Tuesday, November 29, 2016

கச்சதீவு அந்தோணியார் கோவில்



Image may contain: one or more people


கச்சதீவு அந்தோணியார் கோவிலில் தமிழக உரிமை புறக்கணிக்க படுகின்றது பெரும் சர்ச்சை


அந்தோணியார் என்பவர் போர்ச்சுக்கலில் வாழ்ந்த கிறிஸ்தவ மகான், ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அக்கால போர்த்துகீசியர் எல்லாம் அவரையே தங்கள் கடல் பயண பாதுகாப்பு தெய்வமாக கொண்டிருந்தனர்


வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு பத்திரமாக வந்தபின் அந்த நம்பிக்கை கூடிற்று, தமிழக கடற்பரப்பிலும் வட இலங்கையிலும் போர்த்துகீசியர் ஆண்ட காலத்தில் அந்த நம்பிக்கை இங்கும் வந்தது, கடலோடும் மீணவர்களின் தெய்வமாக மாறிப்போனார் அந்தோணியார்


போர்த்துகீசியர் சென்றபின்னும் இலங்கை, தமிழ் மீணவர்களும் அவரை மறக்கவில்லை, அன்றைய கச்சத்தீவு சர்ச்சை இல்லா பகுதி, ஆனால் ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான பகுதி. அன்று இலங்கை, தமிழக மீணவர்களிடையே பெரும் சிக்கல் எல்லாம் இல்லை


அப்பொழுது தமிழக மீணவர்கள் ஓய்வெடுக்கும் கச்சதீவில் தமிழக மீணவர்கள் கட்டியதுதான் அந்த அந்தோணியார் கோயில், ஆண்டு தோறும் இருநாட்டு மீணவர்களும் கூடி கொண்டாடுவார்கள்.


மக்கள் வாழ தகுதியில்லா கச்சதீவின் ஒரே கொண்டாட்டம் இந்த திருவிழா மட்டுமே


பின் கச்சத்தீவு கைமாறினாலும் ஒப்பந்தபடி தமிழக மீணவர்கள் வலை உலர்த்தி ஓய்வெடுக்கவும், அந்தோணியார் ஆலயத்தில் வழிபடவும் வழிவகை உண்டு


பின்னாளில் புலிகள் அழிச்சாட்டியத்தில் கச்சதீவு பெரும் சர்ச்சையான பகுதியாக மாற அந்தோணியார் ஆலய‌ திருவிழா கலையிழந்தது, புலிகளின் கடத்தல் நடைபெறுமிடம் கடல் என்பதால் இலங்கை கடற்படையும் அச்சத்தில் பல கொடூரங்களை நிகழ்த்திகொண்டிருந்தது


இன்று புலிகள் இல்லா காலம், மறுபடி அந்தோணியார் ஆலயம் சீரமைக்கபட்டு திருவிழா கொண்டாட்டத்திற்கு தயாராகின்றது, சிக்கல் என்னவென்றால் தமிழக மீணவர்களிடம் ஒரு வார்த்தையும் அவர்கள் சொல்லவில்லை, நன்கொடை கூட கேட்கவில்லையாம்


ஏற்கனவே அங்கு வலை உலர்த்தும் உரிமை பறிக்கபட்ட நிலையில், அந்தோணியார் ஆலயம் மீதான உரிமையும் போகிறதா? என ராமேஸ்வரம் பக்கம் கடும் கொந்தளிப்பு நிலவுகின்றது


மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கைகள் பறக்கின்றன‌


மத்திய அரசோ 100. 500 என ஏக சிக்கலில் இருக்கின்றது, இது வேறுமாதிரியான சிக்கல்


சும்மாவே கச்சதீவு பெரும் சர்ச்சை, இனி கிறிஸ்தவ ஆலயம் என்பதால் பாஜக மதவெறி அரசு மவுனம் காக்கின்றதா என கிளம்புவார்கள்


நிச்சயமாக மோடி அரசு தலையிட்டு சில காரியங்களை செய்து நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்ட அரசு, எம்மதமாயினும் காப்போம் என அழகாக அரசியல் செய்யலாம் தான்.


