Monday, December 19, 2016

மிஸ்டர் வாங் ஜியாங் தமிழகம் வாருங்கள்




சீனாவில் 92 பில்லியன் டொலர் சொத்துக்களை வாங்க மறுத்த மகன்பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை


நமது ஊர் அம்பானி போல சீனாவில் வாங்க் ஜியான், பெரும் கோடீஸ்வரர், மோடி சீனா சென்றபொழுது அவரை சந்தித்தார் அவரும் 1000 கோடி இந்தியாவில் கொட்டுகின்றேன் என உறுதியளித்தார்


உலகெல்லாம் அவருக்கு பெரும் தொழில் உண்டு, சில ஜாக்க்சிசான் பட வில்லன் கூட அவர் சாயலில் வருவார்.





அப்படிபட்ட பெரும் கோடீஸ்வரனின் மகன், எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு தன் வழியே சென்றுவிட்டானாம், அவன் கனவு வேறாம்

இவருக்கு என்ன செய்வது என தெரியவில்லை மனிதர் வாரிசு தேடி அலைகின்றார்.

சீனாவில் 80% வாரிசுகள் இப்படித்தான் தந்தை சொத்து வேண்டாம், என் கனவு வேறு என அலைகின்றன‌

நமது ஊரில் அப்படியா?, வாரிசில்லா பக்கத்துவீட்டுக்காரன் செத்தாலும் அவரின் அரை செண்டு நிலத்தை விடுவோமா? முப்பாட்டன் காலத்த்து பட்டக்களை காட்டி தூக்கிவிட மாட்டோமா?

நம்மிடம் சீனர்கள் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கின்றது,

சரி அந்த வாங் ஜியான் வாரிசு இல்லாமல் இருக்கின்றாரே என்ன செய்யலாம்

மிஸ்டர் வாங் ஜியாங் தமிழகம் வாருங்கள், அதிமுக எனும் பெரும் கம்பெனி வாரிசு சண்டையில் சிக்கி இருக்கின்றது. உங்கள் கம்பெனி வாரிசாக அந்த மன்னார் குடி கும்பலை அறிவியுங்கள்

உங்கள் பன்னாட்டு நிறுவணங்களில் ஆளுக்கொரு நாடு கொடுக்குமளவிற்கு அங்கு எண்ணிக்கையும் இருக்கின்றது

இந்த கும்பலை அங்கே கொண்டு சென்றுவிட்டு, பணத்திற்கு ஆசைபடாத உங்கள் மகனை இங்கே விட்டு விட்டு செல்லுங்கள்

இதே போல இன்னொரு சீன கோடீஸ்வரர் வாரிசு தேடினாலும் சொல்லுங்கள், திமுக எனும் பெரும் கம்பெனிக்கும் அப்படி சிக்கல் இருக்கின்றது அவர்களையும் அனுப்புகின்றோம்

உங்களுக்கு சொத்துக்களுக்கு வாரிசுகள் தேவை, எங்களுக்கோ அதற்கு ஆசைபடாத மனம் உள்ளவர்கள் தேவை

வாருங்கள் மாற்றிகொள்வோம்

இவர்கள் எப்படி திறமையானவர்கள் என்றால், 1 பைசா இல்லாமல் அரசியலுக்கு வந்து பில்லியன் கணக்கில் சம்பாதித்தவர்கள் , நீங்கள் பில்லியன் கொடுத்தால் அவர்கள் டிரில்லியன் ஆக்க மாட்டார்களா?

நம்பி கொடுங்கள், அரசியலுக்கு ஆக மாட்டார்களே தவிர சொத்துக்களை பாதுகாப்பதில் நாங்களே 100% கியாரண்டி கொடுக்கின்றோம்

வாருங்கள் வாங் ஜியாங் , உங்கள் சொத்துக்கான வாரிசினை மன்னார் குடியிலும், கோபாலபுரத்திலும் தேடுங்கள்

உங்கள் மகனை எங்களுக்கு கொடுங்கள்

இருவருக்குமே மகிழ்ச்சி

உடனே ஒரு இந்தோ-சீன ஒப்பந்தம் எழுதலாம் வாருங்கள்





No comments:

Post a Comment