Thursday, December 29, 2016

ஜெவிற்க்கு நோபல், மகசேச, பாரத் ரத்னா விருதுகள் : அதிமுக பொதுக்குழு




பொதுகுழு தீர்மானத்தை ஏற்றார் சசிகலா, பொதுசெயலாளர் ஆக சம்மதம்.

அட அட அடடா....

இவர்கள் வாசிப்பிற்கும், அவர்கள் அசைவிற்கும் அந்த காட்சிதான் நினைவுக்கு வருகின்றது

"என்ன அமெரிக்காவுல‌ டிரம்ப் கூப்பிட்டாக, ரஷ்யாவுல புட்டீன் கூப்பிட்டாக, பாகிஸ்தான்ல பெனசிர் பார்ட்டில கூப்பிட்டாக‌

இலங்கையில ராஜபக்சே கூட கூப்பிட்டாக..

சீன கம்யூனிஸ்ட் கட்சில கூட தா.பாண்டியன் மூலமா கூப்பிட்டாக..

அத எல்லாம் விட்டு என் கிரகம், இங்க வந்து மாட்டிகிட்டேன்..."




 சரி இப்பக்கம் ராணி நிறுத்தபடுகின்றார்,

அப்பக்கம் எந்த சிப்பாய் வருமான வரி சோதனைக்கு வரப்போகின்றானோ? அல்லது ஆளுநர் எனும் யானையினை நிறுத்த போகின்றார்களோ?

ஆட்டம் சுவாரஸ்யமாக செல்கின்றது



ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னாவும், பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் ரோமன் மகசேச விருதும், உலக அமைதிக்காக நோபல் பரிசு வழங்க அதிமுக பொதுகுழுவில் தீர்மானம்


அடேய் பாரத ரத்னா கொடுங்கள் என இந்தியாவினை கேட்கலாம், ரோமன் மகசேச விருதை கொடுங்கள் என பிலிப்பைன்ஸை எல்லாம் கேட்க முடியாது, அது அவர்களாக கொடுக்க வேண்டியது.


எத்தனை பேருக்கு வழங்கபட்ட உயர்விருது அது? யாராவது வலிய கேட்டார்களா? தகுதியான நபருக்கு தானாக அந்த‌ விருது வரும்.


அமைதிக்கான நோபல் பரிசும் வேண்டுமாம்,


இந்திய பாகிஸ்தான் யுத்தம் நிறுத்தபாடுபட்டாரா? ஈராக் போர், உக்ரைன் போர், சிரியபோரில் எல்லாம் பேசசென்றாரா?


பாலஸ்தீன பிரதிநிதியினையும், இஸ்ரேல் பிரதமரையும் போயஸ் கார்டன் வரவைத்து மிரட்டினாரா?


ஈழத்தில் போர் நிறுத்த நீந்தி சென்றாரே அதற்கா அமைதிக்கான நோபல் பரிசு?


கொடநாட்டில் மாளிகை கட்டி அமைதியாக இருந்தால் அது உலக அமைதிக்கான உழைப்பா?


உலகம் இந்த கோரிக்கைகளை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றது,


அவர்களோ சீரியசாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.


பாராளுமன்றத்தில் ஜெயாவிற்கு சிலை வைக்கவேண்டுமாம், சென்னை மற்றும் பார்பன அக்ரஹாரா சிறையில் ஒரு படமாவது வைக்க வேண்டாமா?


நல்ல வேளையாக ஜெயா இந்துமதவாதி, இல்லையென்றால் இந்நேரம் போப்பாண்டவர் கழுத்தை பிடித்து "செயின்ட்" பட்டம் கேட்பார்கள்?


ஆச்சரியமாக நீதிபதி குன்ஹாவினையும், ஆச்சாரியாவினையும் பழிவாங்க தற்கொலை படையாக மாறுவோம் என்ற தீர்மானம் இல்லை


சேர்த்திருக்கலாம், நோபல் பரிசு வேண்டும் என கேட்ட தீர்மானத்தில் இதனையும் சேர்த்திருக்கலாம், காமெடிகளில் இன்னும் ஒரு தீர்மானம் கூடியிருக்கும்


ஆக பொதுகுழு என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்











இறந்தவர்களுக்கு நோபல் கொடுக்கமாட்டார்கள் என்பதை அவர்களிடம் சொல்லாதீர்கள்

அந்த நோபல் பரிசு பெற தகுதியான அளவு ஜெயாவினை உருவாக்கியதே சின்னம்மா தான்,

அதனால் அந்த நோபல் பரிசினை சின்னம்மாவிற்கு கொடுங்கள் என கிளம்பிவிடுவார்கள்.

ஒரு மாதிரியாக அலைகின்றார்கள்,

மாற்று மருந்து கண்டுபிடிக்கும் வரை அவர்களிடம் ஒன்றும் சொல்லவேண்டாம்






No comments:

Post a Comment