Thursday, December 22, 2016

விடிய விடிய நடக்கின்றதாம்....

ஏதோ தமிழ்நாடு தனிநாடு போலவும், இங்கு இந்தியா எனும் அண்டைநாடு உட்புகுந்து சோதனை நடத்துவது போலவும், இதனால் இறையாண்மை மீறிய செயல் என ஐ.நா சபைக்கு செல்வது போலவும் சிலர் பேசிகொண்டிருக்கின்றனர்.

துணை ராணுவம் சென்னைக்கு வந்திருப்பது அநீதியாம், அட பதர்களா வெள்ள மீட்பு பணிக்கு வரும் ராணுவம், இந்த கொள்ளை மீட்பு பணிக்கு வரகூடாதா?

காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, மாநில தலமை செயலாளர் வீட்டில் ரெய்டு நடக்கும்பொழுது என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

ஏன் குதிக்கின்றீர்கள்?

குற்றம் இல்லாதவன் வீட்டில் எந்த ரெய்டு நடந்தால் என்ன? மாடியில் கனமில்லாதவனுக்கு அடுத்த வீட்டில், நண்பன் வீட்டில் என்ன நடந்தால் என்ன?

மத்திய அரசின் வருமான வரி எனும் அரசு அமைப்பு தமிழக தலமை செயலாளர் எனும் அரசு பணியாளரை சோதனை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

என்ன அட்டகாசம் இது?

இவர்கள் ஊழல்களாக செய்வார்களாம், அதனை யாரும் தட்டிகேட்க கூடாதாம். இவர் ஆட்சி என்றால் அவர் அமைதி ஆகிவிடுவாராம், அவர் ஆட்சி என்றால் இவர் அமைதியாகி விடுவாராம்

இருவரும் மாறிமாறி விளையாடுவார்களாம், இந்த கொடுமையினை களைய மத்திய அரசு முன்வருமானால் அது தமிழகம் மீதான படையெடுப்பாம்

அப்படியானால் தமிழகத்தை பிரித்துகொடுங்கள் நாங்கள் கொள்ளையடிப்போம் என்றாவது பகிரங்கமாக மிரட்டலாம் அல்லவா? அது கிடையாது

இந்தியா எனும் நாட்டில் சகல பாதுகாபான மாநிலமாக இருந்துகொண்டு மாநிலம் எனும் பெயரில் கொள்ளையடிப்போம், இது எங்கள் உரிமை என சொல்வது அறமாகாது

கொடநாட்டு மாளிகையும், சிறுதாவூர் பங்களாவும் என்ன ஒரே நாளில் இந்திரலோக மயன் வந்து கட்டியதா?

கேசட் கடை வைத்திருந்த சசிகலாவின் சொத்து மதிப்பும், பூமாலை என கேசட் கடை வைத்திருந்த மாறன் குடும்பத்தின் சொத்துமதிப்பும் இன்று என்ன? (கேசட் கூட ஒற்றுமையா??? )

இவர்களும் பண பதுக்கலை ஊழலைஒழிக்கமாட்டார்கள், மத்திய அரசு களமிறங்கினாலும் விட மாட்டார்கள்.

மத்திய அரசு எப்படி களமிறங்கிற்று? புதிய கரன்சிகள் பதுக்கபடுகிறதே என களமிறங்கி பார்த்தால் புதையல் மழை கொட்டுகின்றது, விடுமா? வோட்டுக்கு 2 ஆயிரம் கொடுக்கும் ரகசியம் இதோ வெளிவந்துகொண்டிருக்கின்றது

மக்களுக்காக ஏடிஎம் மையங்களுக்கு போக வேண்டிய புது கரன்சி, ரெட்டி வீட்டிலும், ராவ் வீட்டிலும் குவிந்திருக்கின்றது, வங்கிகளில் பணமில்லை

வங்கியில் பணமில்லை என குதிப்பவனும் இவனே, அதற்கு வழிசெய்ய பதுக்கிய பணத்தை அரசு மீட்க வந்தால் ஆரிய அட்டகாசம் என குதிப்பவனும் இவனே

விசித்திரமான சிந்தனைகள்.

