Friday, December 16, 2016

சசிகலா எப்படி இன்னொரு நாட்டின் அதிபருக்கு கடிதம் எழுதினார்?




No automatic alt text available.


பெரும் சர்ச்சையொன்று கிளம்புகின்றது


அதாகபட்டது இலங்கை தூதர் எழுதிய கடிதத்தில் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மீணவர்களை அனுமதிக்கின்றோம் என எழுதி தொலைத்துவிட்டார் அய்யா..


அதாவது உங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கின்றோம் என்றால், அதற்கு முன் கூட்டியே சசிகலா கோரிக்கை வைத்திருக்க வேண்டும் அல்லவா?





ஆக எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலா எப்படி இன்னொரு நாட்டின் அதிபருக்கு கடிதம் எழுதினார் என சர்ச்சை வெடிக்கின்றது.

வைகோவோ, சீமானோ, திருமாவோ, திருமுருகன் காந்தி கூட எழுதாத கடித்தத்தை சசிகலா எப்படி எழுதினார் என சர்ச்சைகள்.

ஒரு மாநில முதல்வரின் அதிகாரம் கூட இல்லை அது , மத்திய அரசு மட்டுமே செய்ய கூடிய உரிமை, அதிகாரம் இது

ஏற்கனவே சசிகலா தொடர்பான சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், இது தேசிய அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது

ஒரு பன்னாட்டு நிறுவணம் தொழிற்சாலை அமைக்க வருகின்றது, கட்சியில் ஒருவரை வளைக்கின்றது என்றால் கூட சிக்கல் பெரிதாக வெடிக்காது, மாநில உரிமை அது இது என சமாளிக்கலாம்

இதனை எப்படி விடுவார்கள்?

நாளையே சந்திரபாபு நாயுடு டிரம்புக்கு கடிதம் எழுதுவார், பீகார் முதல்வர் சீனாவிற்கு எழுதுவார், இப்படி ஆளாளுக்கு எழுதினால் மத்திய அரசும் மோடியும் எதற்கு?

பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இவ்விடயம், மத்திய அரசு என ஒன்று இருப்பதையே சசிகலா மறந்துவிட்டாரா? என கொந்தளிப்பு வெளிவிவகார துறையில் கேட்கின்றது என்கின்றார்கள்

இது ஜெயாவிற்கு எழுதிய கடிதம் என சமாளிக்கலாம் என்றாலும் கடிதம் 4 நாட்களுக்கு முன்பு மிக சரியாக சசிகலாவிற்கு எழுதபட்டுள்ளது

வெளிநாட்டு அதிபருக்கு கடிதம் எழுதுவதை சசிகலா ஏதோ மாவட்ட செயலாளருக்கு எழுதியதை போல எழுதிவிட்டார் என எழுதியிருக்கின்றார் என சர்ச்சை வலுக்கின்றது

இனி என்ன நடக்கும்?

நிச்சயம் இது சாமான்ய விஷயமல்ல, ஆனால் நமக்கு ஓரளவு கணிக்க முடியும் என்பதால் தன் முகத்தில் பட்ட கரியினை மத்திய அரசு மவுனமாக துடைத்துகொள்ளும்

வெளிவராத எச்சரிக்கைகள் விடபடலாம்

அப்படியே தமிழக‌ முதல்வர் முகவரிக்கு டெல்லியிலிருந்து 1 கிலோ மிக்சர் வரலாம்

பெரும் நடவடிக்கை எடுக்க முடியாது ஏன் என்றால் சசிகலாவுடன் சேர்ந்து கோரிக்கை கடிதம் எழுதியவர் என பொன். ராதாகிருஷ்ணன் பெயரும் அடிபடுகின்றது

அதனால் மத்திய அரசு பெரிதும் சீறாது, மாறாக இனி பொன்ராதா கிருஷ்னன் இனி பாராளுமன்றத்தில் தூங்கினாலும் எழுப்பி விடாது.















No comments:

Post a Comment