
லீ குவான் யூவினை கொண்டாடி விட்டு, சிங்கப்பூரில் புலிக்கொடி பிடித்தால் கண்டுகொள்ளமாட்டான் என கருதிவிட்டார்கள் போல,
மலேசியா ஏற்கனவே புலி அபிமானிகளை தேடி பிடித்து இலங்கைக்கு அனுப்புகின்றது, ஆனானபட்ட கேபி வந்தபொழுதே பிடித்து ராஜபக்சேக்கு பார்சல் செய்தது
ஈழதமிழர்கள் மேல் அனுதாபம் உள்ள நாடுதான் சிங்கப்பூர் ஆனால் எது போராட்டம் எது தீவிரவாதம், எதனை நாட்டில் அனுமதிக்கவேண்டும் என்பதில் அவர்கள் கடும் நுட்பமானவர்கள்
சரி, 5 தமிழரை தமிழருக்காக உழைக்க கிளம்பிய தமிழரை விரட்டி அடித்திருக்கின்றது சிங்கப்பூர்
அங்கிள் சைமனோ அல்லது அவரின் அடிப்பொடிகளோ ஏய் சிங்கள அரசின் கைக்கூலியான சிங்கப்பூரே, உன்னை கண்டிக்கின்றேன் என பொங்கட்டும் பார்க்கலாம்
செய்யமாட்டார்கள், செய்தால் சிங்கப்பூர் வாழ் தமிழகத்தார் ஓடிவந்தே வாயில் குத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியும்
No comments:
Post a Comment