Saturday, December 17, 2016

கலைஞரின் முத்திரை..

https://youtu.be/ku4lmjqxbxA




நாம் திமுகவின் ரகசிய பிரிவு என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அப்படி எல்லாம் அல்ல, திமுக மீது பெரும் அபிமானம் ஏதும் இல்லை.


கலைஞர் என்பவர் முழுக்க ஏற்றுகொள்ளும் அரசியல்வாதி அல்ல, ஆனால் அதே நேரத்தில் அவரை முற்றிலும் விலக்கியும் விட முடியாது


எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தது வானத்து விண்கல் பூமியில் விழுவது போல ஒரு விபத்து, அது விழுந்து பெரும் நெருப்பினை உண்டாக்கி, பின் புகை மூட்டம் உண்டாகி அது இன்னும் தெளியவில்லை





ஆனால் கலைஞர் போன்ற ஒரு அரசியல்வாதி உருவாக வேண்டிய காலம் இருந்தது, சமூக அமைப்பும் இந்திய யதார்த்தமும் இருந்தது

அது மிக சரியாக கலைஞரை உருவாக்கி காட்டியது, அவர் அப்படித்தான் உருவானார்

இந்த முரண்பாடான சமூகத்தில் கலைஞர் போன்றோரின் தேவைகள் இருந்துகொண்டே இருக்கும், அவர் இல்லையென்றாலும் அவர் சாயலில் இன்னொருவார் வந்தே தீருவார்

அதாவது இச்சமூகத்தின் , இந்திய அரசியலின் பல விஷயங்கள் மாறாதவரைக்கும் கலைஞரின் அரசியலுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும்

இன்னொரு எம்ஜிஆர், இன்னொரு ஜெ உருவாக வேண்டிய அவசியம் இல்லை, அப்படி ஒரு தேவையும் இல்லை வரவும் வராது

பின்னொரு ஒரு காலத்தில் தமிழகத்தையும் அதன் அரசியலையும் படிப்பீற்களாயின் கலைஞர் காலத்தால் உருவானவர் என்பதையும், இந்த எம்ஜிஆர் கோஷ்டி அவசியமே இல்லாதது என்பதையும் உணர்வீர்கள்.

அம்மனிதரை முழுக்க ஏற்கவும் முடியாது, ஆனால் நிச்சயம் தவிர்க்கவும் முடியாது

அதுதான் கலைஞரின் முத்திரை..








No comments:

Post a Comment