Wednesday, December 21, 2016

கணித்தது நடக்கிறது... அடுத்த ரெய்டு எங்கே?

தமிழ்நாட்டு பணம் எல்லாம் ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் சிக்குகின்றது, இவர்களை எல்லாம் ஒன்றும் சொல்லாத சீமான் கோஷ்டியினர் தெரு சுத்தபடுத்தும் தொழிலாளியிடம் "ஏய் வடுக வந்தேறி, நீ வைத்திருப்பது தமிழன் விளக்குமாறு.." என சீறிவார்கள்


இப்பொழுதெல்லாம் சீமானுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை, வறண்ட காலத்தில் வயலில் கண்ணீர்விட்ட விவசாயி, மழை வந்தபின் சும்மா இருப்பானா?


சீமான் அப்படித்தான் இருக்கின்றார், அடித்துவிளையாட வேண்டிய களத்தில் அமைதிகாப்பது ஏன் என தெரியவில்லை


தமிழர்களை அழிப்பது தெலுங்கர்கள், இது தமிழருக்கும் தெலுங்கருக்குமான போர் என்றெல்லாம் அறிக்கைவிட்டு முஷ்டி தூக்கினார்


இப்பொழுது ரெட்டிகள், ராவ்கள் சிக்கும் போது மகா அமைதி


ரெட்டிக்கும், ராவிற்கும் இடையில் சீமான் ஏன் நின்று கத்தவில்லை


"நடுவில் அங்கிள் சைமனை காணோம்"


------


அட அரசியல் உலகில் சில நேரம் நாம் கணித்தது கூட நடக்கின்றது


திருநாவுக்கரசர் ஜெ திரும்ப வந்துவிடுவாரா? என கேட்டால் சீமான் குதிக்கமாட்டாரா? என்று சொன்னால், அப்படியே சீமான் ராஜிவ் வந்துவிடுவாரா? என குதிக்க, களத்தில் இளங்கோவனும் வந்து குதிக்கவும் சண்டை இளங்கோவன் வித் திருநாவுக்கரசு என மாறியது


முன்பே நாம் சொன்னோம்


பன்னீர்செல்வம் டெல்லி கிளம்பினார், இங்கு 3 அமைச்சர்கள் சின்ன அம்மா என பூபாளம் பாடினர், இது எங்கோ உதைக்கின்றது விரைவில் தமிழகத்தில் சில இடங்களில் வருமான வரி சோதனை நடக்கலாம், சின்னம்மாவிற்கு செக் வைக்கபடும் என சொன்னோம்


அப்படியே இன்று தலமை செயலாளர் வீட்டில் அள்ளிகொண்டிருக்கின்றார்கள், வாரி கொண்டிருக்கின்றார்கள்


எதோ ஒரு படத்தில் விவேக்கிற்கு ஒரு ஸ்பெஷல் பவர் வந்திருப்தாக தனுஷ் சொல்வார், உடனே ஒருவித எமோஷனல் ஆனந்த நிலைக்கு விவேக் முகம் மாறும்


நம் முகமும் அப்படி மாறிகொண்டிருக்கின்றது :)


- -


அடுத்த ரெய்டு எங்கே?


தலமை செயலாளர் வீட்டில் ரெய்டு செய்யும்பொழுது, அவரை நியமித்த முன்னாள் முதலமைச்சர் வீட்டிலும் அரிசிபானையாவது திறந்து பார்க்க வேண்டுமா இல்லையா?


அவர் இல்லை என்றாலும் அவரின் வீடும், அவரின் பொருட்களும் தோட்டமும் அப்படியேதான் இருக்கின்றது.


இப்பொழுதெல்லாம் மத்திய அரசிற்கு பெரும் பலம் இந்த சிபிஐ, உளவுதுறை எல்லாம் அல்ல‌


அவர்களுக்கு கைகொடுக்கும் ஒரே துறை வருமான வரிதுறை, அது மட்டும் இல்லை என்றால் இங்கு ஒரு பயலும் பயப்பட மாட்டான்


பகவானின் இன்றைய அவதாரமாகவே அந்த துறையினை பார்க்க வேண்டி இருக்கின்றது.


இதே வருமானவரி சோதனையினை அன்றே ஒழுங்காக செய்து, 4 ஆட்டு ஆட்டி, அந்நிய செலாவணி வழக்கையும் பாய்ச்சியிருந்தால் ராமசந்திரன் இல்லை, ஜெயா இல்லை, இன்று சசிகலாவும் இல்லை


மத்திய அரசுக்கு இவ்வளவு சிக்கல் வந்திருக்காது


கலைஞரை எதிர்த்து இந்திரா செய்த பெரும் தவறு அது,


மோடியாவது சரி செய்யட்டும்


--

No comments:

Post a Comment