Saturday, December 24, 2016

பெரியார் , எம்ஜியார் , வாஸ்கோடகாமா: மறைந்த நாள்



[gallery ids="6873,6874,6875" type="slideshow" orderby="rand"]

இன்று பெரியார் மறைந்த நாள், 96 வயதுவரை தன் மூத்திர சட்டியினை தூக்கிகொண்டு இந்த‌ சமூகத்தினை திருந்த அரும்பாடுபட்டு மறைந்த நாள்.


ஒரு காலத்தில் பெரியார் சீடன் என சொல்லிகொண்டு, திரையிலே புரட்சி செய்து பின் அதனை அரசியலிலும் செய்து, இன்று பன்னீர்செல்வம் கைகூப்பி வணங்கும் ம.கோ ராமச்சந்திரனும் மறைந்த நாள்


ராமச்சந்திரனை விட்டுவிடலாம், தமிழகத்திற்கு தீரா தலைவலியினை உருவாக்கியதை தவிர அவர் ஒரு புரட்சியும் செய்யவில்லை


ஆனால் இன்றைய நாளில் ஒருவன் வரலாற்று புரட்சியாளன் மறைந்தான், அவன் தான் உலகத்தை திருப்பியவன், குறிப்பாக இந்திய வரலாற்றை புரட்டி போட புள்ளி வைத்தவன்


வாஸ்கோடகாமா


ஐரோப்பியர்கள் குளிர்தேசத்தினர், ஆசிய தொடர்போ அல்லது இன்னொரு நாட்டிலிருந்து ஏதும் கிடைக்காமலோ அவர்கள் வாழ முடியாது, சீனாவிலிருந்து பட்டும் இந்தியாவிலிருந்து மிளமும் இன்னும் பலவும் இரு வழியாக ஐரோப்பா சென்று கொண்டிருந்தது


ஒன்று பட்டுசாலை என துருக்கி வழியாக செல்லும் சாலை, இன்னொன்று கேரளாவிலிருந்து அரேபியாவுக்கு கப்பலில் சென்று அங்கிருந்து பட்டுசாலை மூலமாக ஐரோப்பா நுழைவது


இரண்டாவது வழிதான் சாலமோன் அரசரும், ரோமானியரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்ட வழி, கிறிஸ்தவமும் இஸ்லாமும் கேரளாவில் தொன்று தொட்டு வளர காரணமான வழி


நமக்கும் இலங்கைக்கும் போல, இருக்கட்டும்


ஐரோப்பியர் ஏன் இப்படி கிழக்கு வெறி கொண்டு அலைந்தனர்??


அதாவது ஆசியா இன்றி அவர்களால் வாழமுடியாது, பெரும் பொருட்கள் இங்கிருந்தே அவர்களுக்கு சென்றன, இதனை நோக்கில் வைத்துதான் மேற்கே பாயாமல் கிழக்கே பாய்ந்தான் அலெக்ஸாண்டர்


ஐரோப்பியாவிற்கு தாராள வியாபாரத்தை தொடங்கி வைத்தவன் அவனே பின் ரோமானியர் அதனைத்தான் தொடர்ந்தனர்.


எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த பொழுதுதான் இஸ்லாமிய புரட்சியும், பெரும் இஸ்லாமிய வல்லரசுகளும் எழும்பின‌


அவற்றில் குறிப்பிட தக்கது ஆட்டோமன் துருக்கி சாம்ராஜ்யம், அவர்கள் பட்டுசாலைக்கு வரி இன்ன பிற கட்டுபாடுகளை விதிக்க ஐரோப்பா பாதிக்கபட்டது


அன்று ஐரோப்பாவிலும் அரசன் போப்பாண்டவர், அவர் வைத்ததுதான் சட்டம், சாசனம் எல்லாம். அவரிடம் வியாபாரிகள் வேறு மாதிரி கொளுத்தி போட்டார்கள்


அதாவது இயேசு வாழ்ந்த எருசலேமும் இன்னற பிற நகர்களும் இஸ்லாமியிர் ஆட்சியில் அழிந்து கிடப்பதாகவும் அதனை மீட்க வேண்டும் எனவும் பற்ற வைத்தனர்


உண்மையில் அவர்கள் நோக்கம் எருசலேமும் அல்ல எருக்கலையும் அல்ல, பட்டுசாலை குறிப்பாக துருக்கியினை பிளக்க வேண்டும் ஆசியாவில் நுழைய வேண்டும்


