Thursday, December 22, 2016

ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை.








பலவிதமான நோய்கள் தமிழகத்தில் முன்பு இருந்திருக்கின்றன, காலரா, பேதி, பிளேக் என பல இருந்திருக்கின்றன‌

ஆனால் வெள்ளையர் வருமுன் தமிழகத்தை இரு நோய்கள் ஆட்டி படைத்தன‌

ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை.


இரண்டும் வந்துவிட்டால் அம்மன் அருள் என மக்கள் ஆடி தீர்ப்பார்களாம், பெரியம்மை என்றால் பெரிய அம்மனாம், சின்னமை என்றால் சின்ன அம்மனாம்

அப்படித்தான் நம்பி வேப்பிலை அடித்து, கரகம் ஆடி விரட்டபார்த்திருக்கின்றார்கள்

ஆனாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது

நோயில் "அம்மா..பெரிய அம்மா.. சின்ன அம்மா" என முணுமுணுத்துகொண்டே இருப்பார்களாம்

படுத்தே இருக்கவேண்டுமாம், ஆனால் அம்மையினை நோக்கி கரங்கள் குவிந்திருக்குமாம்

"பெரியம்மா..சின்னம்மா" என அவர்கள் புலம்புவது நோயின் தாக்கம்.

பெரியம்மையினை எப்படி ஒழித்தார்களாம் என்றால், அந்த கிருமியினை வேறு விலங்குகளில் பெருக செய்து அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி , பின் என்னவெல்லாமோ செய்து மருந்து தயாரித்தார்களாம்

அந்த மருந்து மனித உடலில் செலுத்தபடும்பொழுது முதலில் காய்ச்சல் வருமாம், பின் பிதற்றல் வருமாம், கொஞ்ச நாளில்

பின் அதுவாக குணமடைந்துவிடுமாம்

பின் பெரியம்மை நோய் வரவே வராதாம்.

பெரியம்மை வந்து சென்றாலும் அதன் வடு இருக்கும், அதற்கு எதிர்ப்பு மருந்து கொடுத்தாலும் அந்த வடுவும் இருக்கும்

வடுக்கள் இல்லாமல் அம்மைகள் மறைவதில்லை.

அப்படி பெரியம்மை தமிழகத்தை ஒரு காலத்தில் ஆட்டிவிட்டு ஓய்ந்திருக்கின்றது, சும்மா சொல்ல கூடாது பெரும் வியாதியாகத்தான் இருந்திருக்கின்றது

இப்பொழுது சின்னமையினை எப்படி ஓழித்தார்கள் என படித்துகொண்டிருக்கின்றேன்..









No comments:

Post a Comment