திராவிடத்தை, ஆரியம் நசுக்குகின்றது என ஒப்பாரி வைப்பவர்கள் எப்படி சிந்திக்க வேண்டும்?

பிராமணர் அல்லோதோர் சங்கம் என தொடங்கிய அந்த சிறுபொறியினை பெரியார் பெரும் தீயாக மாற்றினார், சிங்கார வேலர், தாளமுத்து நடராசன், ரெட்டைமலை சீனிவாசன் , பட்டுகோட்டை அழகிரி என பெரும் படையினை உருவாக்கினார்

அதில் ஆரியம் தோற்றது, பின் அண்ணா தலமையில் திராவிடம் தமிழகத்தின் அரியணையில் ஏறியது

அதன் பின் அந்த போர்குண கட்சி, பண வேட்டை கட்சியாக மாறியது. சினிமாவின் நாடக தன்மை கட்சியிலும் ஊடுருவியது

விளைவு என்ன ஆனது?

பெரியாரின் வாரிசுகளாக பெரும் போராளிகளாக திராவிட சிங்கங்களாக பலர் வந்திருக்க வேண்டும், வந்து காப்பாற்றியிருக்க வேண்டும்

ஆனால் இன்று திராவிட பெரியார் கட்சியின், அண்ணா கட்சியின் வாரிசாக வந்திருப்பது யார்?

எம்ஜிஆர், ஜெயா, சசிகலா, பன்னீர் செல்வம் ஒருபுறம்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன் குரூப்ஸ் மறுபுறம்

வைகோ, வீரமணி போன்ற காமெடி கொள்ளையர் இன்னொருபுறம்.

இதில் யார் பெரியார் ஏற்றிவைத்த அந்த நெருபினை இன்னும் பிடித்திருக்கின்றார்கள்?

திராவிட முதல்வரான பன்னீர்செல்வத்திற்கு பெரியார் கொள்கை தெரியுமா? அட சுயமரியாதை என்றால் என்னவென்றாவது தெரியுமா?

பின் மத்திய அரசு என்ன? சீனாவோ பாகிஸ்தானோ கூட சென்னைக்கு வரும்

அந்த திராவிட பாதுகாப்பினை நாமே அழித்தோம், நம் கொள்ளைகளால் டெல்லிக்கு நாமே பிடிகொடுத்தோம் என ஒரு பயலும் பேச காணோம்

இதில் சிலருக்கு வேறு கவலை

அதிமுகவினை குறிவைக்கும் பாஜக என் திமுகவினை குறிவைக்கவில்லை

திமுகவினை சம்பத், எம்ஜிஆர், வைகோ, சர்காரியா, 3ஜி என பல வகைகளில் எத்த்தனையோ கனைகளை வீசிபார்த்தார்கள், பெரும் புயலை அனுப்பித்தான் பார்த்தார்கள்

எத்தனை முறை உடைந்த கட்சி அது

கலைஞர் எனும் பெரும் சாமார்த்தியவாதியின் ஆற்றலில் அது நிற்கின்றது

அவ்வகையில் அதிமுகவிற்கு ஒரு சோதனையும் வரவில்லை

ஜெ ஜாணகி என பிரிந்தது கூட ஜெயாவினை பெரும் பிம்பமாக காட்டவே நடந்த நாடகமே அன்றி வெறல்ல, அதுவும் பின்பு இணைந்தது

இன்று அந்த கட்சி பெரும் சோதனையினை சந்திக்கின்றது

அதாவது 1970களில் இந்திரா கலைஞருக்கு கொடுத்த அதே சோதனைகளை இன்று அதிமுக சந்திக்கின்றது

அன்று திமுகவிற்கு எதிராக வீசிய புயல் பெரிது

திமுக எனும் கப்பலை அன்று நங்கூரமிட்டு நிறுத்தி , பின் சுக்கானை சுழற்றி
அந்த எதிர்திசை காற்றை, நிலைதிசை ஆக்கி. அதாவது அந்த எதிர்புயல் காற்றையே தன் கப்பலை தள்ளசெய்த பெரும் சாசகம் அவர் காட்டினார்.

