Thursday, November 10, 2016

ஏய் 1000 ரூபாய் எடு, 500 எடு கணக்கினை காட்டு!!!

இந்தியா அல்லோலபட்டு கொண்டிருக்கின்றது, மக்கள் அல்லாடிகொண்டிருக்கின்றார்கள்,தமிழகமும் பணபரிவர்த்தனை பிரச்சினையில் தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது,


ராஜபக்சே சென்னை வந்து, தன் கொச்சை தமிழில் "தும்பி இந்தே ச்சைமேன் வூடு, விய்ய்கோ வூடு எங்கூ இர்க்க்கு" என கேட்டால் கூட பிரச்சினை இல்லை, அதுவும் நாம் தமிழர் அமைப்பினரிடம் கேட்டால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள், அவ்வளவு பரபரப்பு


கனிமொழியும் ராசாவும் அந்த 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயினை எப்படி மாற்றபோகின்றார்கள் என பார்க்க ஆவலாய் இருக்கின்றதாம் திமுகவின் எதிரி கூட்டம். எப்படி இருக்கின்றது?


பொதுவாக கருப்புபணம் வைத்திருப்பவர்கள் தேவைக்கு அதிகமாகவே வைத்திருப்பர், சிக்கிகொள்ளும் நிலை வந்தால் அதனை எரிக்கவோ, துண்டு துண்டாய் வெட்டி வீசவோ அல்லது ஆற்றில் விடவோ அசரமாட்டார்கள்


எத்தனை கொள்ளைகளில் உண்மை கணக்கினை பணக்காரர்கள் சொல்லி இருக்கின்றார்கள்? கொலை நடந்து கொள்ளை நடந்தால் கூட கொள்ளை செய்தி வராமல் பார்த்துகொள்வார்கள். கையோடு வெட்டபட்ட சூட்கேஸ் கொள்ளையில் கூட போலிசுக்கு செல்லாமல் வீட்டில் வந்து ஏதோ சண்டை என சொல்லி போலிபதிவு செய்பவர்கள் உண்டு, காரணம் பணம் என்றால் கணக்கு காட்ட வேண்டி வரும்


அப்படிபட்ட இந்தியா இது


சினிமாவும், ரியல் எஸ்டேட்டும் கிரிக்கெட் கிளப்புகளும் இன்று கருப்பினை வெள்ளையாக்கும் வழிமுறைகள், இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு


இதோ ஆயிரம் , ஐநூறு செல்லாது என அறிவித்தாகிவிட்டது, இனி கருப்பு பணம் பதுக்குவோர் என்ன செய்வார்கள்?


பிரச்சினையே இல்லை


தங்கத்திலோ அல்லது அமெரிக்க டாலர், யூரோ என வாங்கி குவித்துவிட்டால் போதும்


இனி அவ்வழிக்கு இந்திய பணாநாயகம் திரும்பலாம், அந்நிய பணத்தினை வாங்கும்பொழுது நிச்சயம் அவைகளின் மதிப்பு கூடும், இந்திய பணமதிப்பு இன்னும் வீழும்


கருப்பு பணத்தினைஒழிக்க ஆயிரம் வழி உண்டு, இப்படி மக்களை போட்டு குழப்புவது அல்ல‌


சும்மா 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டால் இந்திய பொருளாதார சரிவு சந்தி சிரிக்கும், அதனால் ஒரு நாடகம் ஆடி என்னமோ செய்கின்றார்கள், அந்த 2000 ரூபாய் நோட்டிற்கு சிலர் விளக்கம் கொடுக்க்கின்றான் பாருங்கள், உச்சகட்ட காமெடி


பூமிக்கு கீழ் 10 கிமீட்டரில் புதைத்து வைத்தாலும் அது காட்டி கொடுக்குமாம், அண்டார்டிக்காவில் பதுக்கி வைத்தாலும், அமெரிக்காவில் பதுக்கி வைத்தாலும் காட்டுமாம்


அதனை சிங்கப்பூர் டாலராக மாற்றி மோடி கண்முன்னே டிங் டிங் என காட்டினால் மோடியால் என்ன செய்யமுடியும் என கேட்க கூடாது, சண்டைக்கு வந்துவிடுவார்கள்


இவர்களிடம் கேளுங்கள், வெளிநாட்டு கரன்சியாக கருப்பு பணத்தினை குவித்தால் அமெரிக்க அதிபரிடம் சொல்லி மோடி அதனை செல்லாது என அறிவிப்பார் என சிரிக்காமல் சொல்வார்கள்.


