Wednesday, May 24, 2017

வாக்கு வங்கிகாக பிந்த்ரன் வாலேயினை வளர்த்துவிட்டு...

வாக்கு வங்கிகாக பிந்த்ரன் வாலேயினை வளர்த்துவிட்டு பஞ்சாபில் பேரழிவினை ஏற்படுத்தி அதனால் செத்தும் போனார் இந்திரா


அவர் செய்த மாபெரும் தவறு அது, அடுத்த தவறு ஈழத்தில் செய்தது, பாம்புகளுக்கு பால்வார்த்தது நிச்சயமாக சீக்கியரிடம் தப்பியிருந்தால் ஒரு ஈழத்தவரால் இந்திரா கொல்லபட்டிருப்பார்


பின் அது அவர் மகன் தலையில் விடிந்தது, பிரபாகரனுக்கு முன்பே ராஜிவினை குடும்பத்தோடு கொல்ல தேடியவர் உமா மகேஸ்வரன் எனும் ஈழபோராளி




பஞ்சாப் போல ரத்த ஆறு ஓடியிருக்க வேண்டிய தமிழகம் மக்களின் தேசிய உணர்வால் தப்பித்தது


ஈழபேரழிவிற்கு உளவுதுறையின் தோல்வியும் ஒரு காரணம், இந்திய உளவுதுறையினை தந்திரமாக ஏமாற்றி, அதே பாணியில் அமெரிக்க உளவுதுறையிடம் விளையாடி வாங்கி கட்டி அழிந்தனர் புலிகள்


இப்பொழுதும் இந்திய உளவுதுறை திருந்தியதாக தெரியவில்லை, இலங்கையிடம் மேஜையில் பேச தமிழகத்தில் சில ஈழகுரல்கள் இருக்கவேண்டும் என சில காரியங்களை செய்வது தெரிகின்றது


இல்லையென்றால் இந்த திருமுருகன் முதல் சீமான் வரை இப்படி பேசமுடியாது, யாசின் மாலிக்குடன் எல்லாம் சீமான் கைகோர்க்கும் தைரியம் வராது, இன்னும் மிக கடுமையாக சிலர் பேசும் நிலையும், இன்னும் பல விபரீத முழக்கங்களும் வந்திருக்காது


முன்பு அண்ணா காலத்தில் திராவிட நாடு என்பதற்காக உங்களை தடைசெய்வோம் என மிரட்டிய டெல்லி , இந்த கும்பலை எல்லாம் விட்டு வைத்திருக்கும் ரகசியம் என்ன?


மத்திய அரசு உளவுதுறையினை கட்டுபடுத்தி இவர்களை எல்லாம் இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்


சில அந்நிய நாட்டுவிவகாரங்களுக்காக இவர்களை வளர்த்துவிட நினைத்தால் என்னாகும் என்பதற்கு பஞ்சாபும் பொற்கோயிலும் இந்திராவு ஈழமும் ராஜிவும் இன்னும் பல விஷயங்களும் நினைவுக்கு வரும்


சில விஷ்யங்களை சோதித்து பார்க்க கூடாது, இந்திரா அப்படி செய்துவிட்டார், அமெரிக்காவும் பின்லேடன் விஷயத்தில் செய்தது


செய்ய கூடா காரியங்களை செய்தால் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும்


அந்நிய சக்தி அல்லது உளவுதுறை தூண்டுதல் இல்லாமல் எவனும் தைரியமாக பிரிவினை பேசமாட்டான் என்பது அரசியல் உலகின் பாலபாடம், யாருக்கும் புரியாதது அல்ல‌


முளையிலே இவர்களை அடக்கி வைப்பது தேச ஒருமைபாட்டிற்கும் அமைதிக்கும் நல்லது


உள்துறை அமைச்சகம் உருப்படியாக இருக்குமானால் உளவுதுறைகளின் பேச்சை கேட்காமல் இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையினை செய்யட்டும்



No comments:

Post a Comment