Thursday, November 10, 2016

செய்திச் சிதறல்கள்

எல்லையில் தினமும் நூற்றுகணக்கான ஊடுருவல் நடக்கின்றது, மிக சரியான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் எதிரிகளை ஓடவிட்டு இருந்த இடத்திலிருந்தே அடிக்கலாம்

இத்தனை சாவுகள் இந்திய தரப்பில் நடப்பதை தடுக்கலாம்

இதில் எல்லாம் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தாத இந்தியா, புதிதாக 2000 ரூபாய் நோட்டில் நேனொ தொழில்நநுட்பத்தை வைத்திருக்கின்றதாம், அந்த ரூபாயினை நிலாவில் வைத்தாலும் சென்று எடுத்துகொள்ளலாமாம்


நிலா எல்லாம் வேண்டாம், பக்கத்து நாட்டிலிருக்கும் தாவுத் இப்ராஹிமை தூக்குங்கள் பார்க்கலாம்

வேண்டாம் எதிரிநாடு, சரி லண்டனில் இருக்கும் விஜய்மல்லையாவினை கொண்டுவந்துவிடுங்கள் பார்க்கலாம்

விமானபடை விமானம் வங்ககடலில் காணாமல் போயிற்று, இன்னும் எத்தனையோ தொழில்நுட்ப தடங்கல் உண்டு,

மாநில முதல்வருக்கே மருத்துவ வசதிக்கு அடுத்தநாட்டு மருத்துவர் தனியார் மருத்துவமனைக்கு வரும் தேசமிது

இதில் ரூபாய் நோட்டில் நவீன வசதியாம்

இவர்கள் காதினை திருகி கேட்கவேண்டும், இவ்வளவு பாதுகாப்பாக ஒரு 2000 ரூபாய் நோட்டினை உருவாக்க, செலவு எவ்வளவு ஆகும்? குறைந்தபட்சம் 1 லட்சம் ஆகாதா?

லட்சகணக்கில் செலவு செய்து அடிக்கும் நோட்டின் மதிப்பு வெறும் 2 ஆயிரமா? நாடு தாங்குமா?

மூளையினை கழற்றி வைத்துவிட்டு ஒரு கும்பல் மோடி பின்னால் செல்கிறது, செல்லட்டும்

சரி ஒரு வழியாக டிரம்ப் அதிபராகிவிட்டார், இனி என்ன செய்வார்?

அதே தான் மோடி போலவே விளம்பரம், வெற்று விளம்பரம்

இனி இருவரும் சந்திக்கும் பொழுது ஒரு நமுட்டு சிரிப்போடு கை குலுக்குவார்கள், அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்துகொள்வது பெரிய விஷயமல்ல‌





கொசுறு


கரன்ஸி நோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது –சீமான் கண்டனம்


ஆம் ஒழியாது, ஆனால் இங்கே கிடந்து கத்துவதால் அங்கே ஈழம் கிடைக்கும் என்பதை மட்டும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


கரன்சி பிரச்சினையில் அங்கிளுக்கு என்ன சிக்கல்? ஓஹோ, உலகெல்லாம் இருந்து நடக்கும் வசூல் பாதிக்கபடுமல்லவா?




பொறு மகனே, மோடி இப்பொழுதுதான் களத்தில் இறங்கி இருக்கின்றார், கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி அறிவிப்புக்களை சொல்லி பல்ஸ் பார்க்கின்றார்


இதோ பார்த்தீரா? யாரும் ரூபாய் நோட்டு பிரச்சினையினை கண்டிக்கவில்லை, போராடவில்லை, சயனைடு கடிக்கவில்லை, அருகில் இருப்பவனை கொளுத்தவில்லை


அதாவது இது நாட்டிற்கு தேவை என எல்லோருக்கும் தெரிகின்றது, அமைதி காக்கின்றார்கள், ஒரு எதிர்ப்பு இருக்கின்றது?


இனி ஒருநாள் தேச விரோதிகள், அந்நிய நாட்டு தீவிரவாதிகொடி பிடிப்பவனை உள்ளே தள்ள நிச்சயமாக மோடி ஒரு உத்தரவு போடுவார், முதல் ஆளாக கதவு இவருக்குத்தான் திறக்கும்


தமிழகத்தில் யார் கத்துகின்றார்கள் என பார்க்கலாம்


சும்மா அது கண்டனம், இது அப்படி என இல்லாத பொய் சொல்லி குதிக்க அவர் நியூஸ் 7 டிவியோ அல்லது ரங்கராஜ் பாண்டேயோ அல்ல‌


மோடி, ஒரு முடிவோடு செயல்பட்டுகொண்டிருக்கும் மோடி


எதற்கும் கொஞ்சம் ஈழ கற்பனை கதைகளை அன்னார் சிந்திது வைத்துகொள்வது நல்லது


கூட இருக்கபோகும் சிறை கைதிகளுக்கு பொழுதுபோக வேறு என்ன இருக்கின்றது?






கொசுறு


அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தமிழக வம்சாவளி பெண்கள் தேர்வு


விரைவில் தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும், அமெரிக்காவினை வெள்ளையனே ஆளவேண்டும், தன் இனத்திற்கு அந்த இனத்துகாரனே தலைவனாக இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்து அங்கிள் சைமன் அந்த 3 தமிழக வம்சாவளியினையும் ராஜினாமா செய்ய சொல்வார் என எதிர்பார்ப்போம்


சென்று வாழும் உரிமை உங்களுக்கு உண்டு, ஆளும் உரிமை வெள்ளையனுக்கே உண்டு என விரைவில் பேக்ஸ் அனுப்புவார் பாருங்கள்.




