Saturday, December 31, 2016

"கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை"

https://youtu.be/cX7nZIAgV4Q



ஏதோ ஒரு படத்தில் விவேக் கை இல்லாதவர் போல நடிப்பார், ஆனால் அந்த கையினை கண்டுவிட்டு வடிவேலு ஓடிவருவார்


"பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.புரூஸ் பார்த்துட்டேன்"


அப்படி சின்னம்மா பேச்சினை கேட்டுவிட்டவுடன் நானும் ஓடினேன், "கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை"





ஓடிவிட்டு மெதுவாகத்தான் அவரின் பேச்சினை கவனித்தேன்

ஒரு சாமன்யபெண் சசிகலா

30 வருடம் ஜெயாவுடன் இருந்ததால் அந்த பேச்சு ஸ்டைல் ஒட்டி இருக்கலாம், அப்படி அடியொற்றி இருக்கின்றது, ஜெயாவிற்கு எழுதி கொடுத்தவர் அப்படியே சசிகலாவிற்கும் கொடுத்திருக்கின்றார்

ஆக அது சசிகலாவின் இயல்பான குரல் அல்ல, ஆனால் அப்படியே அதிமுக குரல்.

உண்மையில் அதிமுகவினர் எங்கிருந்து பட்டம் எடுப்பார்களோ தெரியாது, இனி சசிகலா "புதுமை தலைவி" என அழைக்கபடுவாராம்

வரலாற்றில் வேலைக்காரராக வந்து அரசினை கைபற்றியவர் மிக சிலர்

ஹைதர் அலி, நெப்போலியன் என வெகு சிலர்

அந்த புதுமையினை சசிகலா செய்திருப்பதால் அவர் "புதுமை பெண்" என அழைக்கபடுவதில் ஆச்சரியமில்லை

புரட்சி கட்சி இப்பொழுது புதுமை கட்சியாகிவிட்டது

அதனால் அந்த கட்சியினர் இனி "புதுமை பித்தன்கள்" என அழைக்கபடுவார்கள் என எதிர்பார்க்கலாம்

பொறுப்பும் வந்தாகிவிட்டது, பேச்சும் வந்தாகிவிட்டது இனி என்ன?

அடுத்த பேச்சு விரைவில் எப்படி இருக்கும்?

"நான் கனவிலும் கற்பனையும் நினைக்காத ஒன்று இது" என முதல்வர் நாற்காலியில் இருந்து சசிகலா பேசிகொண்டிருப்பார்

2016ல் டிசம்பர் 31ல் ஒரு இயக்கத்தின் தலைவியாக சசிகலா பேசுவார் என பிரம்மன் எழுதிய எழுத்து நிறைவேறிவிட்டது.

பன்னீர்செல்வம் எப்பொழுதும் இடைக்கால முதல்வர் என அவர் தலையில் பிரம்மன் எழுதியிருக்கின்றான்

அவர் தலைவிதியினை எழுதும்பொழுது விட்டு விட்டு எழுதினானோ என்னமோ?














No comments:

Post a Comment