Wednesday, December 21, 2016

எல்லா காலத்திலும், யாராலும் வீழ்த்தமுடியாத ஆலமரம்




அந்த மரத்தின் ஆணிவேர் சரிந்ததில் அதில் கூடுகடியிருந்த பறவைகள் எல்லாம் பரிதவிக்கின்றன, சில பறவைகள் வேர்தான் அறுந்திருகின்றது, கொஞ்ச நாள் பழம் பழுக்கத்தான் செய்யும், இந்த‌ கிளையில் சிலகாலம் தங்கலாம் என சிந்திக்கின்றன,


சில பறவைகள் முன்பு அம்மரத்திற்கு முட்டு கொடுத்த்த கம்பு ஒன்று வேராக தாங்கும் என அதனையே வேர் என சொல்லி கானம் இசைக்கின்றன‌.


அதற்கும் சில பறவைகளும் அவைகளின் கூகுட்டைகளும் ஆம் இந்த முட்டு கம்பு வேராக தாங்கும் என உறுதியளிக்கின்றன‌





ஆணிவேர் வேறு முட்டு கம்பு வேறு என சிந்திக்கும் தன்மை அவர்களிடம் இல்லை

ஒரு சில பறவைகள் பறக்க எத்தணிக்கின்றன, உண்மை அவைகளுக்கு புரிகின்றது

தோட்டத்து பறவைகளே, இந்த சரிந்த மரம், அதோ அங்கு தெரியும் பெரும் ஆலமரத்தின் விதையிலிருந்து உருவானது

இளைப்பாற விரும்பும் பறவைகளுக்காக அது தன் கிளைகளை விரித்து காத்தே இருக்கின்றது

ஆணிவேர் தவிர, அதற்கு பல விழுதுகளும் உண்டு. ஏகாப்ட்ட புயல்களும் புல்டோசர்களும் அதனை வீழ்த்த எண்ணி முடியாமல் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடியே விட்டன‌

சிக்கலில் இருக்கும் பறவைகளே, அதன் மனது பெரும் விசாலமானது. ஆலமரமான தன்னை கட்டுமரம் என விமர்சித்தவர்களை கூட அரவணைக்கும் பக்குவம் கொண்டது

யாரும் அங்கு செல்லலாம், அதன் நிழலில் அமர்ந்து உறங்கி, உறவாடிய ஒரு காக்கை ஒன்று, பின் அம்மர பறவை கூட்டத்தின் ஒரு பிரிவினை நான் கழுகு உங்களை எல்லாம் உயர் பறக்க வைக்கின்றேன் என அழைத்து சென்றது

அப்பாவி பறவைகளும் அந்த மரத்தின் மீது எச்சம் கழித்துவிட்டு பறந்தன, மரம் அமைதி காத்தது

பிரிந்த பறவைகளுக்கு அது கழுகு அல்ல, காகம் என்பதும் ஒரு மாயபுலியின் பிடியில் அந்த காகம் சிக்கி இருப்பது தெரிந்ததும் வருந்தின, தவித்தன

அந்த மரம் பின்பும் அந்த பறவைகளை ஏற்றுகொண்டது

அந்த காக்கா கூட்டத்து பறவையொன்று, திசைமாறி தோட்டத்து பக்கம் சென்றது, கிடைத்த பழத்திற்காக வளர்த்த மறத்தை அடிகடி குத்தி குதறியது

இன்று தோட்டத்து மரமும் சாய்ந்துவிட்டது

அந்த பறவை வந்தாலும் அந்த ஆலமரம் ஏற்றுகொள்ளும், கொஞ்சம் கூட வருந்தாமல், காயபடுத்தாமல் புன்னகையோடு ஏற்றுகொள்ளும்

அவ்வளவு ஏன்? அந்த காகமே வந்து புகலிடம் இல்லை என்றாலும் அந்தமரம் இளைப்பாறுதல் கொடுக்கும்

ஆக ஆங்காங்கு பரிதவிக்கும் பறவைகளே, அந்த முட்டுகொம்பு ஆணிவேராகும் என கனவு காணும் பறவைகளே

அந்த ஆலமரத்திற்கு திரும்புங்கள், பெரும் வேரும் அது இல்லை என்றாலும் தாங்கும் பெரும் விழுதுகளும் அங்கு உண்டு

புயலுக்கும், மழைக்கும் தடுமாற அது கட்டுமரம் அல்ல‌

எல்லா காலத்திலும், யாராலும் வீழ்த்தமுடியாத ஆலமரம்







கொசுறு


வைகோவிற்கு காட்டிய எதிர்ப்பினை திமுக உறுப்பினர்கள், அந்த எதிர்ப்பினை ஈழபோர் நிறுத்துவதில் காட்டியிருந்தால் அது ஆட்சிக்கு வந்திருக்குமாம் ஒருவர் சொல்லிகொண்டிருக்கின்றார்




அப்படியானால் ஈழப்போருக்கு ஒப்பாரி வைத்த அங்கிள் சைமன் ஆளும் கட்சியாகவும், வைகோ எதிர்கட்சியாகவும் அல்லவா வந்திருக்க வேண்டும்?

அதிமுக ஈழப்போரினை நிறுத்திதான் ஆட்சிக்கு வந்தது என்றும், இன்று சசிகலா முதல்வராக ஆசைபடுவது ஈழம் அமைத்த காரணத்தால் என நம்பி தொலையுங்கள்...




 


No comments:

Post a Comment