Friday, May 26, 2017

தொடரும் காலா இம்சைகள்...


Image may contain: text


நமக்கு என்ன ராசியோ தெரியவில்லை, ஒரு விஷயம் கண்ணில் பட்டால் அதுவே தொடர்ந்து பட்டு தொலையும், அப்படி இப்பொழுது இந்த காலா எனும் இம்சை


காலா கருப்பு தமிழர்களின் ஒடுக்குமுறையினை பேசுகின்றதா என கிளம்பிவிட்டார்கள், காரணம் ரஞ்சித் கபாலி வரும்பொழுது உளறிய உளறல் அப்படி


"‘மலேசியர்கள் சிவப்பானவர்கள், சீனர்களும் சிவப்பானவர்கள், அங்கே தமிழர்கள் மட்டும் தான் கருப்பாய் இருப்பார்கள். அங்கே கருப்பாய் இருப்பதே பிரச்சையனையாகத் தான் இருக்கிறது. சிவப்பாய் இருப்பவர்கள் பார்வையில் தமிழர்கள் எப்படி பார்க்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும்...’


மலேசியர் கொஞ்சம் கோபக்காரர்கள் என்றால் ரஞ்சித்தை பிடித்து இரட்டை கோபுரத்தின் இடையில் தொங்கவிட்டிருப்பார்கள், ஆனால் அவர்கள் அமைதியோ அமைதி


ரஞ்சித்தை என் சாடுகின்றோம் என்றால் இப்படி நுனிபுல் மேய்வது, எல்லாவற்றையும் சாதி எனும் மனநோயில் பார்ப்பது, அந்த மனநோயினை சினிமா ஆக்குவது என ஒரு மாதிரியான மனிதர் இவர், ஆழ்ந்த அறிவோ , விஷயத்தில் தெளிவோ சுத்தமாக இல்லை, எல்லாம் அபத்தம்


மலேசியாவில் மக்கள் பார்ப்பது ஒன்றே இன்று, உழைக்கின்றான்? இல்லையா? நம்பலாமா வேண்டாமா? அவ்வளவுதான், அவன் நிறம், உயரம் இன்னபிற விஷயம் எல்லாம் தேவையே இல்லை


எத்தனையோ சீனபெண்கள் கருப்பு தமிழரையும், கருப்பு தமிழர் மற்ற இன பெண்களையும் மணந்து குடும்பமாக வருவதும், காதலரிலும் அந்த கருப்பு காதலரை காண்பதெல்லாம் சகஜம்


அட அது என்ன? படிக்க வரும் ஆப்ரிக்க இளைஞர்களை மணந்து கொண்ட மலேசியர்கள் உண்டு, ஏகப்டா ஆப்ரிக்க மருமகன்கள் கொண்ட நாடு இது


இதில் கருப்பு என்றால் மலேசியருக்கு பிடிக்காது என்பது எவ்வளவு பெரும் பொய்,


மிஸ்டர் ரஞ்சித், ரஜினி என்ன கமலஹாசன் கலரா? மலேசியர்களுக்கு கருப்பு பிடிக்காது என்றால், மலேசிய கதையில் ஏன் கருப்பு ரஜினி வைத்தீர்கள்? சிகப்பு கமலஹாசனை வைத்தால் என்ன?


இப்பொழுது மும்பை தமிழர் கதையாம், அதே பேச்சு வருகின்றது


மும்பையில் தமிழரை கருப்பர் என்பார்கள், தமிழரின் ஒடுக்குமுறை பற்றிய கதை அது, உருப்படுமா?


மும்பை அரேபிய பெட்ரோல் கிணறுகள் காலத்திற்கு முன் தமிழருக்கு படியளந்த நகரம், விவசாயம் பொய்த்த தமிழருக்கு அதுதான் புகலிடம், இன்றும் லட்சகணக்கான தமிழர் அங்கு உண்டு


அவர்களை அங்கு கருப்பர் என வெறுக்கவில்லை, ஓட அடிக்கவில்லை , நாம் ஆங்கிலேயனை வெள்ளையன் என்பது போல நம்மை கருப்பர் என்றார்கள், ஆனால் விரட்டினார்களா? பால் தாக்கரே அதற்கு முயன்று பின் நடக்காது என அமைதியானார்.