இந்தியாவில் கனத்த அமைதி, சிலர் எச்சரிக்கின்றனர். சில மேதைகள் விரைவில் எல்லோரும் கத்துவர் நாம் ஏன் சொல்லவேண்டும் என அமைதிகாக்கின்றனர்


அரசியல்வாதிகள் நிறைய குவித்து வைத்திருப்பதால் வாய்திறக்க 4 நாள் ஆகும்


இதில் ஒரு கோமாளி மட்டும் முந்தியிருக்கின்றார், மனிதர் இப்பொழுதெல்லாம் என்ன செய்கிறோம் என தடுமாறுகின்றார், ஆனால் வழக்கம் போல வாழ்த்தில் முந்திகொண்டார்


அவர் ரஜினிகாந்த். புதிய இந்தியா பிறந்ததாக வாழ்த்தினாராம்


இவரின் இப்போதைய படமான ரோபோ. 2 வின் பட்ஜெட் என்ன? இவர் வாங்கிய சம்பளம் என்ன? அதற்கு வரி என்ன? இயக்குநரின் சம்பள்ம் + வரி என்ன?


தயாரிப்பாளரின் வருமானம் என்ன? அவர் கட்டிய வரி என்ன?


இதனை எல்லாம் பற்றி நாம் ரஜினியிடம் கேட்க கூடாது


பழைய நகைச்சுவை காட்சி நினைவுக்கு வருகின்றது, ஏதோ ஒரு சினிமாவின் சண்டை காட்சியில் ஹீரோ வில்லனையும், அவன் ஆட்களையும் போட்டு சாத்த செந்ந்தில் ஒரு வயதான கிழவனை போட்டு அடிப்பார்


அந்த கிழவர் பயந்து கேட்பார் "என்னை ஏன்பா அடிக்கிற?" செந்தில் சொல்வார் "அவனுகள அடிச்சா கொன்னுறுவானுக எனக்கு நீதான் கிடைச்ச வாங்கிக்க.."


அப்படி விஜய் மல்லையாவினை விட்டுவிட்டு, அம்பானி அதானி இன்னும் பல முதலைகளை விட்டுவிட்டு, 100 கோடியில் பங்களா கட்டும் பாலிவுட் நடிகைகளை விட்டுவிட்டு, கிரிக்கெட் பணமழை காடுகளை விட்டுவிட்டு, இன்னும் யாரையெல்லாமோ விட்டுவிட்டு


அப்பாவி ஜனங்களை பிடித்து ஏய் 1000 ரூபாய் எடு, 500 எடு கணக்கினை காட்டு என மிரட்டிகொண்டிருக்கின்றது இந்த அரசு


அடுத்து என்ன செய்யபோகின்றார்களோ


ஏதும் ஒரு நள்ளிரவில்தான் தெரியும், நிம்மதியாக‌ உறங்க கூட விடாத அரசு இது. பார்க்கலாம்


இந்த கருப்பு பணம், ஊழல் என்றவுடன் அவர் நினைவுதான் வருகின்றது, அப்படி அவரிடம் கொட்டி கிடக்கின்றது என சொல்லி கடிதம் எழுதி ரெய்டுக்கு ஏற்பாடாயிற்று


வந்தவர் அந்நாளைய சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நவீன அரிச்சந்திரன், பெயர் சர்க்காரியா


அவரால் முடிந்த அளவு பார்த்தார், வருமானங்களை பார்த்தார், செலவுகளை பார்த்தார் தலையினை பிய்த்துகொண்டார், ஒரு பக்கம் வரவு என்றால் இன்னொரு பக்கம் நாட்டுகோட்டை செட்டியாருக்கு வட்டி கட்டி கந்தலான கணக்கு


ஒரு பிழை இல்லை, ஒரு சிக்கல் இல்லை, ஆனால் மனிதருக்கு ஏதோ புரிந்தது


இருக்கு ஆனா இல்லை என சொல்லிகொண்டே இது விஞ்ஞான ஊழல் என எதனையோ சொன்னார். விஞ்ஞானம் என்றால் ஆதாரம் முக்கியம் அல்லவா? காட்டுங்கள் என்றால் முடியவில்லை


மனிதர் தாடியினை பிய்த்துவிட்டு தலைதெரிக்க ஓடினார்.


அப்படி இம்மாதிரியான விஷயங்களை எப்படி அணுகவேண்டும் என்பதில் பெரும் அகராதி எழுதியவர் கலைஞர் கருணாநிதி.


அவரை ஓரளவு படித்தால் போதும், மோடி போல ஆயிரம் பேர் வந்தாலும், அசைக்கமுடியாது, அடித்து விளையாடலாம்.


இங்கிருக்கும் ஓட்டைகள் அப்படி.







கொசுறு 

பலபேர் பிச்சைக்காரர்களை தேடி செல்கின்றார்களாம்,


சிலர் கோயில் உண்டியலை உடைக்க சொல்லி கோரிக்கை வைக்கின்றார்களாம்


இந்திய வரலாற்றில் முதல்முறையாக மக்கள் 1000 500 என நோட்டுக்களை தூக்கிகொண்டு பிச்சைக்காரர்களை தேடி அலையும் விசித்திரம் நடக்கின்றது




பிச்சைக்காரர்கள் ஓட, மக்கள் துரத்துகின்றார்களாம்







 

No comments:

Post a Comment