துருக்கி ஆட்சி கவிப்பு ஒத்திகை முயற்சியில் அமெரிக்க பிண்ணனி இல்லை, மேற்காசியவிற்கான அமெரிக்க ராணுவ தளபதி அறிவிப்பு
எல்லா நாடுகளும் ஒவ்வொரு நாட்டிற்கும் தூதர்களைத்தான் நியமிக்கும் அவர்கள்தான் பேசுவார்கள், இங்கு பார்த்தீர்களா 2 கடல் தாண்டி அமெரிக்கா ஒரு ராணுவ தளபதியினை நியமித்திருக்கின்றது, அவர் பேசுகின்றார்
அமெரிக்க ராணுவத்திற்கு எதற்கு மேற்காசிய பிரிவு என நாம் கேட்க கூடாது, ஆனால் அந்த தளபதி எமக்கு தொடர்பு இல்லை, இல்லை என சொல்லுவதுதான் ஜெயலலிதா மீதான வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கலைஞர் சொல்லும் "இல்லை" போல, அந்த "இல்லை" தான் உறுத்துகின்றது
முன்பு மேற்காசியாவில் ஐரோப்பிய ஊடுருவலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நாடு துருக்கி, ஆட்டோமேன் இஸ்லாமிய சாம்ராஜ்யம் 400 ஆண்டுகாலம் அப்படி ஐரோப்பாவினை முறிய அடித்து விரட்டி இருந்தது
பின்பு கடல்மார்க்கமாக ஆசியாவில் புகுந்தாலும், இன்று வரை துருக்கியின் அந்த வீரமிக்க அரசின் வரலாற்றினை கூட வெள்ளையர்கள் கவனமாக மறைப்பார்கள். அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என கொண்டாடுவார்களே தவிர ஆட்டோமான் சாம்ராஜ்ய மன்னர்களை பற்றி ஒரு வரி வராது
காரணம் வந்தால் ஐரோப்பியர் அடிபட்ட வரலாறு வெளிவரும்
இன்றைய துருக்கி அதிபர் வித்தியாசமாக ஆட்சி செய்கிறார், கிட்டதட்ட அன்றைய ஆட்டோமான் கொள்கைகள் அவரிடமும் உண்டு, எப்படியாவது அதனை கவிழ்த்துவிட வேண்டும் என்பது சில நாடுகளின் விருப்பம்.
அவர்களுக்கென்ன ஒன்று அவர்கள் கைபொம்மை ஆளவேண்டும் அல்லது நாடு சீரழியவேண்டும் இல்லாவிட்டால் எப்படி? ஆனால் துருக்கி மக்களிடம் தோற்றிருக்கின்றார்கள்
மொத்தத்தில் துருக்கி ஆட்சிகவிழ்ப்பு சதிக்கு யார் காரணம் எனும் உண்மை புகைகின்றது.
"அட்லாண்டிக் கடலுக்கு அங்கிருந்துகொண்டு எமது நாட்டில் தலையிட நீங்கள் யார்? என ஒரு காலத்தில் கேட்ட கர்ணல் நாசர், மாவீரன் சதாம் உசேனுக்கு பின் துருக்கி அதிபரின் குரல் இப்போது ஒலிக்கின்றது
இதே அமெரிக்க தளபதி போல, காஷ்மீருக்கான அமெரிக்க தளபதி, இலங்கைக்கான அமெரிக்க தளபதி என நிறுத்த அவர்களிடம் திட்டம் இருந்தது.
அதனை முறியடித்ததில் தான் நிற்கின்றது இந்தியா
ஜெய்ஹிந்த்.
No comments:
Post a Comment