கச்சதீவில் தமிழர் உரிமையினை மீட்டு, தமிழிசை சென்று மெழுவர்த்த்தி ஏந்தி வழிபட்டால் எப்படி இருக்கும்?


ஆனால் இம்மாதிரியான அரசியல் எல்லாம் தமிழக பாஜகவிற்கு தெரியாது, ஒரு மாதிரியான அசமந்த கட்சி அது


இந்த கச்சதீவு சிக்கலுக்கு முதல் காரணம் யார் தெரியுமா?


இந்திராவோ, பண்டாரநாயகவோ, புலிகளொ அல்ல‌


முதலில் ராமர், அங்கு சென்றதே சென்றார், கச்சதீவில் தன் சேனைகளுக்கு ஒரு வியூகம் சொன்னால்தான் என்ன? அந்த அனுமார்தான் சஞ்சீவி மலையினை கொண்டு செல்லும்பொழுது அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு சென்றால் என்ன?


விட்டுவிடுவார்களா கங்கை கரை சாமியார் கூட்டம், ஆடி தீர்ப்பார்கள்


அடுத்து அந்த விவேகானந்தர்


மகான் அமெரிக்க சுற்றுபயணத்தை முடித்துகொண்டு கொழும்பு வழியாக பாம்பனுக்கு வரும்போது, ஒரு 10 நிமிடம் கச்சதீவில் தியானம் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?


விவேகானந்தர் மண்டபம், படகு போக்குவரத்து என பின்னியிருக்க மாட்டோமா? சிங்களன் கைக்கு அது சென்றிருக்கும்?


என்ன செய்ய மகான் விவேகானந்தர் மண்டபம் அமையவில்லையே.


இந்த இந்து தெய்வங்களும் வேறுமாதிரியானவை, அது காடுகள் மலைகள் ஆற்றங்கரைகளில் ஹாயாக அமர்ந்து அருள்பாவிக்குமே அன்றி, கடல்தாண்டி தீவுகளில் எந்த தெய்வமும் கோயில் கேட்கவில்லை


இத்தனை ஆயிரம் தெய்வங்களில் ஒன்றாவது கச்சதீவில் கோயில் கேட்டு 10 கிடா கேட்டிருந்தால் சிங்களன் அப்பக்கம் வரமுடியுமா?


கடல் ராசா, கடல் அன்னை என கடலுக்கு பெயரிட்ட இந்துமதம் கடலுக்கும் கடல்பயணத்திற்கும் ஒரு தெய்வத்தை கைகாட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படி ஒரு இந்து ஆலயம் இருந்தால் , நிலை இவ்வளவு சிக்கலாகியிருக்குமா?


அவ்வளவு ஏன் இந்த திராவிட பெருந்தலைகளின் நினைவிடமாவது அங்கு அமைந்து தொலைத்திருக்க கூடாதா, (நிச்சயம் அவர்களை அங்குதான் வைத்திருக்க வேண்டும்)


மெரீனா இன்னும் நன்றாக இருந்திருக்கும், மெரினா செல்லும் பலருக்கு அந்த கல்லறைகளை பார்த்து ரத்தகொதிப்பு வராமால் போயிருக்கும்


இதெல்லாம் அமையாமல் அந்தோணியார் ஆலயம் மட்டும் அமைந்துவிட்டதுதான் சிக்கல்


ஒரு இந்து ஆலயமோ, விவேகானந்தர் நினைவு காரியங்களோ, அனுமார் பாதமோ இருந்திருந்தால் நடப்பதே வேறு


இந்நாட்டில் மதங்களும், ஜாதிகளும் பெறும் வெற்றியினை இன உணர்வும், உரிமை போராட்டங்களும் பெற்றுவிட முடியாது


கச்சதீவு அதில்தான் சிக்கிகொண்டது.













No comments:

Post a Comment