Wednesday, May 24, 2017

கலைஞருக்கான காலமும் கிட்டதட்ட முடிந்துவிட்டது












Image may contain: 4 people, people standing


ஆண்டவனோ, இயற்கையோ எல்லோருக்கும் குறிப்பிட்ட காலத்தைத்தான் கொடுக்கும், அதனை மீற யாராலும் முடியாது, யாராக இருந்தாலும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.


கலைஞருக்கான காலமும் கிட்டதட்ட முடிந்துவிட்டது, என்று அவரின் எழுத்து வரவில்லையோ அன்றே உலகிற்கு தெரிந்த விஷயம் அது, தன் சுண்டுவிரல் அசைக்க முடிந்தாலும் எழுதுகின்ற வகை அவர்


இந்த புகைபடத்தினை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை, வழக்கமான கலைஞரின் முகம் இது அல்ல, அவரை ஏன் இப்படி எல்லாம் இம்சைபடுத்த வேண்டும்?





அம்மனிதன் ஏறாத மேடையோ அவரை கொண்டாடாத, பாராட்டாத தலைவர்களோ இல்லை, இனியும் அவரை பாராட்டிகொண்டிருக்க என்ன இருக்கின்றது?

திமுகவிற்கு இனியும் அவர் செய்ய என்ன இருக்கின்றது? அல்லது திமுக அவருக்கு செய்ய என்ன மீதி இருக்கின்றது?

திமுகவினர் ஏதும் கலைஞருக்கு செய்ய விரும்பினால் இப்படி விழா நடத்தி அவரை இம்சிக்காமல் இருந்தால் போதும்

அரசியல் செய்ய ஆயிரம் வாய்ப்பு களத்தில் இருக்கின்றது இதில் அவரை வைத்துத்தான் செய்ய அவசியமில்லை

படத்தினை பார்க்கும்பொழுது , விஸ்வரூபம் காட்டிய புயலொன்று கரை கடந்து சென்றுவிட்டதை போன்ற உணர்வு வருகின்றது,

ஆம் கடந்துவிட்டது, இனியும் சொல்ல ஒன்றுமில்லை,

கலைஞரை ரசிப்பவர்கள், உண்மையான திமுகவினர் இதனை வரவேற்க மாட்டார்கள், தளபதி என கூச்சலிடும் சிலருக்கு இது பிடிக்கலாம் அல்லது நடிக்கலாம்

சிங்கம் போல வந்தவரை இப்படி சிலையாக காண யாருக்கு சகிக்கும்?

தமிழிசை கவனிக்கவும், கலைஞரின் வைரவிழாவிற்கு கலைஞரையே இப்பொழுதுதான் அழைத்திருக்கின்றார்கள்.. இதில் நீங்கள் வேறு கோபபடுகின்றீர்கள்













 



 











No comments:

Post a Comment