
சென்னையில் இலங்கை தமிழ் அகதிகள் அ பேரணி, நாடு திரும்பும் கட்டணத்தை குறைக்க ஆர்ப்பாட்டம்.
அதாகபட்டது 1983ல் இருந்து தமிழகம் வந்த மக்கள் ஈழ ஏராளம், தமிழக வாழ்விலும் அடித்தட்டு வாழ்வு அதுவும் 1991க்கு பின் ஏக கெடுபிடிகள்
ஒருவழியாக அங்கு இனி உயிர்வாழ அச்சம் இல்லை எனும் நிலையில் பலர் திரும்பதொடங்கினர், இதில் சிக்கல் உருவாகியுள்ளது.
அகதி முகாமில் தங்கி இருந்தால் அவர்கள் வந்தவுடன் பதிவு செய்த அடையாள அட்டை இன்ன பிற ஆவணங்கள் இருக்கும், அவர்கள் திரும்பினால் சிக்கல் இல்லை, ஏராளமானோர் திரும்பிகொண்டிருக்கின்றார்கள்
ஆனால் முகாமிற்கு வெளியே தங்கினால் ஒரு அடையாளமும் இருக்காது, இன்று ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் எல்லாம் அந்த வகையராக்கள், முகாமில் பதியாமல் ஜாலியாக சுற்றியவர்கள்
உலகில் எந்த நாட்டில் இப்படி அடுத்தநாட்டுக்காரன் சுற்ற முடியும்? ஈழமக்களை இந்தியா கொடுமைபடுத்தியது இப்படித்தான்
அந்த வெளியில் வசித்த அகதிகள் நாடு திரும்பும்பொழுது இந்தியா தன் சட்டபடி ஆண்டுக்கு 4 ஆயிரம் என கணக்கிட்டு பெரும்தொகை சொல்கிறதாம், 30 வருடத்திற்கு நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். அதனை குறைக்க ஆர்பாட்டமாம்
எப்படியும் கொஞ்சம் தொகை அபராதமாக கட்டினாலன்றி செல்லமுடியாது அல்லாவிட்டால் குடியுரிமை கொடுங்கள் இங்கே இருகின்றோம் என்கிறார்கள் அவர்கள்
போராட தொடங்கிவிட்டார்கள், அபராத குறைப்பு அல்லது குடியுரிமை வேண்டுமாம்
இந்த போராட்டங்களில் ஈழதமிழரை காப்பாற்றுவதற்காகவே தமிழகத்தில் அவதரித்திருக்கும் நெடுமாறன், வைகோ, சீமான், திருமுருகன் இவர்களை எல்லாம் காணவில்லை
ஐரோப்பாவிலிருந்து ஈழதமிழரிடம் இல்லாத மோசடிகளை சொல்லி பணம் பறித்த கட்சிக்காரரனா சீமான், வைகோவினை எல்லாம் காணவே இல்லை
நியாயமாய் குரலெழுப்பி அபராதத்தை குறைத்து, அந்த அபராதத்தை ஐரோப்பாவில் வசூலான பணத்தில் கொடுத்து அந்த ஈழதமிழருக்கு உதவலாம் அல்லவா?
செய்யமாட்டார்கள், அவர்கள் அப்படித்தான்
கடல்கடந்து இலங்கையில் இருக்கும் தமிழருக்கு ஒப்பாரி வைப்பார்களே தவிர, கால்மாட்டில் கதறும் தொப்புள்கொடிகளை எல்லாம் தள்ளிவிட்டு கண்களை மூடிகொள்வார்கள், சீ..சீ ஐந்து பைசா தேறாத விஷயம் என ஒதுங்கிகொள்வார்கள்
இனி என்ன நடக்கும்?
இந்தியா இதனை இலங்கையுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து அனுப்பி வைக்கும், அதாவது இந்திய அரசுதான் உதவபோகின்றது
இதுதான் யதார்த்தம், என்னதான் கத்தினாலும் முழங்கினாலும், சந்தடி சாக்கில் பாக்கெட்டினை நிரப்பி ஒதுங்கிகொண்டாலும் அம்மக்களுக்கு உதவும் நிலையில் இருப்பது இந்திய அரசேதான், இனி உதவபோவது மோடி அரசுதான்.
நெடுமாறன், சீமான், வைகோ, திருமுருகன் முகமூடிகள் எல்லாம் டர்ரென கிழியும் நேரமிது
சரி இப்படி ஒரு போராட்டம் நடந்தது யாருக்காவது தமிழகத்தில் தெரியுமா? சென்னையில்தான் நடந்திருகின்றது
இதுதான் தமிழக ஊடகங்களும் அது கொடுக்கும் ஈழதமிழர் செய்திகளும்
No comments:
Post a Comment