Thursday, December 15, 2016

நீங்கள் கூடவா மிஸ்டர் நல்லகண்ணு?

na

பெரும் சிந்தனையாளர்களான ராஜாஜி, ம.பொ.சி போன்றோர்கள் கூட கலைஞர் பின்னாலும் எம்.ஜி.ஆர் பின்னாலும் சென்ற தமிழகத்தில் இன்று பலர் சசிகலாவினை ஆதரிப்பதில் என்ன இருக்கின்றது.

அவர்கள் நிலை அது, அரசியலில் குதித்துவிட்டார்கள், கரையேற தெரியவில்லை அல்லது முடியவில்லை என்ன செய்வது?

கிடைத்த கட்டையினையோ, பாறையினையோ பிடித்து வாழ்வினை காக்க வேண்டியதுதான்

பெரும் திறமையானவர்கள் தமிழக அரசியலில் காலம் கடத்திகொண்டிருப்பது இப்படித்தான்.

ஆனால் தேசிய கட்சிகள் வித்தியாசமானவை, ஓரளவு திறமையும் நற்பெயரும் கொண்டவனை அது பயன்படுத்திகொள்கின்றது, தமிழக நிலை அப்படியல்ல காலில் போட்டு மிதிக்கும்.

அது அப்படித்தான், திறமையும் பெரும் அறிவும் இருப்பவர்கள் வெற்றிபெற முடியாத தமிழக அரசியல் இது.

வெற்றிபெற குறுக்கு வழியில் முயற்சிப்பதே திறமை எனப்படும், அதிகாரம் உள்ளளோர் முன்னால் வளைந்து நிற்பது சந்தர்பத்தை உருவாக்குதல் எனப்படும்

அப்படி ஆகிவிட்ட தமிழகம் இது

"திறமை உள்ளவனோ, பலம் வாய்ந்தவனோ வெற்றிபெறுவதில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் வாய்ப்பவனே வெற்றி பெறுவான்" என்கிறது யூதமொழி

ஒருவனின் தலைவிதிக்கேற்ப சூழ்நிலை அமையும் என்கிறது இந்துமதம்

அப்படி சசிகலாவின் தலைவிதி அம்மாதிரியும், தமிழக தலைவிதி இம்மாதிரியும் இருந்தால் அவ்விதிப்படியேதான் நடக்கும்,

ஆனாலும்.....................

மிஸ்டர் நல்லகண்ணு நீங்களுமா? நீங்கள் கூடவா?







முட்டாள் முனியாண்டிகள்

சின்ன அம்மா அவர்களே

நீங்கள் நிச்சயம் பொதுசெயலாளர் ஆவீர்கள்,

தயவு செய்து கொஞம் தாமதமாக வாருங்கள்

இவர்கள் செத்து தொலையட்டும்






Image may contain: 1 person, standing and outdoor













No comments:

Post a Comment