Wednesday, December 21, 2016

எம்ஜியார் நினைவு நாள்.... ஜெயா டிவி காமெடி

நாளை மறுநாள் எம்ஜிஆர் நினைவு நாள், மிக பிரமாண்டமாக அனுசரிக்க அதிமுக தலமைகள் முடிவு

இத்தனை நாளும் சம்பிரதாயத்திற்கு சென்று வந்தார்கள், அம்மா அங்கு குடிபுகுந்தவுடன் நிலை மாறுகின்றது

புல்லுக்கு பாயும் நீர் நெல்லுக்கும் பாய்கின்றது பாயட்டும்

ஜெயா கல்லறை அமைந்திருப்பதால் எம்ஜிஆர் கல்லறையும் தேடபடுகின்றது, இல்லாவிட்டால் அவ்வளவுதான்

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது என்பதில் கல்லறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருந்தது

எம்ஜிஆர் விஷயத்தில் அதுவும் போய்விடும் போல‌

இதன் மூலம் தமிழகம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி இரு தலைவர்களை ஒரே இடத்தில் புதைக்காதீர்கள்

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்தபினாலும் பேச்சிருக்கும்.." என அடிக்கடி டிவியில் பாடுகின்றார் எம்ஜிஆர்

அட போங்க சார், உங்க பேச்சு எங்கே இருக்கு, எல்லாம் சின்னம்மா பேச்சாத்தான் இருக்கு என சொல்ல தோன்றுகின்றது




இப்பொழுதெல்லாம் ஆதித்யா சேனலை விட பெரும் காமெடி சேனலாக ஜெயா டிவி மாறிவிட்டது

அவ்வளவு காமெடி செய்கின்றார்கள்

இந்தியாவே தலமை செயலாளர் ராம் மோகன் ராவின் வீட்டை உற்றுபார்த்துகொண்டிருக்க, ஜெயா டிவி சசிகலாவின் முகத்தை மட்டும் காட்டுகின்றது, அதில் என்னவோ மொத்த உலகமும் அவரை கை நீட்டி அழைப்பது போல அப்படி ஒரு இம்சை

நல்லவேளையாக கவிஞர் வாலி இல்லை, இருந்திருந்தால் தாடியினை பிடித்து இழுத்துவந்து "சின்னம்மா காலடி மண்ணே.." என ஒரு பாடல் எழுதவைத்திருப்பார்கள்

தமிழகத்தில் அப்படி ஒரு வருமானவரி சோதனை நடப்பதாக ஜெயா விடி மூச் கூட விடவில்லை.

இன்னும் என்னென்ன காமெடி செய்வார்களோ தெரியாது

இன்றைய தேதியில் தமிழகத்தில் ஜெயா டிவியினை தவிர பெரும் காமெடி சேனல் எதுவுமே இல்லை..




மீணவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார்

என்ன அநியாயம் அங்கிள் சைமன், இந்த தமிழரல்லாத முதல்வர்கள் கடிதம் எழுதினால் ஒரு அர்த்தம் உண்டு, தமிழ் முதல்வரும் இப்படியே கடிதம் எழுதினால் எப்படி?

சீறுங்கள் அங்கிள் சீறுங்கள்

எங்கே சீறப்போகின்றீர்?, இப்பொழுதெல்லாம் உங்கள் வாயில் ஏதோ லேகியம் நிரம்பியிருக்கின்றது




 

No comments:

Post a Comment