தமிழர்களுக்கு சோறுபோட்ட அந்த பம்பாயினை கொச்சைபடுத்துவது சரி அல்ல, நன்றிகொன்ற தனம்


மும்பை என்றல்ல, இந்த நாட்டில் கருப்பாய் இருப்வர்களுக்கு என்ன கொடுமை நிகழ்ந்தது?


காலா காந்தி என காமராஜரை இத்தேசம் கொண்டாடியது, அப்துல் கலாம் ஜனாதிபதியானர், இன்னும் ஏராளமான தென்னகத்தார் அகில இந்திய அளவில் உயர்பதவி அடைந்தனர், தீராபுகழ் ராணுவ ஜெனரல் கூட "கரியப்பா" தான்


கருப்பன் தமிழ் உணவகம் இந்தியா முழுக்க இருக்கின்றது, கருப்பன் தமிழன் இளையராஜா, ரகுமான் எல்லாம் உலகளவில் கொண்டாடபடுகின்றனர், கருப்பன் சிவ்நாடார் இன்று கணிணிதுறையின் உலக அடையாளம்


அமெரிக்காவில் உயர்ந்த தமிழன் எல்லாம் தென்னக கருப்பன் தான், அமிர்தராஜ் சகோதரர், டாக்டர் ஜெயராஜ் (இவர் என்னைவிட கருப்பு), சுந்தர் பிச்சை எல்லாம் யார்? நிறம் காரணமாக விரட்டபட்டார்களா?


நிறமாய் இருப்பவர் இந்தியாவில் வெல்லமுடியுமென்றால் பீஹாரி, நேப்பாளி, இன்னும் பல மாகாணத்தவர் எல்லாம் தமிழகத்தில் மண்சுமக்கின்றான்? நிறம்தான் தீர்மானிக்கின்றது என்றால் அவன் ஏன் இப்படி அடிமாடாகின்றான்?


எல்லா நிற இனத்திலும் வறுமையும், செழுமையும் உண்டு, இது உலக நியதி.


அமைதியா இருக்கும் நாட்டில் கருப்பாய் இருப்பதால் விரட்டுகின்றார்கள், ஒடுக்குகின்றார்கள் என்பதெல்லாம் வீன் பிதற்றல், அனுதாபம் தேடும் கொடூரம்


கருப்பு என்பது மானிடத்தில் ஒரு நிறம், அந்த நிறவெறி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்பு இருந்தது, இப்பொழுது ஒடுங்கிற்று. அமெரிக்காவில் ஆங்காங்கே புகைகின்றது


ஆனாலும் அங்கும் திறமையுள்ளவர்கள் மேலே வரத்தான் செய்கின்றார்கள். ஜாக்சன் முதல் ஒபாமா வரை, கார்ல் ஜாண்சன் முதல் ஜோர்டன் வரை ஆயிரம் உதாரணம் காட்ட முடியும்


காலா காந்தி என காமராஜரை அழைத்தார்கள் என்றால் அது இனவெறியா? அல்ல, கருப்பு முத்து என கால்பந்து பீலேயினை சொன்னபொழுது அவர் என்ன பொங்கினாரா?


இந்தியாவில் அப்படி ஒரு நிலை ஒருகாலமும் இல்லை, இனி வரவும் வராது


சுருக்கமாக இப்படி சொல்லி முடிக்கலாம், தகுதியும் திறமையும் இருக்கும் யாரும் இத்தேசத்தில் சாதிக்கலாம் அதற்கு நிறம் ஒரு தடையே அல்ல, காமராஜர், கலாம் , ஷிவ்நாடார் வரை ஆயிரம் பேரை சொல்லலாம்


மிஸ்டர் ரஞ்சித், தமிழக சூப்பர்ஸ்டாராக ரஜினி எப்படி உயர முடிந்தது? அவர் கருப்பு என யார் ஒதுக்கினர்? அன்றைய காலத்தில் அவரிடம் வித்தியாசமான பாணி இருந்தது, தமிழகம் ஏற்கவில்லையா?