அதிமுகவில் அத்தகைய சாமர்த்தியசாலி ஒருகாலமும் இல்லை, சும்மா கலைஞர் எதிர்ப்பு என சொல்லி திரையுலக பிம்பங்களை, பிராமணிய ஆதரவுகளை வைத்தே காலத்தை கடத்திய கட்சி அது

இன்று அது பல்லிளிகின்றது, ஒரு சோதனையினை எப்படி சமாளிக்க என தெரியாமல் தடுமாறுகின்றது

கலைஞரை கட்டுமரம் என விமர்சித்த அந்த கட்சி புயலில் சிக்கிய கட்டுமரமாக புரட்டி எடுக்கபடுகின்றது.

நிம்மதியாக அரசியல் செய்ய ஒருகாலமும் முடியாது, முடியவே முடியாது

அரசியலில் புயல்கள் வீசிகொண்டேதான் இருக்கும், சமாளிக்க வேண்டும்

அதனை விட்டுவிட்டு திராவிடத்தை ஆரியம் விழுங்குகின்றது என்றால் மறுபடி பெரியாரின் கொள்கைகள் கொண்ட ஒரு தலைமுறையினை ஆட்சிக்கு கொண்டுவாருங்கள் முடியுமா?

அல்லது தனிதமிழ்நாடு வேண்டும் என கேளுங்கள் முடியுமா?

இரண்டையும் விட்டுவிட்டு ஒரு நாட்டிற்குள் தனிநாடு என்பது போல் வாழ்வோம், கொள்ளையடிப்போம் என்பது எவ்வகை நியாயம்??

திராவிட் கொள்கைகள் நிலைத்திருக்க வெண்டுமென்றால் குறைந்தபட்சம் அதிமுக உருவாகியிருக்க கூடாது, உருவாகி இருந்தாலும் இந்த அளவு வலுவாகியிருக்க கூடாது

அந்த வலுவே திமுகவினை பல சிக்கலில் தள்ளியது, பல சர்ச்சைகளில் திமுகவும் சிக்க நேரிட்டது

அப்பிளவு நடந்திருக்காவிட்டால் இன்றுவரை தமிழகம் என்பது எந்த அந்நிய சக்தியும் புகாத கோட்டையாக இருந்திருக்கும்

இன்று எல்லாம் நடந்துவிட்ட நிலை, காலம் கடந்துவிட்டது. அதிமுக எனும் கட்சி எதற்காக உருவாக்கபட்டதோ அதனை நோக்கியே அதன் முடிவும் சென்றுகொண்டிருக்கின்றது

இந்த குழப்பமான நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டுகுரியவை

எதனை எப்பொழுது செய்யவேண்டும் என ஒரு காலம் உண்டு, மத்திய அரசு அந்த காலத்தில்தான் செய்கின்றது

ஒரு பயலையும் விட கூடாது மத்திய அரசே, இந்த பேனர் கட்டியன் முதல் ஸ்டிக்கர் ஓட்டியவன் வரை அமுக்கி பிடியுங்கள், பிடித்து உலுக்குங்கள் ஏராளம் கொட்டும்

இந்த முட்டாள் சமூகத்தை திருத்த பிரம்பினை கையாள்வது ராஜநீதியே, ஏற்றுகொள்ள கூடியதே

விடிய விடிய  நடக்கின்றதாம், அப்படியாவது தமிழகத்திற்கு விடியட்டும்

No comments:

Post a Comment