போர் ஆரம்பமாயிற்று, பட்டுசாலைக்கான போர் சிலுவை போர் என அழைக்கபட்டது, நெடுங்காலம் நடந்தது, இருவர் கையும் மாறி மாறி எழும்பினாலும் உண்மையில் வென்றது ஆட்டோமானியரே


கிட்டதட்ட 400 ஆண்டுகாலம் அவர்கள் கை ஓங்கி இருந்தது, வரலாற்றில் பெரும் முத்திரை ஆட்டோமான் துருக்கியரோடது


அதன் பின் ஐரோப்பியரால் ஆசியாவிற்குள் நுழையமுடியவில்லை, வியாபார உலகம் துருக்கியர் கையில் சிக்கியது, மார்ட்டின் லூதர் திருச்சபையினை பிளக்க ஐரோப்பா ஏக குழப்பத்தில் இருந்தது


இனி கடல் வழியாக இந்தியா நுழைவோமா என ஸ்பெயினும் போர்சுகலும் களமிறங்கின‌


கொலம்பஸ் அமெரிக்கா பக்கம் சென்று வளமான நாட்டை பார்த்தான், முன்ன பின்ன இந்தியா பார்த்தவனா? இதுதான் இந்தியா என மகிழ்ந்தான், அதனை ஐரோப்பாவிற்கு அறிவிக்கவும் செய்தான்


இந்தியா என்றால் தரமான மிளகு வேண்டுமல்லவா? அது இல்லை, பின் அது என்ன இந்தியா? என சந்தேகம் கொண்டு கிளம்பியவர்கள் அது இந்தியா அல்ல என சொன்னார்கள், அதற்கென்ன அது மேற்கிந்தியா என பெயரிட்டார் கொலம்பஸ், பின் அமெரிக்கோ எனும் மாலுமி அமெரிக்கா அடைந்தார், ஸ்பெயின் தென் அமெரிக்காவினை விழுங்கியது


இதில் போர்ச்சுக்கல் ஒதுக்கபட சண்டை சீரியசானது, அவர்களுக்குள் மோதிகொள்ளும் நிலையில்தான் மேற்கே ஸ்பெயினுக்கு கிழக்கே போர்ச்சுகல்லுக்கு என துண்டை உதறி தீர்ப்பு சொன்னார் போப்


இன்றுவரை ஸ்பானிய தாக்கம் ஆசியாவில் இல்லை என்பதற்கு அடிப்படை இதுதான்


இனி இந்தியாவினை கடல்வழி அடைவேன் என கப்பல் ஏறினான் வாஸ்கோடமாமா, சுற்றினான் மேற்கே செல்லாமல் தேற்கே சுற்றினான் 3 ஆண்டுகள் அவன் எங்கெங்கோ சுற்றி இருக்கின்றான், பல இடங்களில் கரை ஒதுங்கினாலும் அவன் மிளகினை தேடியிருக்கின்றான், கிடைக்கா இடம் இந்தியா அல்ல என முடிவு செய்தான்


எப்படியோ ஆப்ரிக்காவின் தெற்கு முனையினை அடைந்தான், அங்கேயும் இது இந்தியா அல்ல என அவனுக்கு புரிந்தது, ஏதோ ஒரு மேப்பினை கையில் வைத்திருந்த அவனுக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று, இது நல்ல நம்பிக்கை முனை என பெயரிட்டான்


அவன் நல்ல நேரமோ என்னமோ ஒரு குஜராத்தி அவனுக்கு வழிகாட்டினான் என்கின்றது வரலாறு, அவன் வழிகாட்டலில் கள்ளிகோட்டையினை அடைந்தான் வாஸ்கோடகாமா


அவன் தேடிய மிளகு அவனுக்கு கிடைத்தது, கேரள மிளகு. அதன் பின் நம்பினான் இதுதான் இந்தியா


அதன் பின் சரக்குகளை ஏற்றுவதும் போர்ச்சுகலில் இறக்குவதுமாக காலம் மாறிற்று, இந்திய மிளகு ஐரோப்பாவில் அப்படி கொண்டாடபட்டது.


இதனை தொடங்கி வைத்த அந்த வாஸ்கோடகாமா அதன் பின் இருமுறை ஐரோப்பா சென்றுவந்தான், பின் இங்கு வந்து கேரளாவில் நடந்த ஒரு கலவரத்தில் கொல்லபட்டான் என்கின்றார்கள்.


அதன் பின் போர்த்துகீசியர் தங்கள் தளத்தினை கோவா பக்கம் வாங்கினார்கள்.


