறந்திருக்கின்றார்


மிக உறுதியான இந்தியர் அவர், அசாமில் கலவரங்களை ஒடுக்கியது அவரின் காவல்துறை வாழ்வில் பொறுப்பான துவக்கம்





அக்காலங்கள் கடுமையானவை, சும்மவே மனதில் பொறுமிகொண்டிருந்த சீக்கியர்களுக்கு அந்த இந்தி திணிப்பும் இன்னும் சில புறக்கணிப்பும் பெரும் சீற்றத்தை கொடுத்த்தன‌

பிந்த்ரன் வாலே அவர்களின் பிதாமகன் ஆனார், பல நாடுகள் அவனை வளர்த்துவிட்டன, அந்த சீக்கியர் பொற்கோயில் கலவரமும் தொடர்ந்த இந்திரா படுகொலையும் இந்தியாவின் ரணங்கள்

கில் ஒரு சீக்கியரானாலும் இந்தியராய் நின்றார், பொற்கோவில் படுகொலைகளை தொடர்ந்தும் அங்கு தீவிரவாதிகள் மறைந்திருந்தனர், கில்லின் அணுகுமுறையில் அவர்கள் வெளியேற்றபட்டனர்

பின்பும் தன் கடுமையான அணுகுமுறையாலும், திறமையாலும் நாட்டுபற்றாலும் பஞ்சாபில் தீவிரவாதத்தை வேரறுத்தார் கில்

சொந்த இனத்தை விட நாடே முக்கியம் என நின்ற அந்த வீரசிங்கத்தின் தியாகத்திற்கு எதுவும் ஈடாகாது

இன்று பஞ்சாப் அரசு அந்த பெருமகனின் மரணத்தை சாதாரணமாக, ஆம் வயதானால் சாவார்கள் என சொல்லியிருப்பதே அதற்கு சான்று

அரசியல் அப்படித்தான்

பஞ்சாபில் அவர் தீவிரவாதத்தை வேறோடு அறுத்தார், பெரும் சாதனை அது, ஒரு சீக்கியன் சீக்கிய பூமியில் இந்தியனாய் நின்ற பெரும் சாதனை அது

அந்த கில்லின் வழிப்படி தமிழகத்திலும் ஒருவர் இருந்தார், அவர் மோகன் தாஸ், எம்ஜிஆரின் அரசியலில் அவருக்கு பங்கு உண்டு, எம்ஜிஆர் எப்படி அரசியலுக்கு கொண்டுவரபட்டார் என்பதை முழுக்க அறிந்தவர் அவர்

எம்ஜிஆர் ஆட்சியில் அவர்தான் இங்கு டிஜிபி, அப்பொழுதுதான் ஈழபோராளிகளுக்கு இங்கு பயிற்சி நடந்தது, புலிகளை எம்ஜிஆர் வளர்த்த காலம்

ஈழபிரச்சினையில் நாம் இப்படி செய்தால், காஷ்மீரிலும் பஞ்சாபிலும் தலையிடும் பாகிஸ்தானை கண்டிக்கும் உரிமையினை நாம் இழப்போம், கில் போன்றோர்
செய்த தியாகம் எல்லாம் வீணாகும் என எச்சரித்தது அந்த மோகன் தாஸ்.

தமிழகத்தில் ஈழபோராளிகளை கட்டுபடுத்தியதும், பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்ததும் அவர்தான், அது பிடிக்காமல்தான் ஓடினான் பிரபாகரன்

அவர் எச்சரித்ததுதான் பின்னர் நடந்தது, அவசரமாக ராஜிவ் அந்த தவறை சரி செய்ய முயன்று உயிரையும் விட்டார்

அப்படி காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லாம் நாட்டுபற்றிலும், கடமை உணர்விலும் வழிகாட்டியாய் நின்ற அந்த பெருமகன் கேபிஎஸ் கில்லுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் பெருமை அடைகின்றோம்

இத்தேசத்தில் பிரிவினைவாதிகள் குதிக்கும் பொழுதெல்லாம், அவர்களை அடக்க காவல்துறை களத்தில் இறங்கும்பொழுதெல்லாம் கில் நினைவுக்கு வருவார், எக்காலமும் வருவார்

அவரை போல ஆயிரம் கில் வரட்டும், இத்தேசம் பிரிவினைவாதிகளை போட்டு சாத்தி அடக்கட்டும், நாடு நிலைபெறட்டும்

அந்த வீர சிங்கத்திற்கு ஆழந்த அஞ்சலியோடு, இத்தேசத்திற்கு அவர் செய்த சேவைக்கு நன்றி கண்ணீரோடு அனுப்பி வைக்கின்றோம்

வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்













 

No comments:

Post a Comment