Wednesday, December 14, 2016

ரூ 2000 நோட்டு மற்றும் சில.....

 



ஆயிரம் ஐநூறு நோட்டினை பதுக்குகின்றார்கள், கறுப்பு பணம் பெருகுகின்றது அதனால் அவை செல்லாது, உங்களிடம் இருந்தால் கொடுத்துவிட்டு புதுநோட்டு வாங்குங்கள் என மக்களை பாடாய் படுத்திறது அரசு


பின் என்ன செய்தது?


இதோ மொத்தமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு, இது தொழில்நுட்பம் மிக்கது, பதுக்கினால் அதுவாக மோடி காதில் இருக்கும் இடம் சொல்லிவிடும் என ஏராள விளம்பரத்துடன் 2 ஆயிரம் நோட்டினை வெளியிட்டார்கள்





வெளியிட்டு மூன்று வாரம் ஆகியிருக்கலாம், என்ன நடந்தது?

மிக வசதியாக எல்லாரும் பதுக்கினர், ரெட்டி வீட்டில் கோடி கணக்கிலும், பெங்களூர், கோவா என நாடு முழுக்கவும் பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்

தெரிந்தது இவ்வளவு, தெரியாதது எவ்வளவோ?

இனி மத்திய அரசு என்ன செய்யும்? இவர்கள் ஒரு மாதிரியானவர்கள் அல்லவா? அடிக்கடி அதிரடி காட்டாவிட்டால் தூங்க மாட்டார்கள்

இனி 2 ஆயிரம் நோட்டு செல்லாது விரைவில் 5 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் விடபடும் என சொன்னாலும் சொல்வார்கள்

அதையும் பதுக்குவானே என்றால், அதனை வங்கியில் ஒப்படைக்க சொல்லிவிட்டு 10 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒப்படைக்க சொல்லும் திட்டம் உண்டு என்பார்கள், சொல்லிவிட்டு வந்தே மாதரம் என்பார்கள்.

2 ஆயிரம் ரூபாய்க்கே சில்லறை இல்லை, இதில் 5 ஆயிரம் என கிளம்பிவிட்டால் என்ன செய்ய?

இதோ 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்குகின்றார்கள், எந்த நோட்டும் மோதி காதில் ஜிபிஸ் மூலம் இப்படி சொல்லவே இல்லை

"என்ன ரிசர்வ வங்கி வச்சிருந்தாக, பின் ஸ்டேட் வங்கி மேனேஜர் வச்சிருந்தாக, அதன் பின் மளிக கடையில வச்சிருந்தாக, அப்புறம் ஜவுளி கடையில வச்சிருந்தாக , ஒரு எம் எல் ஏ கட்டிலுக்கு அடியில் வச்சிருந்தாக, இப்போ ரெட்டி வீட்டில மாட்டிகிட்டேன்...."








காவேரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மறுபடியும் கர்நாடகம் பெப்பெப்ப காட்டுகின்றது


முழு தமிழச்சி சின்னம்மா வழிகாட்டலில், பச்சை தமிழன் பன்னீர்செல்வத்தின் அரசு எப்படி பிரச்சினையினை எதிர்கொள்ள போகின்றது என பார்க்கலாம்


பாரதிராஜா,சீமான் ஆசைபடியே இதோ பச்சை தமிழன் முதல்வராகிவிட்ட்டான், தமிழன் முதல்வரானால் காவேரி பிரச்சினை தீரும் என்றவர்கள் இப்போது சத்தமே இல்லை


முதல்வர் தமிழர், அவரின் ராஜகுருவும் தமிழச்சி பின் ஏன் சிக்கல் என கேட்டால் என்ன சொல்வார்கள்?


மிக எளிதாக சொல்வார்கள்


தமிழன் பிரதமரானால் இப்பிரச்சினை நொடியில் தீரும், வேண்டுமானால் "சின்னம்மாவினை" பிரதமராக்கி பார்ப்போமா?






சரக்கு மற்றும் சேவை வரி அடுத்து ஆண்டு அமல்படுத்தப்படும்: பிரதமர் மோடி


சரக்கு மற்றும் சேவை வரி எத்தனை சதவீதம் என இன்று வரை முறையாக அறிவிக்கவில்லை, சதவீத்தத்தை பொறுத்து விலைவாசி ஏறும்


அடுத்த ஏப்ரலில் முதல் அந்த வரி அமலுக்கு வருமாம், அதாவது கரன்சி சிக்கல் தீர்ந்து மக்கள் ஏடிஎம்மில் சுலபமாக பணம் எடுக்கும்பொழுது மறுபடியும் ஜிஎஸ்டி என சொல்லி பிடுங்கி கொள்வார்கள்.


1000 ரூபாய், 500 ரூபாயினை பிடுங்கி கொண்டது, இனி ஜிஎஸ்டி என சொல்லி பிடுங்குவார்கள்,


இன்னும் என்னவெல்லாம் பிடுங்க போகின்றார்களோ தெரியவில்லை







 

No comments:

Post a Comment