Monday, May 29, 2017

மாட்டுகறி பற்றி நாடே போர்கோலம் பூணுகின்றது







Image may contain: 2 people


மாட்டுகறி பற்றி நாடே போர்கோலம் பூணுகின்றது, பல மாநில முதல்வர்கள் பாகுபலி ராணாவாக "அந்தபிரவேரா.." என போர்கோலம் பூண்டாயிற்று


தமிழகத்தில் அடிமை அதிமுக சத்தமே இல்லை, மாட்டுகறி உண்பது நல்லதல்ல என அதன் இன்னொரு அடிமை கிருஷ்ணசாமி மூலம் சொல்லிபார்க்கின்றார்கள்


நன்றாக நமக்கு தெரியும், அதிமுகவிற்கு எல்லா சாதியிலும், எல்லா இயக்கத்திலும் ஒரு ஆட்கள் உண்டு, சீமான் ஒரு ரகசிய பினாமி என்றால் கிருஷ்ணசாமி இன்னொரு ரகம்





ஆனால் ஆளாளுக்கு அடிக்கிற அடியில் கி.சாமி சத்தமில்லை, சீமான் ரஜினிக்கு விளக்கம் கொடுப்பதாக சொல்லியே மாட்டுகறிக்கு பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவிக்காததை மறைக்கபார்க்கின்றார்

Image may contain: 1 person, smiling, textஇன்னும் ஏராள மர்ம வித்தைகளை அதிமுக செய்கின்றது,

இந்நிலையில் தமிழகத்தில் குஷ்பூவின் எதிர்குரல் ஓங்கி ஒலிக்கின்றது, மாட்டுகறி வேண்டாமென்றால் மாட்டு தோல் செருப்பில்லாமல் நடப்பீர்களா என கன்னத்தில் அறையும் கேள்விகளை கேட்கின்றார்

அதோடு விட்டாரா?

பழனிச்சாமி தன் சொந்த மூளையினை நாற்காலிக்காக அடகு வைத்தாரா? என மிக துணிச்சலான குரலை எழுப்புகின்றார்

தமிழன், தமிழ்நாடு எனக்கு என குதிப்போரெல்லாம் மூடிகொண்டு நிற்க, மிக துணிச்சலாக தன் கருத்துக்களை போட்டு தாக்குகின்றார்

மீடியாக்கள் இந்த குரலை மறைக்கின்றன, ஆனால் சமூக ஊடகங்கள் கொண்டாடி தீர்க்கின்றன‌

தைரியமாக அக்குரல் இன்னமும் ஓங்கி ஒலிக்கட்டும்....

நீ கலக்கு ராசாத்தி......









மாட்டிறைச்சி தடை குறித்து கருத்து சொல்ல விரும்ப வில்லை : எடப்பாடி


எங்கே அந்த மான தமிழன் சீமான்? , இந்த தமிழ் முதல்வர் என்ன செய்கின்றார் என ஒரு வார்த்தை சொல்ல கூடாதா?


ரஜினியினை கத்தும் நீர் எங்கய்யா போய் தொலைந்தீர்.





"வந்தேறி முதல்வர்கள்" காட்டிய எதிர்ப்பினை கூட இந்த தமிழ் முதல்வர் காட்டவில்லை, இனி எங்காவது "தமிழ் முதல்வர்" என பேச சீமானுக்கு என்ன உரிமை?

இப்பொழுது பேசு மகனே.. தமிழக முதல்வர் தடையினை மீறி மாடு வெட்ட வேண்டும் என சொல்லி முஷ்டி உயர்த்து பார்க்கலாம்

அந்த பாரதிராஜா என்பவரையும் காணவில்லை

எலேய்.. இந்த "தமிழ்முதல்வரை", பச்சை தமிழனை ஏதாவது சொல்ல போகின்றீர்களா இல்லையா?

இல்லாவிட்டால் குஷ்பூ வீட்டு செருப்பு உங்களுக்கு அனுப்பபடும்...









 அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி




இம்முறை மோடி வெளிநாடு செல்ல பழனிச்சாமியும், பன்னீருமே காரணமாக இருக்கலாம், ஒருவர் மாற்றி ஒருவர் சென்று அழுதுகொண்டிருந்தால் மோடியும்தான் என்ன செய்வார்?

அதுவும் இனி மாட்டு பிரச்சினை அவரை தூங்க விடாது..


கிளம்பிவிட்டார், அதுவும் சும்மா செல்லவில்லை

என் 3 ஆண்டுகால‌ ஆட்சியினை பற்றி விமர்சனம் வருகின்றது, அடுத்த இரு வருடத்தில் அதனை சரிசெய்ய அவகாசம் இருக்கின்றது என சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்

இனி அந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நடக்கும் தவறுகளை சரிசெய்ய அடுத்த ஐந்து ஆண்டுகாலம் கேட்பாரோ?













 

No comments:

Post a Comment