கருப்பு நடிகர் என்றா நீர் இயக்க சம்மதித்தீர்? நடிகர் செந்தில், வடிவேலு இவரை விட கருப்பு, ஏன் சில படங்களை அவர்களை வைத்து இயக்கினால் என்ன?


உறுதியாக சொல்லலாம், கபாலிபடத்தின் பல காட்சிகள் கத்தரிக்கபட்டு திரைக்கு வந்தது, பார்த்த மலேசியர்கள் அந்த கோர்ட் சீன், ஆண்ட பரம்பரை இன்னும் சில வசனங்களை கேட்டு சொன்னார்கள், "பன்னி மூவி லா...", ஏதோ ஒரு ஹோட்டல் அறையில் ஜன்னல் வழியாக‌ மொத்த மலேசியானையும் இயக்குநர் பார்த்திருக்கின்றார்.


இப்பொழுது மொத்த இந்தியாவினையும் ஏதோ ஒரு ஓட்டை வழியாக பார்த்துவிட்டு மும்பையிலும் இந்தியாவிலும் கருப்பரை அடிக்கின்றார்கள் என மறுபடியும் கிளம்பிவிட்டார் ,


ரஜினிக்கு அப்படி என்ன சோதனை? பாஜக இவரை வடம் கட்டி இழுத்து பார்த்துவிட்டு, இனி கிரேன் வைத்து தூக்கி தமிழிசை அருகில் அமர்த்திவிடலாமா என சிந்திக்கும்பொழுது, தமிழன் கருப்பாய் இருப்பதில் இவ்வளவு சிக்கலா என அவருக்கு ஞானம் வந்திருக்குமோ என்னமோ?


இன்றைய காலத்தில் மிக சிக்கலான நேரம் ரஜினிக்கு, கலைஞர் போல அணைத்து காப்பவரோ, ஜெயா போல அடக்கி காப்பவரோ இல்லை, சோ போன்ற ஆலோசகர்களும் இல்லை


கபாலியில் தன் மீது விமர்சனம் எழுவதை கண்ட ரஜினி அவசரமாக தள்ளுவண்டியில் சோவினை தியேட்டருக்கு தள்ளி சென்ற காட்சி பிரசித்தம், இப்பொழுது அவருமில்லை


தடுமாறிய ரஜினியினை பாஜக , சீமான் உட்பட போட்டு சாத்துகின்றார்கள், உச்சியில் ஓங்கி அடித்து சோலிமுடிக்கும் வேலையினை ரஞ்சித் செய்கின்றார்


பாட்ஷா படத்தில் அடிப்பது போல கட்டி வைத்து அடிக்கின்றார்கள், அப்படித்தான் நிலமை செல்கின்றது


"இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா" என்றால் இப்போதைக்கு நிச்சயமாக டைரக்டர்தான், பிண்ணணியில் சில சக்திகள் இருக்கலாம்


ஒன்று உண்மை


இவ்வளவு நாளும் ரஜினியினை யார் காப்பாற்றியிருக்கின்றார்கள் என்றால் அது கலைஞரும், ஜெயலலிதாவுமே.


அவர்கள் இருக்கும் வரை சிம்மமாக இருந்த ரஜினியினை இன்று உழவுமாடாக ஆளாளுக்கு விளாசிகொண்டிருக்கின்றார்கள்..


கருப்பாய் இருப்பவர்களை இந்தியாவில் புறக்கணிக்கின்றார்கள் எனும் செய்தி தமிழிசை காதுக்கு செல்லாதவரை நல்லது, சென்றுவிட்டால் அவ்வளவுதான்


தமிழிசையினை விடுங்கள்


ஒப்பற்ற கடவுளான பகவான் கண்ணனே கருப்புத்தான், அவனை இத்தேசம் முழுக்க வணங்கிகொண்டிருக்கின்றது












No comments:

Post a Comment