Monday, December 19, 2016

தலையில் துண்டுபோட்டு டீ குடித்த நடராஜன்

முன்பெல்லாம் முட்டுசந்தில் மறைந்து, தலையில் துண்டுபோட்டு டீ குடித்த நடராஜன் இப்பொழுதெல்லாம் பகிரங்கமாக மேடை ஏறி பேசுகின்றார்


பழ.நெடுமாறனின் மகன் அமெரிக்காவில் விருது வாங்கியதற்கு இவர்கள் பாராட்டுவிழா வைத்தார்களாம், அமெரிக்காவில் விருது வாங்கிய எத்தனையோ தமிழர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் முக்கியமா? பழ.நெடுமாறனின் மகன் வாங்கினால்தான் அது சிறப்பு


அந்த விழாவில் நடராஜன் பேசியிருக்கின்றார், நிறைய அள்ளி விட்டிருக்கின்றார், அதாவது மகாத்மா காந்திக்கே மோதிரத்தை கொடுத்தாராம் பழ.நெடுமாறனின் தந்தை, உடனே காந்தி கோர்ட்டை கழற்றி அவரிடம் கொடுத்தாராம்.


சரி மகாத்மா போராட்ட காலங்களில் எப்பொழுது கோட் அணிந்த்திருந்தார்? அவர் கழற்றி நெடுங்காலம் ஆனது


நாம் ஏதும் சொன்னால், ஒரு வேளை கோட் இல்லாமல் வேட்டியினை கழற்றி இருப்பாரோ கிளம்பி விடுவார்கள்.


தமிழகத்தையே உருவுபவர்கள் , மகாத்மாவின் வேட்டியினை மட்டும் விடுவார்களா?


நடராஜன் பேச்சில் சொல்கின்றார், அமெரிக்காவில் விருது வாங்குவது கடினமாம், இந்தியாவில் எளிதாம் அட இவருக்கே பத்ம, ரத்ன விருதுகள் தருவதாக அணுகிணார்களாம், இவர் மறுத்துவிட்டாராம்


நடராஜன் பெரும் சாணக்கியன், சும்மா பேச மாட்டார். பின் ஏன் ரத்னா விருதுகள் எளிதாக கிடைக்கும் என்றார்?


மறுநாள் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கிடைக்க வலியுறுத்துவேன் என்கிறார்


ஆக நடராஜன் யாரோ விருது வாங்கிய நிகழ்வில் சொல்ல வந்தது, என்னால் இந்தியாவில் யாருக்கும் பாரத ரத்னா வாங்கி கொடுக்க முடியும், முடிந்தால் என்னை அணுகுங்கள்


பன்னீர்செல்வம் சொல்லவந்தது, நானே மத்திய அரசிடம் இருந்து வாங்கி தருவேன்


அது இருகட்டும், நடராஜன் என்ன சாதித்தார் என அவருக்கு பத்ம, ரத்ன விருதுகளை கொடுக்க சிலர் அணுகினார்கள்?? அப்படி அவர் எந்த பதவியில் இருந்தார்? என்ன சாதித்தார்?


ஒருவேளை மிடாஸ் மூலம் பெருவருவாய் ஈட்டிய தேச சேவைக்கு வழங்க நினைத்திருப்பார்களோ?


இன்னும் பாரத ரத்னா என்னென்ன பாடு பட போகின்றதோ தெரியவில்லை


என்று மாமேதை அம்பேதாருக்கு கொடுக்காத பாரத ரத்னாவினை எம்ஜிராமசந்திரனுக்கு கொடுத்துவிட்டு, பின் வேண்டா வெறுப்பாக
அந்த பெருமகன் அம்பேத்கருக்கு பின்னர் கொடுத்து அவமானபடுத்தினார்களோ..


என்று ஒரு நடிகனுக்கு பின்னே இந்நாட்டின் சட்ட மாமேதைக்கு அந்த அங்கீகாரம் கிடைத்ததோ, அன்றே பாரத ரத்னாவின் பெருமை மண்ணாகிவிட்டது


ஆக மத்திய அரசே, ஜெயாவிற்கும், நடராஜனுக்கும் தாராளமாய் கொடுங்கள்


ஆனால் அதற்கு முன்பு பெரும் தியாகிகளுக்கும், உத்தமர்களுக்கும் கொடுத்த அதே விருதினை திரும்ப பெற்றுவிடுங்கள்.


இது இருக்கட்டும்


இதோ பழநெடுமாறனின் மகன் அமெரிக்காவில் படித்து விருது வாங்கி இருக்கின்றான், இதே பழ.நெடுமாறன் 2004ல் சொன்னது என்ன தெரியுமா?


"விரைவில் ஈழயுத்தம் வெடிக்கும், இங்கிருக்கும் தமிழ் இளைஞர்களும் அங்கு சென்று ஆயுதம் ஏந்த வேண்டும்"


இவர் மகன் அமெரிக்காவில் புத்தகம் தூக்க வேண்டும், மற்றவர்களின் பிள்ளைகள் துப்பாக்கி தூக்க வேண்டும்


எப்படிபட்ட ஒரு உயர்ந்த தியாக சிந்தனை?

No comments:

Post a Comment