Wednesday, December 21, 2016

கேரளாவில் உடை கட்டுப்பாடு

கேரளாவில் இனி கிறிஸ்தவ ஆலயங்களில் கூட உடைகட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது

அதாகபட்டது பாரம்பரியமான இந்து ஆலயங்களில் உடைகட்டுப்பாடு உண்டு, சில ஆலயங்கள் வேட்டி சேலை உடுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்கின்றன இனி எல்லா ஆலயங்களிலும் அது கடுமையாக்கபடுகின்றது

குறிப்பாக கிறிஸ்தவ ஆலயங்கள்

தமிழக கிறிஸ்தவ திருமணம் வித்தியாசமானது, மணமகன் பால் தினகரன் போலவோ அல்லது வசந்த் & கோ முதலாளி போலவோ கோட் சூட் அணிந்திருப்பார், மணமகள் தமிழ் முறைப்படி பட்டுசேலை அணிந்திருப்பார்

பாதி மேல்நாடு, மீதிபாதி நம்நாடு என குழப்பமான உடை அலங்காரம் அது.

கேரளாவில் மணப்பெண்ணும் கவுண் அணிந்துதான் வருவார், அதாவது முழுக்க மேல்நாட்டு நாகரீகம்

இப்போது அதில்தான் கண்டிப்பு விதிக்கின்றார்கள்

மணமகள் சேலையும், மணமகன் வேட்டியும் கட்டவேண்டுமாம், இதனை எல்லோரும் வரவேற்கின்றார்கள், யாரும் என் கவுண் என் உரிமை என பொங்க வில்லை

இவ்வளவுக்கும் "நாம் மலையாளிகள்". "யான் கேரளன்" என்ற ஒரு இயக்கமும் அங்கு இல்லை. ,மும்பை சிவசேனை, கொழும்பு புத்த மண்டைகள், நாம் தமிழர் போன்ற கும்பல்கள் அங்கு இல்லை

அவர்களாகவே சிந்தித்து முடிவெடுத்திருக்கின்றார்கள், கலாச்சாரம் காக்கின்றார்கள்

இங்கோ நாம் நமது பாரம்பரிய தவிலை மறந்து செண்டை மேளத்தினை வரவேற்றுகொண்டிருக்கின்றோம்

நாம் அப்படித்தான்

அங்கிள் சைமனுக்கு இந்த செய்தி எட்டலாம்?

இனி கிறிஸ்தவ திருமணத்தில் எவனாவது கோட் போட்டிருந்தால், நாம் தமிழர்கள் உட்புகுந்து மாப்பிள்ளையின் டையினை பிடித்து இழுத்து வந்து கதற கதற வேட்டி கட்டி விடுவார்களோ?

அப்படி எல்லாம் நடக்காது

இம்மாதிரி பிரச்சினைகளில் அங்கிள் சைமனிடம் எப்பொழுதும் ஒரு பதில் உண்டு

"லட்சம் பிரச்சினையோடு சுத்திட்டு இருக்கேன், இதில் வந்துட்டா கோட்டு சூட்டுண்ணு..."

கேரளாவும், கன்னடமும், தெலுங்கும், சீக்கியமும் இன்ன பிறவும் யாரும் சொல்லாமலே தன் கலாச்சாரததை காத்துகொண்டுதான் இருக்கின்றன‌

இங்கு நாங்கள்தான் காத்தோம் என ஒப்பாரி வைப்பார்கள், ஆனால் ஒரு மண்ணாங்கட்டியும் காக்கபட்டிருக்காது..

No comments:

Post a Comment