Thursday, December 29, 2016

இலங்கை தேநீரும், மலையக தமிழரும்...

https://youtu.be/_9KnIdKzAU4




இலங்கை தேநீருக்கு அப்படி ஒரு சுவை, தமிழரின் உழைப்பில் விளைவதாலோ என்னமோ எந்த பானமும் கொடுக்காத திருப்தியினை மலையக தேநீர் கொடுக்கின்றது


உலகில் மிக மோசமான அபலை வாழ்க்கை வாழும் தமிழர்கள், அந்த தேயிலை தோட்ட தமிழர்கள்


ஆனால் அவர்களின் நிலைபற்றி யாரும் பேசமாட்டார்கள், எந்த உணர்வாளனும் பேசமாட்டான், முழங்கமாட்டான்





சரி அவர்கள் உழைப்பின் தேநீரையாவது தமிழகத்தில் கிடைக்கவிடுவானா என்றால், அய்யகோ அது இலங்கை அரசுக்கு செல்லும் பணம் அதனால் புறக்கணிப்போம் என கிளம்புவார்கள்

அது தமிழுணர்வு, அதுதான் புரியாத தமிழ் தேசிய இம்சை

இதே மலையக தமிழர்கள் கொஞ்சம் செழிப்பாக இருந்திருந்தால் ஈழ சினிமா போல, கபாலி போல நிறைய படங்கள் வந்திருக்கும், ஆனால் பராரிகள் அல்லவா? யார் தேடுவார்கள்

அந்த மலையக தமிழரிலும் சில அடையாளங்கள் உண்டு, அந்த எஸ்டேட் தமிழர் வம்சத்தில் ஒருவர்தான் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

சிங்களர்கள் அவரை அரவணைத்தனர், அதனால்தான் முரளி சில இடங்களில் இலங்கையில் எந்த வேறுபாடும் என்னால் காணமுடியவில்லை என்றார், அது உண்மையும் கூட‌

கொஞ்சம் கவனித்தால் முரளிதரனை தென்னிலங்கை கொண்டாடியது, வட இலங்கையில் அவருக்கு பெரும் வரவேற்பெல்லாம் இல்லை இவ்வளவிற்கும் வடக்கேதான் தமிழர் அதிகம்

அந்த தேநீரை கையில் ஏந்தும் பொழுதெல்லாம் அம்மக்களின் அவல வாழ்க்கை கண்முன்னே வந்தே போகும்

மிக மிக பரிதாபத்திற்குரிய விதி அவர்களது.

சிங்களன், இந்தியா, தமிழர், ஈழம் என எல்லா தரப்பும் கண்டுகொள்ளாத, தமிழகம் கூட கண்டுகொள்ளாத ஒரு அபல வாழ்வு அவர்களுடையது

ஈழபிரச்சினை என உலகெல்லாம் ஒப்பாரி வைத்தாலும், மலையக பிரச்சினை என்பது வேறு, ஈழகுரல் அந்த குரலை அடக்கியே விட்டது

அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை என்பதுதான் சோகம்..

ஆனால் மிக மிக உறுதியாக சொல்லலாம் தேநீரில் மிக சிறந்தது இலங்கை தேநீர், மலையக தமிழர் உழைப்பால் உருவாகும் தேயிலை நீர்

வேறு எந்த நாட்டு தேநீரும் அதனை நெருங்க கூட முடியாது.

விசித்திரம் என்னவென்றால் அந்த தமிழர்கள் விளைவிக்கும் தேநீர் தமிழகத்தில் பெரும்பாலும் கிடைக்காது, அதுபற்றி பேசவும் மாட்டார்கள், இதுவும் ஒரு அரசியல்








No comments:

Post a Comment