அவன் கல்லறை கள்ளிகோட்டை அல்லது கோழிக்கோடு என அழைக்கபடும் அந்த கேரள நகரில் இன்றும் உண்டு


எத்தனை வரலாற்றாளர்கள் வந்தாலும், வாஸ்கோடகாமாவின் சாதனை பெரும் முத்திரை


வெறும் பாய்மர கப்பலை வைத்துகொண்டு அவன் எந்த நம்பிக்கையில் கடலாடினான், யாரும் செல்லா பாதையில் எப்படி என்றான்? எப்படி உணவு சேகரித்தான்? எந்த உள்ளுணர்வில் கப்பலை செலுத்தினான் என்பதெல்லாம் பெரும் ஆச்சரியமான விஷயங்கள்


எப்படியோ ஐரோப்ப கடல்வழி இணைப்பினை அவனே தொடங்கி வைத்தான், நெடுங்காலம் மிக ரகசியாக வைக்கபட்ட இந்த வரைபடம் பின் மற்ற நாட்டுக்காரர்களிடம் சிக்க, பிரான்ஸ், டச்சு, பிரிட்டன் என பலரும் வந்தனர்.


வரலாற்றை மாற்றியவன் வாஸ்கோடகாமா, மிளகினை காணும்பொழுதெல்லாம் அவனும் அவனின் சாகசமான கடற்பயணமுமே நினைவுக்கு வரும்


இன்று இந்தியரெல்லாம் ஐரோப்பா விசா கிடைக்காதா? என ஏங்கி கொண்டிருக்க, அன்றைய ஐரோப்பா இந்தியாவிற்கு வழி கிடைக்காதா? என ஏங்கி இருக்கின்றது


காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது


இன்றைய நாளில் இரு தாடிகளை மறக்க முடியாது, ஒன்று சமூகத்தை மாற்றியது


இன்னொன்று வரலாற்றை மாற்றியது


இன்னொருவர் உண்டு அவருக்கு தாடி கிடையாது அது போலவே கொள்கையோ, வரலாறோ, சாதனையோ ஒரு மண்ணும் கிடையாது, தலையில் தொப்பி மட்டும் உண்டு


பெரும் தமிழக தலை வலியினை உண்டாக்கிவிட்ட அவரைபற்றி சொல்ல ஒன்றுமில்லை


ஆனால் ஒரு பெரும் விசித்திரம் உண்டு




[caption id="" align="aligncenter" width="374"]Image may contain: 1 person, standing வாஸ்கோடகாமா[/caption]

அதாவது வாஸ்கோடகாமா தேற்கே கேரளாவில் கால் வைக்க, சம காலத்தில் வடக்கே உள்ளே நுழைந்திருக்கின்றான் பாபர்


அவன் மசூதியும் கட்டி, முகலாய‌ சாம்ராஜ்யமும் கட்டி எழுப்பப்ப ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்திருக்கின்றனர், பாபரின் 7ம் தலைமுறையில் மொத்த இந்தியாவும் ஐரோப்பியர் ஆட்சிக்கு வந்திருக்கின்றது


ஆக நுழைபவன் இப்படி தனியாகத்தான் நுழைவான் பின் ஆட்சிக்கு வரும்பொழுது அறிய படுகின்றான், விதி அவனை இழுத்து வந்து கோஷ்டிகளுடன் அரியணையில் அமர்த்துகின்றது


பெரியார் முன் கலைஞர் அப்படித்தான் வந்து நின்றார். அண்ணா முன் எம்ஜிஆர் அப்படித்தான் நுழைந்தார்,


1980களில் ஜெயா அப்படி நுழைந்தார், 1990களில் சசிகலா அப்படித்தான் நுழைந்திருக்கின்றார், அதன் பின் பன்னீர் செல்வவமும் அப்படித்தான் நுழைந்திருக்கின்றார்கள்


இனி அடுத்த சின்னம்மாவும், அடுத்த பன்னீர் செல்வமும் இப்பொழுது கட்சிக்குள் சத்தமில்லாமல் நுழைந்திருக்கலாம் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது


போயஸ் கார்டனில் புல்வெட்டலாம் அல்லது மன்னார்குடியிலோ தேனி பக்கமோ சைக்கிள் துடைக்கலாம்


எப்படி ஆயினும் இந்திய வரலாற்றை தலைகீழாக புரட்டி போட்டதில் வாஸ்கோடகாவிற்கு பெரும் புங்கு உண்டு


அவனும், அவனின் மன தைரியமும் வரலாற்றில் நிலைபெற்று விட்டவை.





No comments:

Post a Comment