Saturday, December 10, 2016

தென்கொரிய முன்னுதாரணம்....

தென்கொரியாவின் சர்ச்சைகுள்ளான அதிபர் பாராளுனம்றத்தால் பதவி பறிக்கபட்டிருக்கின்றார்


தென்கொரியாவின் பெண் அதிபர் தன் தோழியோடு சேர்ந்து பெரும் ஊழலில் ஈடுபட்டார் என சர்ச்சை வெடித்தது, கொஞ்சம் இறங்கிவந்த அதிபர் தோழியினை கைது செய்ய அனுமதித்தார்


உன் ஆட்சியில் அவளுக்கு எப்படி நீதிவழங்குவாய் என தெரியாதா? நீயும் பதவி இறங்கு என தென்கொரியா கொந்தளித்தது, பெரும் ஆர்பாட்டம்




நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த காவல், ராணுவம் மறுத்துவிட்டது, சிக்கல் அதிகாமாக தென்கொரிய பாராளுமன்றமே அதிபரை விரட்டியிருகின்றது, இனி அவர் கைது செய்யபடலாம்


தோழியும் முன்னாள் அதிபரும் இனி விசாரிக்கபடுவார்கள், தண்டனை கிடைக்கும், இவ்வளவுக்கும் இவர்கள் ஊழல் புகார் வந்து 1 வருடம் கூட இருக்காது


அது தென்கொரியா


இங்கோ இரு தோழியர் இருந்தனர், பல குற்றசாட்டும் இருந்தது , மரணத்தை தவிர இருவரையும் பிரிக்க முடியவில்லை. பெரும் ஊழல் புகார் இருந்தும் தமிழக மக்கள் அவரைத்தான் தேர்ந்தெடுத்தனர்


தென்கொரிய அதிபர் பாராளுமன்றத்தால் விரட்டபட, இங்கோ தமிழத்தின் அமைச்சர் குழு, முன்னாள் முதலமைச்சரின் தோழியினை பதவி ஏற்க வா அழைத்து கொண்டிருக்கின்றனர்


எந்த தேசம் உருப்படும்?


தென்கொரியா உலகின் எலக்ட்ரானிஸ் துறையில் முதலிடமும், கார் துறையில் 3ம் இடமும் வகிக்கின்றது


தமிழக நிலை உங்களுக்கே தெரியும், இது இன்னமும் மகா மோசமாகலாம்


தென்கொரிய மக்களை பெருமையாக பார்க்க முடிகின்றது, தமிழக செய்திகளை காண மனம் சகிக்கவில்லை



No comments:

Post a Comment