Tuesday, December 20, 2016

மொட்டை அடித்துக்கொள்ளும் கோமாளிகள்...





Image may contain: 12 people, people sitting

ஜெயாவிற்கு உலகெல்லாம் இருந்து அஞ்சலி செய்திகள் வருவது ஆச்சரியமல்ல,

அந்த அஞ்சலி செய்தி முடியும் இடத்தில் சின்னம்மா கட்சிதலமைக்கு வரவேண்டும் என்ற செய்தியோடு அது முடிவதுதான் ஆச்சரியம்


பிரான்மலை அஞ்சலி கூட்டத்திலிருந்து பிரான்ஸ் கூட்டம் வரைக்கும், ஆண்டிபட்டி அஞ்சலி கூட்டத்திலிருந்து அமெரிக்க அஞ்சலி கூட்டம் வரைக்கும் அந்த செய்தியோடுதான் கூட்டம் முடிகின்றது..





ஜெயா படத்திற்கு மாலை போட்டு மெழுவர்த்தி கொளுத்துகின்றார்கள், பின் தலைக்கு மொட்டை போடுகின்றார்கள் அதன் பின் அம்மா என கதறி அழுகின்றார்கள்

அம்மா எப்படி தெரியுமா? என 50 வருடம் அவருடம் அவரால் சோறு ஊட்டி வளர்க்கபட்டவனை போல கதறுகின்றார்கள், கதறிவிட்டு கண்களை துடைத்துவிட்டு, சின்னம்மா கண்டிப்பாக பதவிக்கு வரணும் என சொல்லி ஒரு திருட்டு முழியுடன் கேமராவினை பார்க்கின்றார்கள்

இந்த அழிச்சாட்டியம் தான் இந்த அஞ்சலி கூட்டங்களில் நடக்கின்றது

ஆக அந்த அஞ்சலியே ஒரு செட்டப் அஞ்சலி எனும் முடிவிற்கு மக்கள் வந்துவிடுகின்றார்கள்

ஐரோப்பாவில் ஆங்காங்கு தமிழர்கள் கூடி ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு மறக்காமல் சின்னம்மா பதவிக்கு வந்தே தீரவேண்டும் என ஒப்பாரி வைக்கின்றார்கள்

முன்பு ஜெயலலிதாவிற்கு லண்டனில் அந்த விருது கொடுக்கவேண்டும், அவருக்கு மியூசியத்தில் மெழுகு பொம்மை வைக்க வேண்டும் என்றெல்லாம் யாராவது சொல்வார்கள்

இப்பொழுது அந்த சத்தம் இல்லை, வரவும் வராது

வேண்டுமானால் அங்கு குயின் விக்டோரியா மகாராணி சிலை அருகே எங்கள் சின்னம்மா சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரலாம்

வரட்டும், இப்படி தமிழக மக்கள் எல்லாம் சின்னராணி, சின்னம்மா, சின்னதாயி என கதறிகொண்டிருக்க அங்கு சிந்தனை எப்படி இருக்கும்?

என்னது லண்டனில் சிலையா?

சிலை என்ன சிலை? முடிந்தால் லண்டன் அரண்மனையினை வாங்கலாம், எத்தனை நாள்தான் கொடநாடு, போயஸ், சிறுதாவூர் என இங்கே அரண்மனைகள் உருவாக்கிகொண்டிருப்பது

சின்னவர் எம்ஜிஆர் ராமாவரத்தில் கட்டினார், அம்மா 4 பங்களா கொடநாட்டில் கட்டினார்,

அடுத்த தலமை லண்டனிலோ, ஸ்விட்சர்லாந்திலோ, மியாமி தீவிலோ அரண்மனை கட்டினால்தானே அது கட்சி வளர்ச்சி?









சசிகலாவினை எந்த பதவியிலும் அமர்த்துங்கள், ஐநா சபை தலைவரை கூட விரட்டிவிட்டு அதில் கூட அமர்த்துங்கள்

ஆனால் அதற்குமுன் அவரை வாய் திறந்து செய்தியாளர்கள் முன்னால் பேசவையுங்கள்

இன்னும் அவர் குரல் கூட எப்படி இருக்கும் என தெரியாத தமிழகம் இது.

தமிழகத்தின் இன்றைய சோகமும், பரிதாபமும் அதுதான்







No comments:

Post a Comment