Saturday, December 24, 2016

மலேசியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பாட்டி தாத்தாவோடு தன் வாழ்வின் முதல் கிறிஸ்துமஸை மகள் கொண்டாட துவங்குகின்றாள், அவளை பொறுத்தவரை மிக மகிழ்வான தருணம்


வழக்கமான சனி, ஞாயிறு கிழமைகளில் மீன் பின்னாலும், கோழி பின்னாலும் ஓடிகொண்டிருக்கும் என்னை இந்த இரவில் பிடித்து சர்ச்சுக்கு இழுத்து சென்றார்கள்


மலேசியாவில் கத்தோலிக்கர் அதிகம், கத்தோலிக்க ஆலயங்களும் அதிகம், ஆனால் பெரும் கூட்டம்




இது சீனர்கள் அதிகமான பகுதி, சீனத்திலும் ஆங்கிலத்திலும் திருப்பலி உண்டு, நமக்கு இரண்டுமே புரியாது எனினும் ஆங்கிலம் கொஞ்சம் புரியும் என்பதால் அதற்கு ஆஜர்


மலேசிய மக்களுக்கே உரித்தான புன்னகையுடன் அவர்கள் சூழ்ந்து நிற்க, திருப்பலியில் மகிழ்வுடன் பங்குகொள்ள முடிந்தது, எங்கும் உற்சாகம்


கிறிஸ்மஸ் மரம் முதல் அட்டகாசமான தோரணம், அழகான குடில் அமைத்திருந்தார்கள்


திருப்பலி முடிந்தும் "சைலண்ட் நைட் ஹோலி நைட்" "ஜாய் டூ த வெர்ல்ட்" அந்த பிரத்யோக பாடல்களை இசைத்தார்கள்


மலை வடிவில் குடில், உள்ளே பாலகன் யேசு அருகே ஆட்டு இடையர்கள், சுற்றிலும் ஆடுகள்


இந்த ஆங்கில பாடல்களையும் மீறி அந்த பாடலே மனதில் ஓலித்தது


"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்" எனும் பாடல் அது


கவியரசரின் அந்த தாலேலோ பாடல் மிக முற்றிலுமாக இந்த கிறிஸ்மஸ்க்கு பொருந்தும், அவரின் இயேசு காவிய வரிகளும் நினைவுக்கு வந்தன‌


"ஜோதிமணி பெட்டகமே, சுடரொளிய கண்மணியே, ஆதி மகனாய் பிறந்த அருந்தவமே தாலேலோ


வானளந்த திருக்குமாரா, மனிதகுல மருத்துவனே, தேன்மதுர திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்" எனும் வரிகள் மிக அற்புதமானவை


அவ்வரிகளே இந்த குடில் காட்சிகளை பார்க்கும்பொழுது நினைவுக்கு வரும்


கிறிஸ்மஸ் தொடங்கியாயிற்று....


கிறிஸ்மஸ் என்றால் என்ன என புரிந்தும் புரியாமல் கொண்டாடி கொண்டிருக்கின்றாள் மகள்


புரியாத வயதில் புரியாத விஷயங்களை கொண்டாடுவதுதான் ஒரு சுவாரஸ்யம், அந்நினைவுகளே பின்னர் பசுமையாக மனதில் தங்கும்


மெர்ரி கிறிஸ்மஸ் என கண்ணில்பட்ட எல்லோருக்கும் சொல்லிகொண்டே இருக்கின்றாள்...


வண்ணமயமான விளக்குகளில் கிறிஸ்மஸ் ஜொலிக்கின்றது


நமது மனமோ சொந்த‌ கிராமத்தையும், அந்த சின்னஞ்சிறிய ஆலயத்தையும் சுற்றி சுற்றி வருகின்றது..


எங்கே போனாலும் கூடவே வந்து தொலைவது நிழல் மட்டுமல்ல, சொந்த மண்ணின் பசுமையான நினைவுகளும் அந்த ஏக்கமும் கூட. அதனை கழற்றிவிட ஒருகாலமும் முடியாது.


அந்த குடிலை மறுபடியும் பார்க்கின்றேன், அதே வரிகள்


"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினை போல்..."



No comments:

Post a Comment