Monday, December 19, 2016

காலைக் கதிர்கள்...




Image may contain: 1 person, close-up







எங்கே திரும்பினாலும் சின்னம்மா வாழ்க என போஸ்டர்கள் பேனர்கள், ஜெயா டிவி முழுக்க முழுக்க சின்னம்மா டிவியாகிவிட்டது இனி பெயர் மாற்றம் மட்டும்தான் பாக்கி

இணையத்திலும் அதே அழிச்சாட்டியம்

முகநூலில் 4 பதிவுகள் வந்தால் அதில் 3 எங்காவது சின்னம்மா என ஒட்டபட்ட பேனரின் படமாக இருக்கின்றது


அவர்களுக்கு சின்னம்மா, சித்தப்பாதான் திரும்பும் இடமெல்லாம் தெரிகின்றார்கள்

எமக்கு சின்னதம்பி குஷ்பூ மட்டும்தான் கண்ணுக்குள்ளே நிற்கின்றார்

அவர்கள் சின்னம்மா, சித்தப்பா வாழ்க என சொல்லிகொண்டே இருக்கட்டும்

நாம் இப்படி சொல்லலாம்..

"சின்னதம்பி" குஷ்பூ வாழ்க...








முத்துராமலிங்க தேவரை கடுமையாக எதிர்த்தவர் பெரியார், பெரியாரின் வழி வந்தவவை அண்ணாவும் திமுகவும்


பின் அண்ணா திமுக தோன்றி பிள்ளையார் சுழி போட்டது, இன்று முக்குலத்தோர் பேரவைகள் சசிகலாவினை பட்டவர்த்தனமாக பட்டம் சூட அழைக்கின்றது


என்ன நடந்திருக்கின்றது?





தேவரின் வழி வரும் கூட்டம், பெரியாரின் பின் சென்ற‌ ஒரு பெருங்கூட்டத்தை அப்படியே சுருட்டி விழுங்கி இருக்கின்றது.

வரலாறு எப்படி எல்லாமோ மாறிகொண்டிருக்கின்றது.

காரணம் யார்?

அண்ணா என் வழிகாட்டி என அடிக்கடி முழங்கி அண்ணாயிசம் பேசிய எம்ஜிஆரும், அவருக்கு பின் எம்ஜிஆரிசம் பேசிய ஜெயலலிதாவும்

ஆக பெரியார் பற்ற வைத்த பெரும் தீ மீது தண்ணீர் ஊற்றியிருக்கின்றார் ராம்சந்திரன், அதன் மீது மண்போட்டு மூடியிருக்கின்றார் ஜெயலலிதா

இன்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயா, சசிகலா எல்லோரும் ஒரே வரிசையில் சிரிக்கின்றார்கள்

அண்ணா முடிந்தால் எழுத்து கல்லறையினை பிய்த்துகொண்டு ஓட நினைக்கும் நேரமிது

இதனை எல்லாம் நினைக்கும் பொழுது, தலைவன் எம்.ஆர் ராதா சொன்ன சொல்லே நினைவுக்கு வருகின்றது

"ஏம்பா ராமச்சந்திரா உனக்கெல்லாம் எதுக்கு அரசியல்???"




எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்

ஓஹோ...கட்சி தலமை மட்டும்தான் வோட்டு போடுமா?, விமர்சிக்க தகுதியில்லாதவன் இவர்கட்சிக்கு வாக்களிக்கவும் தகுதியில்லாதவன் ஆகிவிடுவான் அல்லவா?

பொதுவாக அரசியல்வாதிகள் இம்மாதிரி கொதிக்க மாட்டார்கள், ஆனால் அரசியல் புரோக்கர்கள் கொதிப்பார்கள்


புரோக்கர்களுக்கு வாக்கு பற்றி என்ன கவலை?






உத்தர்கண்டில் திருவள்ளுவர் சிலை இன்று மீண்டும் நிறுவப்பட உள்ளது.

தமிழ் முதல்வர் ஆட்சியில் தமிழர் உரிமை நிலைநாட்டபட்டது என சிலர் கிளம்புவார்கள் , பாருங்கள்.

ஆனால் சிலை திறந்ததற்கும், தமிழக அரசுக்கும் அறவே சம்பந்தமில்லை









அப்படியானால் பன்னீர் செல்வம் அந்த வம்சம் இல்லையா?

 











Image may contain: 4 people, text








பொய் சொல்லி இருந்தாரோ???......

எப்படியோ இன்னும் சில தசாம்சங்கள் கழித்து குருபூஜை என்பது பசும்பொன்னில் மட்டும் கொண்டாடபடாது என்பது மட்டும் புரிகின்றது.



 திமுகவும் - மதிமுகவும் பிரச்சனையை இத்துடன் விட்டுவிட வேண்டும் : திருநாவுக்கரசர்





அந்த கட்சிகளுக்கிடையே மோதல் என்றால் இவருக்கு ஏன் வலிக்கின்றது?

எத்தனை கோஷ்டி சண்டைகளை தமிழக காங்கிரஸ் கண்டிருக்கும், கலைஞரோ வைகோவோ ஏதும் சொன்னார்களா?


நாமும் சொல்லுவோம்

இவர் இளங்கோவனுடனான பிரச்சினைகளை பேசி தீர்த்தால் என்ன?









No comments:

Post a Comment