Friday, August 5, 2016

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் : உலக விளையாட்டு திருவிழா

விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் தொடங்கி விட்டது, உலகின் மொத்த கவனமும் பிரேசில் மீது திரும்பிவிட்டது

தென்னமெரிக்க நாடுகளில் ஒலிம்பிக் நடப்பது இதுவே முதல் முறை, தென் அமெரிக்க நாடுகள் வளமானவை, இயற்கை வளம் நிரம்பியவை ஆனால் சுயநல அரசுகள், குழப்பான அரசியல் போதை கும்பல் என பல சர்ச்சைகள் உண்டு

பிரேசில் அந்நாடுகளில் பெரியது, ஓரளவு பொருளாதார வளம் கொண்டது, தற்போது கொஞ்சம் சிக்கலில் தத்தளிக்கின்றது


எனினும் சமீபத்தில்தான் உலக கால்பந்து போட்டியினை நடத்தி அசத்தியது, மறுபடி ஒலிம்பிக் போட்டியினை நடத்தி அசத்துகின்றது, வளரும் நாடுதான். ஆனால் என்னாலும் முடியும் என சாதிக்கின்றது

போட்டிகளை பொறுத்தவரை அமெரிக்கா பெரும் ஒலிம்பிக் சாம்பியன், அவர்களின் எதிரிகள் ஹிட்லரின் ஜெர்மன், பின் சோவியத், இன்று சீனா என எதிரணியினர் மாறலாம்

ஆனால் அவர்கள் அவர்களாகவே இருக்கின்றனர். இந்த ஒலிம்பிக்கில் அவர்கள் முதலிடம் பெறலாம்

உசேன் போல்ட், பெல்ப்ஸ் போன்றோர் பலதள வித்தகர்கள், பாதி பதக்கம் அவர்களாலே வந்துவிடும், உலகம் அவர்களை நோக்கிகொண்டிருகின்றது. ரஷ்யர்களுக்கு தடை இருப்பதால் அவர்கள் கடும் அப்செட்

ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைப்பது பெரும் பெருமை, அவ்வகையில் இந்த வாய்ப்பு இன்று பீலே எனும் கருப்பு முத்துக்கு கிடைக்கும் என்பார்கள். பிரேசிலின் பெரும் கால்பந்து சகாப்தம் அவர்

அவரை விட்டால் அத்தேசத்தின் பெருமை மிகு வீரர்கள் சொற்பமே

இந்தியா கொடியினை அபினவ் பிடித்துசெல்வார் என்கின்றார்கள் பார்க்கலாம்.

துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போன்ற போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கின்றது

ராமனும், கர்ணனும், அர்ஜுனனும் வாழ்ந்த நாடல்லவா?, அதனால் எதிர்பார்ப்பு இப்படி செல்கின்றது என்றும் சொல்லலாம்

No comments:

Post a Comment