அப்படி ராஜினாமா செய்யாவிட்டால் 3 பேரும் தமிழின‌ துரோகி, அடிவருடி என பட்டம் கட்டி அழைக்கபடுவர்






கொசுறு


தென் மாவட்டங்களில் பனை ஏறுபவர்கள், ஆடுகள் வளர்ப்போர் தங்கள் வீடுகளில் ரூபாய் பதினைந்து லட்சம் வைத்திருப்பார்கள் - பீட்டர் அல்போன்ஸ்


பனை ஏறுபவன் வீட்டில் பாளை சீவும் அரிவாளும், ஆடு வளர்ப்பவன் வீட்டில் தளை வெட்டும் கத்தியும் உண்டு, அங்கு சென்று உங்கள் வீட்டில் 15 லட்சம் இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் சொன்னார் என்றால் வீபரீதமாகிவிடும், ராம்குமார் நிலைதான்.


15 லட்சம் இருந்தால் அவன் ஏன் அந்தரத்தில் பனைமரத்தில் தொங்கிகொண்டிருக்கின்றான்?




அது எப்படி அங்கே பனைஏறுபவர் வீட்டில் 15 லட்சம் இருக்கும் என இவரால் மிக சரியாக சொல்லமுடிகின்றது?


ஏதும் உள்குத்து இருக்குமோ??






கொசுறு


இந்திய- இலங்கை ராணுவங்களுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி, இலங்கை அம்பேபுஸ்சாவில் உள்ள சிங்கப்படை பிரிவு தலைமையகத்தில் நடைறுகின்றது


1000 ரூபாயினை அவசரமாக விருகம்பாக்கம் வங்கியில் சீமானும், கலிங்கபட்டி வங்கியில் வைகோவும், சில சென்னை புறநகர் வங்கிகளில் திராவிட அல்ட்ராசிட்டிகளும் மாற்றிகொண்டிருப்பதால் மகா பிசி


கூட வருபவர்களுக்கு சில்லறையாக பணம் கொடுக்கமுடியாத சிக்கல், கவுண்டமணி ஸ்டைலில் "வெரி டெலிகேட் பொசிஷன்"




பணபுழக்கம் சீரானதும் அங்கிள் சீறி கிளம்புவார் பாருங்கள்,


ஆனால் அதற்கு பயிற்சிமுடிந்து இந்திய ராணுவம் திரும்பிவிட கூடாதே??






கொசுறு


புதிதாக வந்திருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கிகொண்டு, வேறு கட்சிக்கு வாக்களித்தால் செயற்கைகோள் மூலம் மிக எளிதாக கண்டுபிடிக்கலாமாம்


போலீசார் மாமூல் வாங்கினால் அதுவே ஐ,ஜிக்கு தகவல் அனுப்புமாம்.


லஞ்சமாக கொடுக்கும் போது இது லஞ்சபணம் என அதுவே லஞ்ச ஒழிப்பு இலாக்காவிற்கு செயற்கைகோள் மூலம் தகவல் கொடுக்குமாம்




கள்ள நோட்டுக்களுடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்தால் தானகவே செயற்கைகோள் வழியாக காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லுமாம்


கோயில் காணிக்கை பெட்டியில் போட்டால் மொத்த காணிக்கையினையும் எண்ணி வங்கிக்கே அனுப்புமாம், இனி வேளாங்கண்ணி ஆலய காணிக்கை கணக்கினை மோடி டெல்லியில் இருந்தே பார்ப்பாராம்


இன்னும் ஏராளமான விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றது.


விரைவில் நாசா, பெண்டகன், ஐஎஸ் இயக்கம், அல்கய்தா, ரஷ்ய விஞ்ஞானிகள், சீனாவின் அறிவியல் கழகம் என எல்லோரும் 2 ஆயிரம் ரூபாயினை கடத்திகொண்டுபோய் ஆராயபோகின்றார்களாம்.


கரன்சியினை மாற்றிதர சொன்னால், ஷங்கர் படத்திற்கு கதை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.







கொசுறு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா? : மோடிக்கு திருமாவளவன் கண்டனம்

இதே கேள்வியினை ஈழத்தில் பிரபாகரனிடம் நீ என்ன மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட தலைவனா? இல்லை ஈழ மக்கள் ராணுவத்தின் தளபதியா? உனக்கு இந்த அதிகாரம் கொடுத்தது யார் என இவர் கேட்டாரா?

அந்த வைகோவிடம் இருந்து வெளிவரமுடியாத இவர் கட்சியின் பெயர் "விடுதலை சிறுத்தை" என்பதுதான் மகா காமெடி


இதில் இவர் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கின்றாராம்

இம்மாதிரியான அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க பிரதமருக்கு அதிகாரம் உண்டு, ஒரே நாளில் நாட்டை புரட்டிபோட அந்த பதவியினால் முடியும்

மோடி அதனை செயல்படுத்தி பார்க்கிறார்,

அவ்வளவு ஏன்? நாளையே அந்நிய தீவிரவாதி பிரபாகரனை ஆதரித்த வழக்கு என இவரையும் சீமான் வைகோ கூட்டத்தையும் பின் மண்டையில் தட்டி இழுத்து செல்ல வெகுநேரம் ஆகாது

ஒருவேளை அதற்கு அஞ்சிதான் இப்பொழுதே கேள்வி கேட்கின்றாரோ என்னமோ?






No comments:

Post a Comment