Saturday, December 24, 2016

2016 ஆண்டில் சிறந்தவர் யாரோ?

இதோ இந்த வருடம் முடியபோகின்றது, இந்த வருடத்தின் பெஸ்ட் எது என ஆளாளுக்கு லிஸ்ட் போட்டுகொண்டிருக்கின்றார்கள்


சிறந்த திரைப்படம் எது? நடிகர் யார்? நடிகை யார்? அறிமுகம் யார்? டைரக்டர் யார்? காமெடி எது? இசை எது? பல வகை பட்டமளிப்புகள்


அல்லது சிறந்த கிரிக்கெட்டர் யார் என அடுத்த இம்சை..




பத்திரிகையும் அதனைத்தான் செய்கின்றன, டிவிக்கள் செய்கின்றன, எதனை திறந்தாலும் இந்த் வருடத்தின் சிறந்த வகையில் திரையில் கிழித்தது எது? என்றே பெட் கட்டிகொண்டிருக்கின்றார்கள்


ஒருவராவது, ஒரு பத்திரிகையாவது , ஒரு மீடியாவது இந்த வருடத்தின் சிறந்த தமிழ் புத்தகம் எது? இந்த வருடத்தின் சிறந்த எழுத்தாளர் யார்? என்றோ?


இந்த வருடத்தின் அரசின் சாதனை எது? யார் சிறந்த அமைச்சர் என்றோ ஒரு பட்டியலும் இல்லை.


(அட சிறந்த சமையல் எது? சமையல்காரர் யார் என்றாவது சொல்லலாம் )


பின் எப்படி தமிழகம் உருப்படும்


அதே தான் நடக்கும்


"வாராயோ சின்னம்மா வாராயோ, நடராஜனோடு வாராயோ....."


சரி ஊரோடு ஒத்துவாழ வேண்டும், இல்லை என்றால் ஊழலில் திளைக்கவெண்டிய அரசியலில் மிக சுத்தமாக‌ வாழ்ந்த கக்கனை விரட்டியது போல நம்மையும் விரட்டிவிடுவார்கள்


அது என்ன இந்த வருடத்தின் சிறந்த படம்? இந்த வருடத்து சிறந்த நடிகை?


எல்லா வருடத்திற்கும் சிறந்த படம் குஷ்பூ நடித்த படங்கள், எல்லா வருடத்திற்கும் சிறந்த நடிகை குஷ்பூ






கொசுறு


ஜல்லிகட்டு நடத்த எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்கின்றது : தமிழிசை


ஆமாம், 300 காளைகளை வளர்த்து, சண்டைக்கு தயார்படுத்தி, கொம்புக்கு வர்ணம் தீட்டிகொண்டிருக்கின்றது, இனி வாடிவாசல் திறக்க வேண்டியதுதான் பாக்கி






காந்தி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், ஆனால் அவரை எளிமையாக வாழவைக்க மிகுந்த செலவு செய்ய வேண்டி இருநது என அவர் ஆசிரமத்தின் பணியாள் சொன்னதாக ஒரு செய்தி உண்டு


இயேசுகிறிஸ்துவும் மிக எளிமையான வாழ்க்கையினை வாழ்ந்தவர், ஆனால அவரின் பிறந்தநாளை கொண்டாட ஆகும் செலவு கண்ணை கட்டுகின்றது


ஏன் பிறந்தார்? போதிக்க சட்டென்று வானத்தில் இருந்து வந்தால்தான் என்ன?








No comments:

Post a Comment