Tuesday, November 15, 2016

பண மாற்றம் ...

இனி பணம் மாற்ற வந்தால் கையில் மை'- மத்திய அரசு அறிவிப்பு


சும்மாவே அழுதுகொண்டிருக்கின்றார்கள், இதில் மை வேறு பூசுவார்களாம், சோலி சுத்தம்


வாக்குசாவடியில் மை வைக்கும் பொழுது இந்த வங்கி இம்சை நினைவுக்கு வந்து எவனாவது மறுபடி வாக்களிப்பானா?




கொஞ்சம் யோசித்திருக்கலாம்,


இதற்கு பதிலாக ஹேர் டை அடித்தல், கண்களில் மை பூசிவிடுதல் போன்ற மக்கட்பணிகளில் ஈடுபட்டாலவது மக்களுக்கு ஒரு திருப்தி இருக்கும்







எந்த வங்கி வாசலில் ஊழல்வாதிகள் நிற்கிறார்கள்? எந்தப் பாமர மக்கள் வரவேற்கிறார்கள்?  கருப்பு பணம் மீட்கபட்டதா? : சீமான் கண்டனம்


விசா இல்லாமல் அந்நிய நாட்டு தீவிரவாதியினை சந்திக்க சென்றவனும், காஷ்மீர் தீவிரவாத தலைவனை அழைத்து மாநாடு போட்டவன் எல்லாம் மோடிக்கு கண்டனம் தெரிவிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?


இப்பொழுது அன்னாருக்கு என்ன பிரச்சினை? வெளிநாட்டு வசூலில் நிச்சயம் சிக்கல் வரும். பொழப்பு கெடும் போது கத்தத்தான் செய்வார்கள், கத்தட்டும்





சரி, அன்னாருக்கு இந்தியா பிடிக்காது, இந்திய அமைப்பு பிடிக்காது, இந்திய பணம் கூட பிடிக்காது, டாலரும் யூரோவும்தான் விருப்பம்

பின் இந்திய கருப்புபணம் மீட்பின் அவசியம் இவருக்கு ஏன் வந்தது? இந்தியா நாசமாக போகவேண்டும் என்பதுதானே இவர் விருப்பம், பின்னர் ஏன் புலம்புகின்றார்?

அப்படியானால் மோடியின் திட்டம் நாட்டிற்கு ஏதோ நல்லது செய்கிறது என அங்கிளுக்கு புரிந்துவிட்டது என பொருள்.





எவனோ பதுக்கிய கருப்பு பணத்திற்கு நான் ஏன் வங்கி வரிசையில் நிற்கவேண்டும் : சில்லறை போராளிகள் சீற்றம்


எவனோ பாதுகாப்பாக வரிசையில் நிற்க எல்லையில் ஏன் ராணுவம் நிற்கவேண்டும், எவனோ பாதுகாப்பாக வாழ போலிஸ் ஏன் ரோந்து வரவேண்டும்


எவனோ பிள்ளைபெற்று போட அரசு ஏன் அவர்கள் பள்ளிகள் நடத்தவேண்டும்?




எவன் வீட்டிலோ விளக்கு எரிய அரசு ஏன் மின்சாரம் கொடுக்கவேண்டும்.


எவனோ எப்படியும் போக, அரசு ஏன் சில விஷயங்களுக்கு மானியம் வழங்கவேண்டும்??


எவனோ படித்து பட்டம் வாங்க அரசு ஏன் பல்கலைகழகம் நடத்தவேண்டும்?
எவனோ பசியாற ஏன் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவேண்டும்?


எவனோ கார் ஓட்ட அரசு ஏன் ரோடு போடவேண்டும்?


இப்படி எல்லாம் கேட்டுவிட்டு அந்த சில்லறை போராளிகளை பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தவேண்டும்,








No comments:

Post a Comment