Tuesday, December 27, 2016

ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? : ராம் மோகன ராவ் புலம்பல்

என்னவோ வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டதை போலவும், அதனை வெள்ளையன் அரசு பிடுங்கிவிட்டு இவரை புல்வெட்ட போட்டது போலவும் ராம மோகன் ராவ் பேட்டியளித்துகொண்டிருக்கின்றார்


இவரை பதவி நீக்கிய பின்னும் என்ன பேசி கிழிக்கவேண்டியிருக்கின்றது, குற்றமில்லை என்றால் நீதிமன்ற கதவினை தட்டி சொல்லலாம்.


இங்கு இருந்து கொண்டு இது மத்திய சதி, மாநில சதி , இது அரசியல் சாசன அடி என்று சொல்வதெல்லாம் பெரும் காமெடிகள்




அதிகாரிகளும் அரசியல்வாதிகளாகிகொண்டிருக்கும் அவலம நடந்துகொண்டிருக்கின்றது


இவர் தலமை செயலாளராம், அதனால் இவரை அடைத்து வைத்து விசாரித்தது சட்ட விரோதமாம்.


என்னவெல்லாமோ பேசுகின்றார்


ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? என்கின்றார்


முதல்வரே பெங்களூர் சிறையில் இருந்தது மறந்துவிட்டது போல, அந்த கோட்டையே ராணுவத்திற்கு சொந்தமானது என்பதுமா மறந்துவிட்டது?


முதலில் இவரை கைது செய்யாமல் வைத்திருப்பதே பெரும் தவறு, அவரோ தியாகி ஆக முயற்சித்து கொண்டிருக்கின்றார்


எல்லாம் சரி ராவ், 20 இடத்திலிருந்துகொண்டு எப்படி 19 பேரை முந்தி ராவோடு ராவாக பதவி பெற்றீர்? அந்த மர்மத்தையும் சொன்னால்தான் என்ன?






என்னை குறி வைத்துள்ளனர் என் உயிருக்கு ஆபத்து : ராமமோகனராவ்


அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும், நிச்சயம் உங்கள் உயிருக்கு ஆபத்துதான்


சரி யாரால் ஆபத்து, அவை எல்லாம் யாருடைய பணம், நீர் உயிரோடு இருந்தால் யாருக்கு ஆபத்து என்பதை சொல்லி தொலையும்


இந்த சமூகத்திற்காவது அது பயன்படும்


மற்றபடி இனி நீர் இருந்து மறுபடியாகவும் தலமை செயலாளர் ஆக "மக்கள் பணியாற்றும்" வாய்ப்பு இனி வரவா போகின்றது?


 எல்லையில் அனுதினமும் ராணுவ வீரன் சாகும்பொழுது......


4 கொள்ளையர்களை அடையாளம் காட்டிவிட்டு நீர் செத்தால்தான் என்ன?






1994 ல் இருந்து என்னை பழக்கி பயிற்சி அளித்தவர் ஜெயலலிதா : ராம் மோகன் ராவ்.


அட பாவி மனுஷா, பயிற்சியினை நீர் கலைஞரிடம் எடுத்திருக்க கூடாதா? இந்நேரம் வருமான வரிதுறையே தலையினை பிய்த்து ஓடியிருக்காதா?


சசிகலாவினையே சமாளிக்க தெரியாத அந்த அப்பாவியிடமா பயிற்சி எடுப்பது?






மக்கள் எல்லாம் ஏடிஎம்மில் சொந்த காசை எடுக்க காத்து நிற்கும் நாட்டில், ஏதோ உழைத்து சேர்த்த பணத்தை கண்ணெதிரே ஐடி அதிகாரிகள் அள்ளிகொண்டு சென்றதை போல அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கின்றதாம்


அது என்னவோ தெரிவில்லை, முன்னாள் முதல்வர் ஒரு அரசு பணியாளர், இதோ முன்னாள் தலமை செயலாளர் ஒரு அரசு பணியாளர். இவர்கள் அரசிடம் சம்பளம் வாங்கும் பணியாளர்கள்


ஆனால் இவர்கள் சிகிச்சை எடுக்கும் இடமெல்லாம் தனியார் மருத்துவமனைகள்




நிச்சயமாக இந்த ராமமோகன்ராவ் தேசிய சிறந்த அரசு மருத்துவர்கள் பாதுகாப்பில் அரசு மருத்துவமனையிலே சிக்கிசை பெற வேண்டியவர்


இதில் இன்னமும் "அடுத்த எம்ஜிஆர்" சின்ன இதயகனி, சின்ன புரட்சிதலைவர், சின்ன அய்யா பன்னீர் செல்வம் அவ்ர்கள் இன்னமும் கருத்து சொல்லாதது பெரும் விசித்திரம்


"சின்ன சின்னவர்" பன்னீர் செல்வம் அவர்கள், கட்சியில் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் இப்பொழுது ஒரு மாநிலத்தின் முதல்வர்


அவ்வகையில் அவருக்கு பதில்சொல்லும் கடமை உண்டு


இருக்கட்டும்


இனி ஐடி அதிகாரிகளோடு ஒரு ஆம்புலன்சையும் சில டாக்டர்கள் குழுவினையும் அனுப்புவது நல்லது, அடுத்த நபர் சயனைடு கடித்தாலும் கடிக்கலாம்


எதற்கும் ரெட்டிக்கு மிக விரைவில் நெஞ்சுவலி வரலாம், சுற்றிலும் மருத்துவர்களை நிறுத்துவது நல்லது


இவ்வளவு இளகிய மனம் படைத்தவர்களா ஆட்சி செய்யும் அதிகாரிகள்?, இப்படி படீர் படீர் என நெஞ்சுவலி வருகின்றது









No comments:

Post a Comment