Friday, December 30, 2016

சின்னம்மா.. சின்னம்மா....




சின்னம்மாவினை விமர்சிக்காதே விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என சிலர் மிரட்ட தொடங்கிவிட்டார்கள்


பொதுவாழ்க்கைக்கு வந்த யாரும் விமர்சனங்களுக்கு தப்ப முடியாது, அதுவும் கட்சிக்கு ஒரு பணியும் செய்யாமல் சொய்ங்ங்ங்கென்று வந்து அமர்ந்தால் எல்லோரும் விமர்சிப்பார்கள்


நாமாவது நாகரீகமாக சொல்கின்றோம், இன்னும் பலர் சொல்வதை சசிகலா காண நேர்ந்தால் மன்னார்குடிக்கே ஓடிவிடுவார்





இப்பொழுது என்ன விமர்சித்துவிட்டார்கள்?

அந்த சசிகலா , ஆளும் கட்சியின் பொதுசெயலாளராகிவிட்ட சசிகலா வாய்திறந்து ஒரு வார்த்தை பேசினால்தான் என்ன? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினால்தான் என்ன?

பங்கரில் அமர்ந்து கட்டளை பிறப்பிக்கும் மாபியாக்களை போல் ஏன் நடந்துகொள்கின்றார்?

இந்த பங்கர் அரசியலைத்தான் சொல்கின்றோம், எல்லா தலைவர்களும் மக்கள் முன் வந்தார்கள் பேசினார்கள், முழங்கினார்கள்

ஏன் இத்தாலியில் இருந்து வந்த சோனியாவே இந்தி கற்றுகொண்டு பேசவில்லையா?

இதில் இந்த சசிகலாவிற்கு மட்டும் ஏன் இவ்வளவு அமைதி அல்லது ...

சரி, அவர் குரல் உங்களுக்கு தெரியுமா? சத்தியமாக எங்களை போன்ற பலருக்கு தெரியாது

நாளையே அவர் குரலில் இடைத்தேர்தல் பிரச்சாரம் அவர் செய்கின்றார் என வைத்துகொள்வோம் என வைத்துகொள்வோம்

"என்னை வாழ வைத்த புரட்சி தலைவியின் ரத்தத்தின் ரத்தங்களே, புரட்சி தலைவியின் கனவு நனவாக என்னை நம்பி வாக்களிப்பீர்..." என அவர் தொடங்கட்டும்

அந்த குரலை கேட்டு நீங்களே சிரிக்க மாட்டீர்களா? திடீரென ஒரு புதுகுரல் கிளம்பினால் உங்கள் உதட்டோரம் ஒரு புன்னகை வராதா?

அது எங்களுக்கு நிரம்ப வருகின்றது

எம்ஜிஆர் ஒரு முகமூடி, ஜெயாவும் முகமூடி அப்பொழுது பங்கரில் அமர்ந்து சிலர் இயக்கினாலும் எம்ஜிஆர், ஜெயா எனும் முகமூடிகளுக்கு ஒரு வசீகரம் இருந்தது

இப்பொழுது பங்கரில் இருப்பவர்களை முன்னோக்கி கொண்டுவந்தால் எப்படி?

பாரதிராஜா அருமையான இயக்குநர், ஆனால் முதல்மரியாதை படத்தில் ராதாவோடு "பூங்காற்று திரும்புமா" என பாடியிருந்தால் எப்படி இருக்கும்?

சசிக்குமா?

இப்பொழுது அப்படித்தான் இருக்கின்றது

உங்கள் சின்னம்மா உங்களுக்கு பெரிது, உங்கள் கட்சிக்கு பெரிது என்றால் உங்களோடு வைத்துகொள்ளுங்கள்

எம்மிடம் வந்து எழுதாதே என சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

அக்கட்சி தனியார் கம்பெனிதான், சீனியாரிட்டிபடி மேனேஜர் பதவிக்கு வராமல் ஏதோ ஒரு டீ கப் கழுவிகொண்டிருந்த ஒரு
வந்துவிட்டார், அது கம்பெனி விவகாரம்

ஆனால் கம்பெனியின் ஆணிவேர் என்ன? மக்கள் வழங்கும் வோட்டு, அதுதான் ஆதாரம்

அந்த கஸ்டமராகிய மக்கள், கம்பெனியில் நடைபெறும் சில குழப்பங்களை கண்டு அஞ்சமாட்டார்களா?

இவரை எல்லாம் வைத்தபின் எப்படி இந்த கம்பெனியினை நம்ப, அதுவும் ஏராளமான குற்றசாட்டுக்களை கொண்ட ஒருவரை , அனுபவமிலா ஒருவரை கொண்டு வைத்தால் என்ன ஆகும் என பேசமாட்டார்களா?

பேசுவதற்கு முழு உரிமையும் அந்த மக்களிடம்தான் இருக்கின்றது

அந்த மக்களில் ஒருவராகத்தான் பேசுகின்றோம், பிடிக்காவிட்டால் விலகி விடலாம்

அதனை விட்டு எம்மை மிரட்டுவது எப்படி சரியாகும்? உத்தரவிட அது என்ன‌ மன்னர்குடியா? அல்ல மன்னார்குடி

சரி முதலில் உங்கள் புது தலைவியினை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 4 வார்த்தை உருப்படியாக பேச சொல்லுங்கள்

வேண்டாம், புத்தாண்டு வாழ்த்தினையாவது ஒரு கேமரா முன் சொந்த குரலில் சொல்ல சொல்லுங்கள்

ஒரு 5 நிமிடம் சொன்னால் போதும்

செய்வார்களா? செய்ய சொல்வீர்களா?

போங்கடா டேய்..









அதிமுக பொதுகுழுவினையும் அதன் சின்னம்மா ஆதரவாளர்களின் கொண்டாட்டத்தையும் ஜெயா டிவி சொல்லிகொண்டே இருந்தது ஆச்சரியமல்ல

ஆனால் சன்டிவி அதனை பெரும் செய்தியாக சொல்லிகொண்டிருந்தது தான் ஆச்சரியம்?

ஜெயா டிவியின் வேலையினை சன் டிவி ஏன் செய்தது?


ஏதும் உள்குத்து இருக்குமோ?

ஒரு கட்சியினை இன்னொரு கட்சிதான் புரிந்துகொள்ள முடியும்போல







No comments:

Post a Comment